கடந்த நாளில் தீபாவளி சுவீட் அலுவலத்தில் இருந்து வாங்கி வந்தபோது ஒரு அன்பு சகோதரரை சந்திக்க சென்றேன் என்னிடம் இரண்டு சுவீட் பாக்ஸ்களும் இரண்டு மிக்ஸர் பாக்கெட் களும் இருந்தது. சகோதரரை சந்தித்துவிட்டு வரும்போது சிறிய உணர்த்துதல் ஏற்படவே ஒரு மிக்ஸர் பாக்கெட்டிடை எடுத்து அவரிடம் கொடுத்துவிடடேன். அடுத்து சுவீட் ஓன்று கொடுக்கலாமா என்று யோசனை வந்தது, ஆனால் பேச்சு வாக்கில் அதை விட்டுவிட்டேன். அவரும் போய்விடடார். ஆனால் நான் சிறிது தூரத்தை கடப்பதற்கு முன்னரே ஆவியானவர் என்னோடு இடைப்பட்டு "நீ சுவீடடை கொடுக்காதது தவறு" என்று இருதயத்தை பேசினார் நான் எவ்வளவோ சமாதானம் செய்து என் மனது மிகவும் தூக்கப்பட்டு போனது. எதோ பெரிய தவறு செய்துவிடடதுபோல் மனது துன்பப்பட்ட்து பிறகு ஆவியானவரிடம் அதிகம் மன்னிப்பு கேட்டு " என்னை பற்றி உங்களுக்கு தெரியும் ஆண்டவரே எனக்கு இனிப்பு என்றால் கொஞ்சம் அதிகம் பிடிக்கும் எதோ தவறி விடடேன் இனி அப்படி செய்ய மாடடேன்" என்று வருத்தப்பட்டு ;புலம்பிய பின்னரே சமாதானம் கிடைத்தது.
காரணம் வசனம் சொல்கிறது
லூக்கா 3:11இரண்டுஅங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான்.
ஆனால் இதை எத்தனை முறை படித்தாலும் அதில் உள்ள உட்கருத்து என்னவென்பது ஆவியானவர் உணர்த்தும்வரை நமக்கு புரியாது
"ஒரு கிலோ அரிசி 50 ரூபாய்" என்று சொல்வது போல், எந்த ஒரு தத்துவத்துக்குள்ளும் தேவனையும் தேவ வார்த்தைகளையும் அடக்கிவிட முடியாது. எந்த ஒரு தத்துவத்தை பிடித்துக்கொண்டும் நான் சரியாக நடந்துவிடடேன் என்று தேவன் முன்னால் சொல்லிவிடவும் முடியாது.
கற்பனைகளை சிறு வயது முதலே சரியாக கைகொண்டவனை பார்த்து இயேசு இன்னும் உன்னிடம் குறை இருக்கிறது என்று சொன்னார்.
"உனக்கு உண்டானதை விற்று தரித்திரருக்கு கொடு" அப்படி ஒரு கற்பனைஅவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அன்றைய தினம் இயேசு அவனிடம் கண்டகுறை அதுதான் அதாவது அவன் ஆஸ்த்திமேல் பற்று வைத்திருந்தது. ஆனாலும் அத்தோடு அது முடியவில்லை அவற்றை விற்று கொடுத்தபின்னர் இயேசுவை பின்பற்ற வேண்டிய ஒரு வேறு காரியமும் பாக்கி இருந்தது.
மத்தேயு 19:21அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும். பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
அதேபோல் நாம் என்னதான் சரியாக செய்தாலும் செய்துவிடடேன் என்று நினைத்தாலும் தேவன் முன்னால் போய் நிற்கும்போது மட்டுமே நம்மில் தேவனுக்கு பிடிக்காதது இன்னும் எது பாக்கி இருக்கிறது என்று தெரியவரும்
எனவே தேவன் சொன்னதை மாத்திரம் செய்துவிட்டு அவர் முன்னால் போய் "நான் அப்பிரயோஜனமான ஊழியக்காரன் நீர் சொன்னதை செய்தேன்" என்று நில்லுங்கள் அப்பொழுது அவர் உங்களை அணைத்து இன்னும் உங்களிடம் என்ன குறை இருக்கிறது என்பதை அன்போடு சொல்லுவார்.
அதைவிட்டுவிட்டு, அவர்கள் அதை சொன்னார்கள் இவர்கள் இதை இவர்கள் சொன்னார்கள் நான் இப்படி சொல்கிறேன் என்பதெல்லாம் வெறும் மனிதர்களின் ஞானத்தில் வந்த அரைகுரை கோட்ப்பாடுகள் அது தேவனுக்கு முன்னாள் ஒன்றுமில்லை.