கையில் கிடைத்ததும் கத்தியால் கிழித்து கருகும் தீயில்போட கையில் கத்தியுடன் கரையில் ஒருவன் காத்திருக்கிறான் என்பது கண் முன்னே தொங்கும் புழுவை கடித்து சாப்பிடும் மீனுக்கு நீரில் இருக்கும்வரை தெரியவே தெரியாதே!
அதை அறிந்தவர் சொன்னாலும் அதற்க்கு புரியவே புரியதே!
மாட்டிக்கொண்டு வெளியில் வந்து அறிந்தவர் சொன்னது அத்தனையும் உண்மைதான் என அறிய வரும்போதோ, அதற்க்கு தப்பித்து போக தயவு காலங்கள் கொடுக்கப்பட மாடடாது.
எனவே அறிந்ததை சொல்லவேண்டியது அடியார்கள் மேல் விழுந்த கடமையாகிறது! எங்களுக்கு அறிவிக்கப்படத்தை திரும்ப திரும்ப சொல்கிறோம்.
உங்களை பாதாளத்தில் தள்ளி பகல் இரவு வாதிப்பதற்க்காக சத்துரு எடுக்கும் சகல முயற்சிகளும் இதோ!
காசேதான் கடவுள் என்பான் ஆசை படத்தை எல்லாம் அனுபவி என்பான்.
பையில் இருப்பதை கொடுக்காதே என்பான் கையில் கிடைத்ததை சுருட்டு என்பான்.
லஞ்சம் கிடைத்தால் விடாதே என்பான் வஞ்சம் வைத்து பழிதீர் என்பான்.