*. செமிடிக் *. மேற்கு *. மத்திய *. வடமேற்கு *. கானானிய *.எபிரேயம்
மொழிக் குறியீடுகள் ISO 639-1 - he ISO 639-2 - heb ISO 639-3 - heb
எபிரேயம்(עִבְרִית அல்லது עברית, இவ்ரித்) ஆபிரிக்க-ஆசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த ஒரு செமிடிக் மொழியாகும். இது 7 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. இது இசுரேல் நாட்டின் -அரபுடன் சேர்த்து- ஆட்சி மொழியாகும். இசுரேலின் பெரும் பான்மையான மக்களான யூதர்களால் பேசப்படுகிறது. ஏறத்தாழ கிபி 2ம் நூற்றாண்டளவில் வழக்கற்று இருந்த எபிரேய மொழி மீண்டும் கிபி 19ம் நூற்றாண்டில் ஹஸ்கலா விழிப்புணர்வு (Haskalah) இயக்கம் வழி, மொழியியல் அறிஞர் எலியேசர் பென்-யெஃகுடா (Eliezer Ben-Yehuda) வின் பெரு முயற்சியால் மீண்டும் வழக்குக்கு வந்துள்ளது.
எபிரேய அரிச்சுவடி
வகைஅப்ஜாட் (எபிரேயம், அரமேயம், யூதேய-அராபி)
காலக் கட்டம் கி.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை
மூல முறைகள் எகிப்திய குறியீடுகள்
→புரொடோ-சின்னாட்டிக் → பினீசிய எழுத்து →அராமிய எழுத்து →எபிரேய அரிச்சுவடி
நெருக்கமான முறைகள் நபடாயன் சீரியாக் பல்மைரீடியன் மன்டிக் பிராமி பகலவி சோடியன்
ஒருங்குறி அட்டவணை U 0590 to U 05FF, U FB1D to U FB4F ஐஎஸ்ஓ 15924Hebr
குறிப்பு: இந்த பக்கத்தில் யூனிகோடு முறையிலான IPA பயன்படுத்தப் பட்டிருக்கலாம் இந்தக் கட்டுரை எபிரேய அரிச்சுவடி கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ, கட்டங்களோ அல்லது மற்ற குறியீடுகளோ தெரியலாம். எபிரேய எழுத்துக்கள் பதிலாக தெரியலாம்.
எபிரேய அரிச்சுவடி (எபிரேயம்:אָלֶף־בֵּית עִבְרִי [அ], Alephbet'Ivri), யூத எழுத்து, சதுர எழுத்து, பெட்டி எழுத்து என அறியப்படும் இது எபிரேய மொழியை எழுதுவதற்காகப் பாவிக்கப்படுகிறது. அத்துடன் மற்றைய யூத மொழிகளான இத்திய மொழி, யூதேய-இசுபானிசு, மற்றும் யூதேய-அராபி ஆகியவற்றையும் எழுதப் பாவிக்கப்படுகின்றது. இருவித எழுத்து வடிவங்கள் இருந்தன. எபிரேய அரிச்சுவடியின் முதல் இரு எழுத்துக்களைக் கொண்டு அலிஃப்பெத் என எபிரேய அரிச்சுவடி அழைக்கப்படுகிறது. இது தமிழ்போல் இடமிருந்து வலமாக இல்லாது, வலமிருந்து இடமாக எழுதப்படும்.
குறிப்பு: இந்த அட்டவணை வலமிருந்து இடமாக வாசிக்கப்படல் வேண்டும்.
எழுத்திலக்கண வேறுபாடுகள்:
எழுத்து பெயர் (ஒருங்குறி) வேறுபாடுகள்:
தற்கால எபிரேயம் முன்னைய வடிவம் Serif எழுத்துரு Sansserif எழுத்துரு Monospaced எழுத்துரு தொடர் எழுத்து முழுமையற்ற தொடர் எழுத்து பினீசிய எழுத்துபுராதன எபிரேய அரிச்சுவடிஅரமேய அரிச்சுவடி அலிஃப்אאא பெத்בבב கிமெல்גגג டலட்דדד ஹிההה வஃவ்ווו சயின்זזז கெட்חחח டெட்טטט யொட்ייי கஃப்כככ இறுதி கஃப்ךךך லமெட்ללל மெம்מממ இறுதி மெம்םםם நன்נננ இறுதி நன்ןןן சமேக்ססס அயின்עעע பேפפפ இறுதி பேףףף ஸாடிצצצ, இறுதி ஸாடிץץץ குஃப்קקק ரெஷ்ררר சின்ששש டாவ்תתת
அடிக்குறிப்புக்கள்:
அ ^"அரிச்சுவடி" என்பதற்கான எபிரேயப் பதம் (அலிஃப்பெத்) "-" இன்றி எழுதப்படும்.எபிரெய மொழி[spoiler]