கர்த்தர் என்ற வார்த்தையை இயேசுவுக்கும் பயன்படுத்தலாம் தேவனுக்கும் பயன் படுத்தலாம்
ஆனால்
இயேசு என்ற வார்த்தையை தேவனுக்கு பயன்படுத்த முடியாது.
"கர்த்தராகிய இயேசு" என்று வசனம் சொல்கிறது
இதன் பொருள் கடவுளாகிய இயேசு / ஆண்டவராகிய என்பது
"தேவனாகிய இயேசு" என்று வசனம் இல்லை.
இயேசு என்பதன் பொருள் It is a Hebrew name meaning, God Saves
பாவத்தில் இருந்து மனுஷனை மீட்க்கும் பிரத்யேக பணிக்கு தேவன் தன வார்த்தையை மாம்சமாக்கினார் அவரே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து.
தேவனுக்குள் அவரின் வார்த்தை அடக்கம் ஆனால் அவர் வார்த்தைக்குள் தேவனை அடக்கிவிட முடியாது காரணம் அவருக்கு பார்த்தல் / கேடகுதல்/ கிரியை செய்தல் போன்ற மேலும் பல மகத்துவங்கள் உண்டு.
இயேசுவானவர் தேவத்துவத்தில் ஒருவர் அவர் தேவனுக்குள் அடக்கம் ஆனால் தேவன் அவருக்குள் அடக்கம் அல்ல.
இயேசு தேவனுக்கு சமமாக இருந்தார் என்று வசனம் சொல்கிறது . தேவத்துவங்கள் எல்லாம் கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்தது என்று வசனம் சொல்கிறது. தேவன் மாம்சமானார் என்றும் வசனம் சொல்கிறது. ஆனால் எங்குமே தேவனாகிய இயேசு என்றோ / தேவனாகிய கிறிஸ்த்து என்றோ வசனம் சொல்லவில்லை.
இங்கு இயேசு தன்னையும் தேவனையும் பிரித்து சொல்லும் இந்த வார்த்தையை கவனிக்க
மத்தேயு 19:17அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன்ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே;
அதே நேரத்தில் தோமா இயேசுவை என் தேவனே என்கிறார்.
யோவான் 20:28தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என்தேவனே! என்றான்.
அதை இயேசு மறுக்கவில்லை. எனவே ஒருவருக்கு இயேசு தேவனாக தெரிந்தால் என் தேவனே என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)