எமது சபையின் 8 நாள் வேதாகம கருத்தரங்கு ஒன்றில் முடிந்த நேரங்களில் கலந்து கொண்டேன் இதன் பொது தீர்க்கதரிசனமாக ஆண்டவர் ஒரு ஊழியர் மூலமாக சொன்னார் நிரந்தரமான வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலைகளை தருவேன் என்று நானும் அதை எனக்கென்று எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் வேதாகம பாட கடைசி நாள் சிறந்த ஒரு நிறுவனத்தில் இருந்து எனக்கு நேர் முக பரீட்சைக்கு அழைப்பு வந்தது....... நானும் அதில் கலந்து கொண்டேன்.
பின்னர் நான் ஜெபித்தேன் ஆண்டவருக்கு சித்தமானால் இன்றே எனக்கு ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும் இந்த வேலை விடயத்தில் என்று அதே போன்று காலை எனக்கு அழைப்பு வந்தது 02 வது நேர் முக பரீட்சைக்கு வருமாறு அன்று அதில் கலந்து கொண்டேன் அந்த வேலையை தேவன் எனக்கு பெற்று தந்தார்..
இந்த வேலைக்கு உரிய எந்த கல்வித் தகைமைகளும் எனக்கு இருக்கவில்லை ஏனெனின் இது ஒரு வங்கி சம்பந்தப்பட்ட வேலை ஆனாலும் தேவன் எனக்கு சொன்ன விதமாக சிறந்த வேலை ஒன்றை பெற்றுத் தந்தார்...
வாக்கு மாற தேவனுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
லூக்கா 18:7தேவன் தம்மை நோக்கி இரவும்பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
வாழ்த்துக்கள் சகோதரி கர்த்தருக்காய் காத்திருப்போரை கர்த்தர் தம்முடைய வலது கரத்தினால் உயர்த்துவார்.
அவர் வார்த்தையினால் சொன்னதை கரங்களினால் நிறைவேற்றுபவர்
I இராஜாக்கள் 8:24 தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர்.