நான் ஒருமுறை என் தம்பி வீட்டில் நடந்த ஒரு விழாவுக்காக தூரத்தில் உள்ள ஒரு ஊருக்கு அவன் வீட்டுக்கு சென்றிருந்தேன்.விழா முடிந்து இரவில் அங்கு பக்கத்து வீட்டு மாடியில் தங்கினோம் காலை சுமார் 3 மணிக்கு விழிப்பு வந்த எனக்கு அவன் வீடடை பார்த்து ஒரே அழுகையாக வந்தது சுமார் 1 மணி நேரம் நான் அழுத்திருப்பேன்
அது குறித்து ஆண்டவரிடம்விசாரித்தபோதுமிகப்பெரிய வீடுகட்டி மிகவும் வசதியாக வாழும் அவன் அந்த பணத்தை சம்பாதிக்க பின்பற்றிய வழிமுறைகள் கர்த்தருக்கு கொஞ்சமும் பிடிக்காத காரியங்களாக இருந்தது. அநேக சிறு பிள்ளைகளை அவன் கொடுமை படுத்தி எப்படியெல்லாமோ வேதனை படுத்தி பணத்தை சம்பாதித்துள்ளான். வெளிப்பார்வைக்கு அது அரண்மனைபோன்றவீடு ஆனாலதேவனுக்கு அது அருவருப்பான கொடுமையின் கட்டிடம் அதை பார்த்தே தேவன் கண்ணீர் வடிக்கிறார்.
ஆகினும் எங்கள் குடும்பத்த்தில்இருக்கும் மற்ற நீதிமான்களான அவனின் சகோதரர்களுக்காக அவர்களுக்கு மன கஷடங்கள் உண்டாக்கா வண்ணம் அவனை தண்டிக்க விரும்பாமல் விட்டுவைத்துள்ளதாக உணர்த்தினார்.
நோவா என்ற ஒரே நீதிமானுக்காக அவன் மொத்த குடும்பத்தையும் அழிவில் இருந்து தப்புவித்தார்
லோத்து என்ற நீதிமானுக்காக அவன் குடும்பத்தார் மட்டுமல்ல அவன் மருமகன்மார்களைகூட விடுவிக்க தேவன் சித்தம் கொள்கிறார்.
தேவனை தூஷித்து ஜீவனை விடும் என்று சொன்ன யோபின் மனைவியைக்கூட தேவன் யோபுவுக்காக ஏற்றுக்கொண்டாரே!
அநேக துன்மார்க்கர்கள் இந்த உண்மையை அறியாமல் பணம் சம்பாதிக்க கொடுமை மேல் கொடுமை செய்து தேவனைவிட்டு விலகி விலகி போகிறார்கள்.
ஏலியின் இரண்டு மகன்களும் கர்த்தருக்கு விரோதமாக அவர் பலியின் காரியங்களிலேயே தவறாக நடந்தும் கர்த்தர் அதை உடனே விசாரிக்கவில்லை. சாமுவேல் என்ற பிள்ளையாண்டான் எழும்பும் மட்டும் அவன் குடும்பம் பாதுகாக்கப்பட்டது
துன்மார்க்கமாய் பணம் சம்பாதிப்போரே "நான் எவ்வளவோ கொடுமை செய்துவிடடேன் எத்தனையோ ஏமாற்றுவேலை செய்துவிடடேன் எத்தனைபேர் வாழ்க்கையையோ கெடுத்துவிடடேன் தேவன் என்னை கண்டுகொள்ளவில்லை" என்று எண்ணி துணிகரம் கொள்ளாதே. தேவன் உன்னை தண்டியாமல் விட்டு வைத்திருப்பது உன் மனைவியின் நீதிக்காகவோ அல்லது உன் சகோதரனின் நீதிக்காகவோ அல்லது நீதிமானாகிய உன் தாய் தகப்பனின் மனம் வேதனைப்பட கூடாது என்பதைக்காகவோ அல்லது உன் பிள்ளைகளுக்காகவோ கூட இருக்கலாம்.
ஆனால் எந்நாளும் இப்படியே இருக்காது. ஒரு நாள் வரும் அப்போது உன் செய்கைக்கு இரதத்தனையாய் உன்னிடம் சரிகட்டபடும்
எசேக்கியேல் 22:14 நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன்இருதயம்தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகியநான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.
என்று சொல்லும் கர்த்தரின் எச்சரிப்பின் சத்தத்தை கேட்டு இன்றே மனம்திரும்புவாயாக.
-- Edited by SUNDAR on Monday 12th of September 2016 02:26:42 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)