இந்த வசனத்தின் படி பார்த்தால் பயத்தின் ஆவிக்கு எதிர்மறையான மூன்று விடயங்களை பவுல் காண்பிக்கிறார்.
1- பலம் 2- அன்பு 3- தெளிந்த புத்தி
இவை மூன்றும் ஒன்று சேர்ந்து காணப்படும் மனிதன் பயப்படவே மாட்டான்.
ஏனெனில் 1- பலம்- பயத்தை குறைக்கும் 2- அன்பு- பயத்தை தள்ளும் - (I யோ 4:18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்;..... பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல) 3- தெளிந்த புத்தி- பயத்தை தோற்றுவிக்க கூடிய காரணிகளை நிதானிக்கும். இதனால் பயம் தவிர்க்கப்படும்.
எனவே பயத்தின் எதிரிகளான இவை மூன்றும் ஒரு மனிதனுக்குள் சேர்ந்து காணப்பட்டால் அவனை பயம் மேற்கொள்ளாது. இதனால்தான் தேவன் இவை மூன்றும் சேர்ந்த ஆவியை நமக்கு கொடுக்கிறார்...