இன்று சில இடங்களில் “பன்றிகளுக்குமுன் முத்துக்களை போட வேண்டாம்” என்னும் வசனத்தை அடிப்படையாக வைத்து ஏற்க மாட்டாத மனிதர்களுக்கு சுவிஷேசம் அறிவிக்க தேவையில்லை என்று சிலர் போதிக்கிறார்கள். ஆனால் இயேசுவின் கட்டளை அதுவல்ல....
மத்தேயு 28:19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;
மாற்கு 13:10 சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.
இவ்வசனங்களை மறந்து விட்டோமே....
விதைகளை விதைப்பவன் விதைத்த விதைகள் சில வழிப்பாட்டில் விழுந்தது,
சில விதை கல் நிலத்திலும்,
சில விதை முள் நிலத்திலும்,
சில விதை நல்ல நிலத்திலும் விழுந்தது.
எது வழிப்பாடு, எது கற்பாறை, எது முள் நிலம், எது நல்ல நிலம் என்று
வித்தியாசம் பார்த்து விதைக்காமல்
எல்லா வகை நிலத்தையும் ஒன்றாய் கருதி விதைத்திருக்கிறான் போல தெரிகிறது.
விதைகள் வார்த்தையாகும்,
விதைப்பவன் கிறிஸ்தவன்,
நிலங்கள் மனித மனங்களாகும்.
எது நல்ல மனம், எது கல் மனம், எது முட்கள் நிறைந்த மனம், எது வழியோரம் போன்ற மனம்
என்று வேறுபிரித்தறியும் சக்தி நமக்கில்லை ஆதலால்
யாவருக்கும் வசனம், யாவருக்கும் சுவிஷேசம் தெரிவிக்க வேண்டியது நமது கடமையன்றோ.
எவன் ஏற்பான்? எவன் மறுப்பான்? நமக்கெதுக்கு இந்த கவலை? யாவருக்கும் சொல்ல வேண்டியதே நமக்கு கிடைத்த கட்டளை. மத்தேயு-13:3, மாற்கு-4:3
இதே வார்த்தையை ஒருமுறை கர்த்தர் என் மனைவியிடம் சொல்லியிருக்கிறார்.
எதற்கு என்றால்,
தேவன் தெரிவித்த மேலான ஒரு ஆவிக்குரிய செய்தியை ஆண்டவரையே அறியாத இந்து சகோதரிகளிடம் சொல்ல போனபோது இவ்வார்த்தை சொல்லப்பட்ட்து.
இதன் மூலம் நான் அறிந்துகொண்டது ,
சுவிஷேசம் சொல்வது யாருக்கும் தடை செய்யப்படவில்லை. நல்லவர் கெட்டவர் என்று பாராமல் நம்மால் முடிந்தவரை பிறருக்கு சொல்ல வேண்டும். ஆனால தேவன் தெரிவிக்கும் மேலான ஆவிக்குரிய சத்தியங்களை எல்லோரிடமும் சொல்லக்கூடாது என்பதே.
காரணம் அவர்களுக்கு அது புரியவும் செய்யாது அதன் மதிப்பும் தெரியாது மாறாக நம்மைப்பற்றி தவறான அபிப்ப்ராயத்துக்கு அது வழிவகுக்கும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உங்களுக்காகவே கடவுள் சொல்லும் நற்செய்தி கடவுள் சொல்லும் நற்செய்தி என்ன? கடவுளுடைய அரசாங்கம், இந்த பூமியில் ஆட்சியைத் தொடங்கிவிட்டது. ஆம், அன்பானவர்களே! இந்த பூமியில், மக்கள் சந்தோஷமாக வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்பது தான் கடவுளுடைய விருப்பம். அவர் மனிதர்களுக்காகத்தான் இந்த பூமியையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்தார். எனவே, கடவுள் இந்த பூமியில் நாம் படும் துன்பங்கள் அனைத்தையும் வெறுப்பதால் அவற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதோடு, அவர் உங்களுக்கு ஒளிமயமான வாழ்க்கையையும் கொடுக்கிறார்.
எரேமியா 29:11இல் “நீங்கள் எதிர் பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” என்று வாசிக்கிறோம். இப்பொழுதுள்ள அரசாங்கங்களால் மக்களுடைய துன்பங்கள், நோய், வன்முறை, மரணம் போன்றவற்றை தீர்க்க முயற்சி செய்தாலும் அவர்களால் அவற்றை தீர்க்க முடியவில்லை. ஆகவே, நற்செய்தி என்னவென்றால் “தொடங்கிவிட்ட கடவுளுடைய ஆட்சியில், கடவுள், உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், தொல்லைகள், மன வேதனைகள், நோய்கள், மரணம் இவற்றிலிருந்து விடுதலை அடையச்செய்து சந்தோஷமான, சமாதானமான, நீண்ட காலம் வாழும் வாழ்வான “நித்திய வாழ்வை” அவர் நமக்கு பரிசாகக் கொடுக்கிறார்.” ஏசாயா 25:8 இப்படியாகச் சொல்கிறது அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார். சங்கீதம் 68:20 இல் நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. ஏசாயா 33:24 இல் வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகர வாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும். தானியேல் 2:44 இல் அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும் என்று வேத வசனங்கள் சொல்கிறது.
ஏன் கடவுள் இந்த நற்செய்தியை நமக்கு அறிவிக்கிறார்?
இப்பொழுது உலகத்தில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளை பைபிள் 2000 வருடங்களுக்கு முன்னதாகவே முன் அறிவித்து உள்ளது. 2தீமோத்தேயு 3:1–5 இல் வேத வசனம் இவ்வாறாகச் சொல்கிறது. மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமை உள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல், சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. இப்படிப்பட்ட பொல்லாத காரியங்களை, முடிவுக்குக் கொண்டு வருவதற்கே கடவுளுடைய அரசாங்கம், இந்த பூமியில் தன்னுடைய ஆட்சியைத் துவங்கி இருக்கிறது.
கடவுளுடைய அரசாங்கம் எப்படி ஆட்சி செய்கிறது?
யோவான் 13:34,35 இல் நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். கடவுளுடைய அரசாங்கம் அவருடைய வார்த்தையைக் கொண்டு ஒவ்வொரு மனித உள்ளத்திலே ஆட்சி செய்யும் அரசாங்கம். இது, ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்திலே நடைபெறும் ஆட்சி. இது அன்பின் ராஜ்ஜியம். இந்த அரசாங்கத்தின் ராஜா “கடவுளுடைய வார்த்தையே“. இதை வேறு விதத்தில் “கடவுளுடைய வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவே” என்றும் சொல்லலாம். யோவான் 1:1 இல் வேதம் இப்படியாகச் சொல்கிறது. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. மேலும், வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன், வெளிப்படுத்தின விசேஷம் 2:7 இல் இப்படியாகச் சொல்கிறார். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் (தோட்டத்தின்) மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்றெழுது. அவர் சொன்ன வார்த்தையின் படியே, இந்த கடைசி காலத்தில், “வாழ்வளிக்கும் கனியை” உங்களுக்கு மிக கிருபையாய் கடவுள் கொடுக்கிறார். இக்கனி மூலம் சர்வ வல்லவர், உங்கள் வியாதிகளைச் சுகம் ஆக்குகிறார். மேலும், மரணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே செல்லும் விதத்தில் இக்கனியை அவர் வடிவமைத்து இருக்கிறார். இந்தக் கனி மரணத்தைத் தள்ளிப்போடும் என்பது, கடவுளுடைய ஆட்சியில், அவருக்கும் உங்களுக்கும் உள்ள ‘அன்பின் உறவைப்’ பொறுத்து தான் இந்த வாழ்வளிக்கும் கனி உங்களுக்குள்ளே கிரியை செய்யும். ஆனால், இன்னுமொரு நற்செய்தி என்னவென்றால், நான் கடவுளுடைய வார்த்தையாகிய “இயேசுவை” என்னை ஆளுகிறவராக, ராஜாவாக ஏற்றுக்கொள்கிறேன் என்று நீங்கள் சொல்லும் பட்சத்தில் இக்கனி மூலம் பரலோக தேவன் நிச்சயமாக வாழ்வை அளிக்கிறார். இது முழுக்க முழுக்க கடவுளுடைய இரக்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. ஆதலால், நீங்கள் யாராக இருந்தாலும், எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், உங்களுடைய வாழ்க்கை முறையும், செயலும் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நீங்கள் கடவுளோடு சேர்ந்து கொள்ளலாம்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் இருந்து, நாம் அவரைப் பற்றியும், அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் பைபிளைக் கொண்டு அறிந்து கொண்டே இருக்க வேண்டும். கடவுள் நம்மேல் எவ்வளவு அன்பு கூர்ந்து இருக்கிறார் என்பதை வேதம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. நம்முடைய பாவத்தின் கூலியாகிய மரணத்தைப் போக்க கல்வாரிச் சிலுவையில் இயேசு கிறிஸ்துவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். இந்த அன்பு, நம்மை நேராக நித்திய வாழ்விற்குள் வழி நடத்திச் செல்லக் கூடியதாய் இருக்கிறது. கடவுளுடைய வார்த்தைகள் அடங்கிய பைபிள் ஆனது, “அன்புள்ள அப்பா”விடமிருந்து வந்த கடிதத்தைப் போன்றது. நாம் எப்படி வாழ்க்கையை அனுபவித்து மகிழ வேண்டும் என்பதைப் பற்றி பைபிள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஆகவே, சந்தோஷமான, சமாதானமான, நீண்ட காலம் வாழும் நித்திய வாழ்வைத் தரும் கடவுளுடைய ராஜ்யத்தை எக்காரணத்தைக் கொண்டும் இழந்து விட வேண்டாம். நீதிமொழிகள் 29:25 மற்றும் வெளிப்படுத்துதல்14:6,7 இல் மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது: வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீருற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்.என்று வாசிக்கிறோம். எனவே, கடவுளுடைய அரசாங்கத்தில் பங்கு பெற உங்களையும் அழைக்கிறோம்.
கடவுளுடைய அரசாங்கத்தில் பங்கு பெற நீங்கள் செய்ய வேண்டிய ஜெபம். (நித்திய நற்செய்தியின் ஜெபம்) அன்பான பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து எனக்காக கல்வாரிச் சிலுவையில் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்றும், நீர் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினீர் என்றும், என் உள்ளத்தில் இருதயப் பூர்வமாக விசுவாசிக்கிறேன். கல்வாரிச் சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரத்தம், என்னை சகல பாவங்களில் இருந்து கழுவி சுத்திகரித்து இருக்கிறதே அதற்காக நன்றி! கர்த்தராகிய இயேசுவை, என் ஆண்டவராக (ராஜாவாக) ஏற்றுக்கொள்கிறேன். நீர் என்னை அவருடைய ராஜ்யத்தின் பிரஜையாக மீட்பின் மூலம் மாற்றியமைக்காக நன்றி. சர்வ வல்லவரே! உம்மிடத்திலே என் முழு ஆத்துமாவோடும், என் முழு பலத்தோடும், என் முழு இருதயத்தோடும், என் முழு மனதோடும் அன்பு கூறட்டும். அப்படியே நான் என்னிடத்தில் அன்பு கூறுவது போல பிறரிடத்திலும் அன்பு கூறட்டும். இந்த நியாயப்பிரமாணத்தின் நீதியை கிருபையினால் என்னிடத்தில் நிறைவேற்றி இருக்கிறீர் என்பதை நான் விசுவாசிக்கிறேன். உமது அன்பிற்கு நன்றி! என்னுடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவரே! நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான இயேசு கிறிஸ்துவின் கட்டளை என்னிடத்தில் நிறைவேறட்டும்.
இரக்கமுள்ள நல்ல பிதாவே! உம்முடைய ராஜ்யத்தில் வேலை செய்யும்படி என் நோய்களை சுகமாக்கி எனக்கு முழு சரீர பெலனையும், சரீர மீட்பையும் கட்டளையிட்டுள்ளபடியால் நன்றி. என்னை ஜெயங்கொண்டவனாகப் பார்த்து வாழ்வளிக்கும் கனியைப் பரிசாகக் கொடுத்தமைக்காக நன்றி, என் னுடைய சரீரத்தை வாலிப வயதில் இருந்ததைப் பார்க்கிலும் ஆரோக்யமடையச் செய்கிற கிருபைக்காக நன்றி, என்னை இளமையின் நாட்களுக்குத் திரும்ப செய்கிற கிருபைக்காக நன்றி.இந்த சரீரத்தை களைந்து ஆவிக்குரிய சரீரமாக மாற்றுகிற கிருபைக்காக நன்றி இந்த சரீரத்ததை கெட்டு போகாமல் மறுரூபமாக்கிக் கொண்டு செல்லுகிற கிருபைக்காக நன்றி. அன்பான பிதாவே! மேலான நித்திய வாழ்வை எனக்கும், உம்மையும், உம் குமாரன் மேல் விசுவாசமுள்ள யாவருக்கும் தந்தருளும்; இரக்கமுள்ள நல்ல பிதாவே! நீர் அப்படியே செய்கிறபடியால் நன்றி. சர்வ வல்லவரே! இப்பொழுது எனக்கு கொடுத்த வேலைக்காக நன்றி. இப்பொழுது நான் வேலை செய்யும் துறையை உம்முடைய ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பக்கூடிய துறையாக மாற்றி அதில் நான் உமக்கென்று அன்பினால் வேலை செய்யட்டும். இரக்கமுள்ள நல்ல தகப்பனே! இப்பொழுது கொடுத்துள்ள உணவு வகைகளுக்காக நன்றி. ஆனால் நீர் என்னை சகலவித கனிகளைப் புசிக்கும் படி உண்டாக்கினீர்; அப்படிப்பட்ட கனிகளை புசிக்கிறவனாக என்னை மாற்றும் அதற்காக நன்றி! இப்பொழுது நீர் கொடுத்துள்ள நல்ல வீட்டிற்காக நன்றி. ஆனால் எந்தவிதத் தீமையும் இல்லாத, வானத்தையும் பூமியையும் வசிக்கக் கொடுத்தீர். எனவே, எந்தவிதத் தீமையும் இல்லாத புதிய வானமும், புதிய பூமியும் உண்டாகட்டும். மேற்சொன்ன எல்லா ஜெபங்களும் நீர் கேட்டபடியால் நன்றி. உமது குமாரன் சரீரப் பிரகாரமான வருகை வரை எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். தொடங்கிவிட்ட உமது ஆட்சி அவரது வருகையில் முழுமை அடையட்டும். உம்முடைய நியாயத்தீர்ப்பிலிருந்து என்னை கிருபையாய் பாதுகாத்துக் கொள்ளும். நீர் அப்படியே செய்கிறபடியால் உமக்கு நன்றி. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே! ஆமென்......