யோவான் சுவிஷேச புஸ்தகத்தில், 13ம் அதிகாரத்தில், அவர் (இயேசு) துணிக்கையை யூதாஸிடம் கொடுக்கிறார். அவன் அதை பெற்றுக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்தான், என்று வசனம் சொல்கிறது.
இதை சற்று விளக்கி கூறவும்.
ஏனெனில், துணிக்கையை வாங்கும் வரை சாத்தான் காத்திருந்தானோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
யோவான் சுவிஷேச புஸ்தகத்தில், 13ம் அதிகாரத்தில், அவர் (இயேசு) துணிக்கையை யூதாஸிடம் கொடுக்கிறார். அவன் அதை பெற்றுக்கொண்டதும் சாத்தான் அவனுக்குள் புகுந்தான், என்று வசனம் சொல்கிறது.
இதை சற்று விளக்கி கூறவும்.
ஏனெனில், துணிக்கையை வாங்கும் வரை சாத்தான் காத்திருந்தானோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
இந்த காரியத்தை நான் எப்படி புரிந்து கொள்கிறேன் என்றால்.
மனுஷ குமாரன் ஒருவரால் காட்டிக்கொடுக்க பட வேண்டும் என்பது தேவ தீர்மானம்.
அதை இயேசு "உங்களில் ஒருவன் என்னை காட்டிக்கொடுப்பான்" என இயேசு சொன்னபோது எல்லோரும் "நானா நானா" என்று
கேட்கிறார்கள்
ஆனால் யாரால் காட்டிக்கொடுக்க பட வேண்டும் என்பது ஆண்டவராகிய இயேசு சுட்டிக்காட்டும் வரை பிசாசுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது யாரால் காட்டிக்கொடுக்க படவேண்டும் என்பதை இயேசு முடிவு செய்த பின்னரே சாத்தானால் அவருக்குள் புகுந்து அந்த செயலை செய்ய முடியுமாக இருக்கலாம்.
இப்படி பலவிதமாக சிந்திக்க முடியும்.
கர்த்தரின் தீர்மானப்படி சாமுவேலால் தாவீது தெரிவு செய்யப்பட்டு அபிஷேகம் செய்தபோது கர்த்தருடைய ஆவியானவர் அவன்மேல் வந்தது போல.
இயேசு தேவ தீர்மானத்தின் அடிப்படையில் யூதாசை தெரிவு செய்து அவனுக்கு துணிக்கையை கொடுக்கிறார் உடனே சத்துருவின் ஆவி அவனுக்குள் புகுந்திருக்கலாம்.
கர்த்தர் தாவீதை ஏதன் அடிப்படையில் தனக்கு ஏற்றவனாக கண்டு தன தாசனாக தெரிந்துகொண்டாரோ
அதேபோல்
யூதாஸையும் அவன் செய்கையின் அடிப்படையில் தெரிவு செய்திருக்கலாம்.
இவைகளை எல்லாம் என் அனுமானங்களாக சொல்கிறேன் காரணம் ஒவ்வொரு சுவிஷேஷத்திலும் சிறிது மாறுபடட கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
யூதாஸின் கிரியைகள் மூலம் அவனை இயேசு தெரிந்து கொண்டாரா தன்னை காட்டிக்கொடுப்பதட்கு? அப்படியான அவனின் செய்கைகள் என்ன இருக்கின்றன சற்று தெளிவாக கூறவும் சுந்தர் அண்ணா. வேத வசனம் அவனை பற்றி கூறுவது அவனின் செய்கைகள் பற்றி கூறுவது என்ன? வேத வசன ஆதாரம் தர முடியுமா?
இயேசு சீஷர்கள் அனைவருக்கும் பிசாசுகளை துரத்தும் அதிகாரத்தை தந்தார். ஆனால் யூதாஸ் செய்கைகள் அவன் பிற்காலத்தில் இயேசுவை காட்டிக்கொடுக்கும் அளவிற்கு கொண்டுசென்றிக்கக்கூடும்.
நான் கேட்டது, மற்ற சீஷர்கள் இயேசுவை போதகரே, ரபி என்று பலவாறு அழைத்த போதும் யூதாஸ் மட்டும் அவரை அப்படி அழைக்கவில்லை.. ஒரு பிரசங்கத்தில் நான் கேட்டது...
யூதாஸின் கிரியைகள் மூலம் அவனை இயேசு தெரிந்து கொண்டாரா தன்னை காட்டிக்கொடுப்பதட்கு? அப்படியான அவனின் செய்கைகள் என்ன இருக்கின்றன சற்று தெளிவாக கூறவும் சுந்தர் அண்ணா. வேத வசனம் அவனை பற்றி கூறுவது அவனின் செய்கைகள் பற்றி கூறுவது என்ன? வேத வசன ஆதாரம் தர முடியுமா?
எந்த ஒரு மனுஷனையும் தேவன் எந்த ஒரு தீய செயலுக்கும் தேர்ந்து எடுப்பது இல்லை. அந்தந்த மனுஷன் அவனவன் செய்கையின் அடிப்படையில் தேவனால் பயன்படுத்தப்படுகிறான்.
இப்போது யூதாஸை பற்றி முன்னமே வசனம் சொல்வதை பார்த்தால்,
4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
6. அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.
இயேசுவோடு கூட இருந்தும் யூதாஸின் செயல்பாடுகள் பணத்தை மையமாக கொண்டு செயல்பட்ட்து என்பதை அறிய முடிகிறது.
மனுஷனின் ஒவ்வொரு சிந்தனைகளும் தேவனால் சீர்தூக்கி பார்க்கப்படுகிறது. ஒருவன் என்ன செய்கிறான் என்பதைவிட அவன் எந்த நோக்கத்தில் அதை செய்கிறான் என்பது தேவனால் கவனிக்கப்படுகிறது.
இவ்வாறு 12 சீஷர்களின் செயல்பாடுகளும் தேவனால் கவனிக்கப்பட்டு இறுதியில் யூதாஸின் பண ஆசையின் அடிப்படை ஆராயப்பட்டு இந்த காட்டிக்கொடுக்கும் செயலை அவன் நிறைவேற்ற கையளிக்கப்படுகிறது.
சங்கீதம் 41:9என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம்புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்
என்ற வேத வசனமும் நிறைவேற வேண்டும் அதே நேரத்தில் தேவனும் காரணமானவர் அல்ல. அவனவன் தன சுய கிரியைனால் இழுக்கப்பட்டு சோதிக்கப்படுவதுபோல இதுவும் நடந்தது.
யூதாஸ் பண விஷயத்தில் எச்சரிக்கை அடைந்து உத்தமத்தை கையாண்டு விலகி போயிருந்தால் வேறு ஒரு சீஷன் இய இயேசுவை காட்டி கொடுத்திருக்கலாம்.
லூக்கா 17:1பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம்,
ஆம் இடறல் வருவது சகஜம் ஆனால் அதில் வீழ்வதும் விலகி நிற்பதும் அவனவன் கையில்தான் இருக்கிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)