இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பயம் - FEAR


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
பயம் - FEAR
Permalink  
 


ஆரம்பித்தது  - ஏதேன் தோடடம் 
 
காரணம் - தேவ கடடளையை மீறியது.
 
செயல்பாடு : தேவ சமூகத்தைவிட்டு விலகி போகுதல் 
 
ஆதியாகமம் 3:10 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.
 
பயத்தினால் வரும் பாதிப்புகள்
I யோவான் 4:18  பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.
வெளி 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்
 
மேற்கொள்ளும் வழி:
ஆரம்பம்  -  கர்த்தருக்கு பயப்படுத்தல் 
நீதிமொழிகள் 1:7 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
 
முடிவு : பூரண அன்பில் நிலைத்திருத்தல் 
 
I யோவான் 4:18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; 
 
எபிரெயர் 13:6 அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன்
 
பயம் பற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களை பதிவிடும்படி வேண்டுகிறேன்.  
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

II தீமோத்தேயு 1:7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

இந்த வசனத்தின் படி பார்த்தால் பயத்தின் ஆவிக்கு எதிர்மறையான மூன்று விடயங்களை பவுல் காண்பிக்கிறார்.

1- பலம்
2- அன்பு
3- தெளிந்த புத்தி

இவை மூன்றும் ஒன்று சேர்ந்து காணப்படும் மனிதன் பயப்படவே மாட்டான்.

ஏனெனில்
1- பலம்- பயத்தை குறைக்கும்
2- அன்பு- பயத்தை தள்ளும் - (I யோ 4:18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்;..... பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல)
3- தெளிந்த புத்தி- பயத்தை தோற்றுவிக்க கூடிய காரணிகளை நிதானிக்கும். இதனால் பயம் தவிர்க்கப்படும்.

எனவே பயத்தின் எதிரிகளான இவை மூன்றும் ஒரு மனிதனுக்குள் சேர்ந்து காணப்பட்டால் அவனை பயம் மேற்கொள்ளாது.  இதனால்தான் தேவன் இவை மூன்றும் சேர்ந்த ஆவியை நமக்கு கொடுக்கிறார்...

(எனது தியானக் குறிப்பிலிருந்து...)



__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard