உள்ளதாய் : இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று உள்ளவராக
இலதாய் : கடவுளே இல்லை என்று சொல்பவனைகூட தண்டிக்காமல் அவனுக்கு இல்லாதவராக
மருவாய் / மலராய் : மலராக அதிலிருந்து வரும் நறு மணமாக
மணியாய் : மணி ஒலி எழுப்பக்கூடியது .ஒலி =சப்தம் வார்த்தையாக
ஒளியாய் : எள்ளளவேனும் இருள் இல்லாமல் ஒளியாய் இருப்பவராக
கருவாய் உயிராய்க் : உலகின் மூலப்பொருளாக அதில் இருந்து தோன்றிய உயிர்களுக்கு எல்லாம் உயிராக தாயாக
கதியாய் : எல்லோருக்கும் இறுதி கதியாக / முடிவு நிலையாக
விதியாய்க் : அந்த இறுதி நிலையை அடையும் வழியாக
குருவாக : அந்த விதியை (மார்க்கத்தை ) சரியாக போதிக்கும் குருவாக, இருக்கும் இறைவா வந்து அருள் புரிவாய்
இது ஒரு இந்து மகானின் வார்த்தைகள்தான் என்றாலும் இறைவனின் முழு தன்மையை நமக்கு எடுத்து சொல்வதாக எனக்கு தோன்றியதால் என் சொந்த விளக்கங்களுடன் இங்கு பதிவிடுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)