ஒரே தேவன் அதில் ஒரு வல்லமையாகிய குமாரன் பிதாவின் வல்லமைக்கு கீழ்ப்பட்டிருப்பார் அப்படித்தானே? ஆனால் வசனம் இப்படியும் சொல்கிறதே..
யோவான் 10:30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
விளக்கவும்
சிஸ்ட்டர் நீங்கள் மீண்டும் திரித்துவ கருத்து குறித்த விவாதத்துக்குள் கொண்டு சொல்வதுபோல் இருக்கிறது
இயேசு தன் வாயாலேயே மிகதெளிவாக என் பிதா என்னை விடவும் எல்லோரை விடவும் பெரியவர் என்று சொல்லிவிட்டதால் அவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்தால் இப்படி ஒரு கேள்வி எழுவதே முதலில் சாத்தியம் இல்லை.
இயேசு தேவத்துவம் உள்ளவராகவும் தேவனை தன் சொந்த பிதா என்று சொன்னதாலும் தேவனும் நானும் ஒன்றாய் இருக்கிறோம் என்று சொன்னதாலும் அவர் சொற்கள் செயல்பாடுகள் அற்ப்புத அதிசயங்கள் போன்ற அனேக கரியங்களில் அவர் தேவனுக்கு சமமாகவே இருந்தார் எனவே அந்த வசனத்தில் எந்த தவறும் இல்லை.
அவர் எந்தெந்த காரியத்தில் எல்லாம் தேவனுக்கு சமமாக இருந்தார் என்று பார்த்தால்:
தேவத்துவத்தில் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார்
தேவனுடய ஆவியானவர் அவரோடு தங்கியிருந்ததால் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார்
தேவனின் கிரியைகளை செய்வதில் அவர் தேவனுக்கு சமமாக இருந்தார்
பிதாவுடையது எல்லாம் அவருடையதாகவே இருந்ததால் அவர் பிதாவுக்கு சமமாக இருந்தார்
தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதால் அவர் தேவனுக்கு சமமாக இருக்கிறார்.
தேவனுடைய ஏழு ஆவிகளையும் உடையவராக இருப்பதால் அவர் தேவனுக்கு சமமாக இருக்கிறார்
இப்படி அனேக காரியங்களை சொல்லிக்கொண்டே போகலாம் எனவே பவுலோ யோவானோ அல்லது நானோ கூட அவரை யாரும் தூதர் என்றோ அல்லது தேவதன்மை அற்றவர் என்றோ சொல்லிவிடாத படிக்கு அவர் தேவனுக்கு சமமானவர் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. அவர் தேவனும் தேவனுக்கு சமமானவரும் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஆனால் பிதாவாகிய தேவன் அவரைவிட எந்த விதத்தில் பெரியவர் என்பதை இயேசு ஒருவரே அறிவார். ஏதோ ஓரிரு காரியங்களில் பிதா பெரியவராக இருந்ததால்தான் இயேசு "என் பிதா என்னிலும் பெரியவர்" என்று சொல்லவேண்டிய அவசியம் இருந்திருக்க வேண்டும். அப்படி பிதாவானவர் எந்த தகுதிகளில் பெரியவர் என்பதை தேவனோ அல்லது இயேசுவோ சொல்வதை வைத்துதான் நாம் புரிந்துகொள்ள முடியம்.
இந்த காரியங்களை குறித்து வசனம் என்ன சொல்கிறது என்பதை குறித்து பார்த்தால்:
இயேசுவை இன்று என்ற நாளில் ஜெனிப்பித்தவர் தேவன்
சங்கீதம் 2:7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
இயேசுவை ஜெநிப்பித்தவர் அவரது தகப்பன் என்ற ஸ்தானத்தில் பிதா இயேசுவுக்கு பெரியவராக இருந்தார்.