நமது தளத்தின் உறுப்பினர்கள் தங்கள் சொப்பனத்திலோ அல்லது நேரிலோ தூதர்களை கண்டிருந்தால் உங்கள் அனுபவங்களை பகிரலாம்.
Praise be to God.
எனக்கு எந்த தேவ தூதரையும் பார்த்த அனுபவம் எதுவும் கிடையாது பிரோதர்ஸ்.
ஆனால் என் மனைவி அநேக நேரங்களில் தூதர்களை நேராக பார்த்தது போல் பார்த்து என்னிடம் சொல்லியிருக்கிறாள்.
எனக்கு ஆச்சர்யத்தை தந்த ஒரே ஒரு சம்பவத்தை சொல்கிறேன்.
இரவு ரெஸ்ட் ரூம் செல்வதற்காக என் மனைவி எழுந்தபோது அவள் கட்டிலுக்கு அருகிலேயே ஒரு தேவ தூதன் கையில் ஈட்டியை பிடித்துக்கொண்டு மார்கச்சை எல்லாம் அணிந்து கொண்டு நின்றிருந்தானாம். அவள் இறங்க கீழே கால் வைத்தபோது அவன் காலை நகர்த்தி அவள் இறங்குவதற்கு வழி விடடானாம்.
அப்படியே ரெஸ்ட்ரூம் போய்விட்டு வெளியே வந்தபோது ஹாலில் எங்கள் பிள்ளைகள் தூங்கும் இடத்துக்கு பக்கத்தில் இன்னொரு மிக உயரமான தேவ தூதன் நின்றுகொண்டு இருந்தானாம்.
இரண்டு பேரையும் நன்றாக பார்த்ததாகவும் பார்த்துவிட்டு "நாம் பெரியவர்கள் நமக்குத்தான் பெரிய தூதன் காவலுக்கு இருக்க வேண்டும் ஆனால் சின்ன பிள்ளைகளுக்கு பெரிய தூதனும் பெரிய ஆட்களுக்கு சின்ன தூதனும் மாறி காவல் இருக்கிறார்களே என்று எண்ணியபடி திரும்ப வந்து படுத்ததாக சொன்னாள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)