நான் அலுவலகம் கடந்து வரும் ஒவ்வொரு நாளும் ஓரு மடடன் கடையில் ஒரு ஆட்டின் தலை வெட்டி தொங்கவைக்கப்பட்டிருப்பதை பார்க்கமுடியும். பல நாட்கள் அதன் பாவமரியா முகத்தை பார்த்து மிகுந்த வேதனையோடு கண்கள் கலங்க கடந்து வந்திருக்கிறேன்.
அந்த ஆடு எப்படி வெட்ட்பட்டிருக்கும் அதற்கு எவ்வ்ளவு வலித்திருக்கும் அதற்கு எப்பொழுது உயிர் போயிருக்கும் என்று பலவாறு சிந்திக்கிறேன்.
முதலில் அது அதிகம் கத்த கூடாது என்று அதன் குரல் வளையை அறுத்து விடுகிறார்கள் பின்னர் அதின் இரத்தம் வெளியே சிந்திவிடாதபடி பாத்திரத்தில் பிடித்து சிறுக சிறுக அருக்கிறார்கள். அதே நேரத்தில் அதன் தலையோடு சேர்ந்து இறைச்சியும் போய்விட கூடாது என்பதற்காக அதை மிகவும் ஓட்ட அருக்கிறார்கள்.
இவ்வாறு அதற்கு அதிகபட்ச்சம் எவ்வளவு வலியை கொடுக்க முடியுமோ அவ்வளவு வலியை கொடுத்து சித்திரவதை செய்து கொல்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் இவ்வாறு ஆடு மாடு பன்றி என்று அநேக ஜீவன்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகின்றன
இந்த பாவமரிய ஜீவன் கொல்லப்பட காரணம் யார்தெரியுமா? இந்த மனுஷனேதான்!
ஒருவன்
கர்த்தருடைய
கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது: பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரண பலியாகக்
கர்த்தருடைய
சந்நிதியில் கொண்டுவரக்கடவன். அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே
கர்த்தருடைய
சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து,
கர்த்தருடைய
சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.
தேவன்அன்று சொன்ன கடடளைகள்தான் இன்றும் நிறைவேறி வருகிறது அ வன் செய்யும் பாவத்துக்குத்தான் இவன் கொல்லப்படுவதற்கு பதிலாக அந்த பாவமரியா ஜீவன்கள் கொல்லப்படுகிறது ஆனால் இவனோ அதை அறியாமல் அதை அதிகபட்ச்ச சித்திரவதை செய்து கொல்கிறான்.
ஆண்டவராகிய இயேசு சர்வலோகத்தின் பாவத்துக்காக மரித்திருந்தாலும் "அதை விசுவாசித்து ஏற்றுக்கொள்பவனின் பாவமே மன்னிக்கப்படும்.
ஏற்றுக்கொள்ளாதவர்கள் செய்யும் பாவத்துக்கு அவன்தான் சாகவேண்டும். ஆனால் அவனை தற்காலிகமாக மீட்பதற்காக இப்படி பாவமரியா ஜீவன்களை சாவுக்கு ஒப்புக்கொடுக்கும் காரியத்தை தேவன் அனுமதித்திருக்கிறார். (காரணம் அவன் என்றாவது ஒருநாள்மனம்திரும்பி விடமாட்டானா என்ற தேவனின் மன ஏக்கம்தான்)
ஆனால் மனுஷர்களோ அதை ;புரிந்துகொள்ளாமல்
தனக்கு பதிலாக ஜீவனை கொடுக்கும் அதற்கு ஜீவனுக்கு அதிகபட்ச்சம் எவ்வளவு வலியை கொடுக்க முடியுமோ அவ்வளவு வலியை கொடுத்து சித்திரவதை செய்து கொல்கிறார்கள்.
இப்படி ஒரு பாவமும் அறியா இந்த ஜீவன்களை தான் சுயநலத்துக்காக அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்லும் மனுஷர்களைவிட கொடிய பிசாசு எதுவும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
ஒருநாள் ஆண்டவரும் என் கண்களை திறந்து காட்டி என்னிடம் இதைத்தான் சொன்னார் "ஆவியாய் இருக்கும் எந்த பேய் பிசாசுக்கு நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இருதயத்தில் திருகோடும் கேடோடும் இருக்கும் இந்தத் மாம்சமாக இருக்கும் மனுஷ பிசாசுகளிடம் மாத்திரம் எச்சரிக்கையாய் இரு இல்லையேல் அது உன்னை ஒரே அடியில் கவிழ்த்துவிடும்" என்றார்
ஆம் மாம்சமாக இருக்கும் மனுஷனை வைத்தே எல்லா ;பிசாசுகளும் துர் கிரியைகளை செய்கின்றன அவைகளுக்கு இடம் கொடுக்கும்போது அவனே பிசாசாகி சந்துருவின் கொடிய கிரியைகளை செயகிறான் எனவே
என்று சொல்லப்படும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. அதுவரை இந்த பூமியில் மரணம் இருக்கத்தான் செய்யும் ஆகினும் நாம் கருணை உள்ளவர்களாக இருந்து துர்சிந்தனைகளையும் இரக்கமற்ற கொடூர செயல்களையும் இருதயத்தில் தோன்றும்போதே கிள்ளி எரிந்து தேவன் கொண்டுவரப்போகும் அந்த நாடுகளில் பிரவேசிக்க தகுதியுள்ளவர்களாக இருக்க வாஞ்சிப்போம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)