➡நானும் ஒரு மாய்மால பரிசேயன் தான் -
இரக்கமில்லாமலும்
அன்பில்லாமலும்
பாவத்தைவிட்டு மனந்திரும்பாமலும் இருந்துக்கொண்டே, தேவனுக்காக மட்டும் வைராக்கியமும், வீராப்பும் காட்டும்போது!
➡நானும் ஒரு கல்நெஞ்ச பரிசேயன் தான்
எனக்கு அன்பானவர்கள் தவறும்போது தேவசமுகத்தில் மன்றாடிய அதே நான்,
பிறர் தவறும்போது தேவசமூகத்தில் மன்றாட மனதுவராதபோது!
➡நானும் ஒரு இரக்கமற்ற பரிசேயன் தான் -
போதனையில் பிழையென்பதால் பிறரை சத்துருவாய் பார்க்கும் எனக்கு,
அன்பே பிரதானம் என்ற போதனையிலும் பிழையுள்ளதோ என்று என் மனசாட்சியே எனக்கு சுட்டிக்காட்டுகையில்!
➡நானும் ஒரு உணர்வில்லாத பரிசேயன் தான் -
ஒருசில விஷயங்களில் நான் நீதிமான் என்பதாலும் அதே ஒருசில விஷயங்களில் பிறரை நியாந்தீர்க்கும் அதே நான்,
வேறு ஒருசில விஷயங்களில் அந்த பிறர் என்பவர்கள் நீதிமான் என்று அறிந்திருந்தும் அதே விஷயத்தில் என்னை நானே நியாந்தீர்த்து திருத்திக்கொள்ளாதபோது!
➡நானும் ஒரு வெள்ளையடிக்கப்பட்ட பரிசேய கல்லறை தான் -
ஊராருக்கெல்லாம் கீழ்ப்படிதலையும், பரிசுத்தத்தையும், இரக்கத்தையும் பிரசங்கித்த எனக்கு,
நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள் என்ற ஆண்டவருடைய வார்த்தை சத்தமாய் எனக்கு மட்டும் கேட்கும்பொழுது!
➡நானும் ஒரு செத்த பரிசேயன் தான் -
பிறர் இச்சையில் விழுந்து போகையில் அவர்களை உற்றுநோக்கி மிரட்டிஉருட்டி நியாந்தீர்த்த அதே கண்கள்,
தானும் ஓரு சிலவேளைகளில் ஓரக்கண்ணால் பிறருக்கானவைகளை இச்சிக்கும்போது!
➡மாயமால பரிசேயன் நானய்யா...
மார்மேல அடிக்கிறேன் தேவா...
மகா இரக்கம் காட்டுமய்யா...
மன்னித்து என்மகனேயென்று உருகுமய்யா!
- http://gopalelango.blogspot.com/2015/11/Phariseeshypocrites.html
__________________
திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.