ஓரிடத்தில் இயேசுவிடம் இக் கேள்வி கேட்கப்பட்ட போது அதாவது இவன் இவ்விதமாய் பிறக்க காரணம் இவனின் பெற்றோரின் பாவமா சாபமா என்று கேட்கப்படுகிறது என்று நினைக்கிறன் அதட்கு அவர் அப்படி அல்ல தேவனின் மகிமை இவனிடம் விளங்கும் படி இவ்விதமாய் பிறந்தான் என்று கூறினார்.
அப்படியாயின் தேவனை அறியாத குடும்பங்களில் கூட அவ்விதமாய் ஊனமான குழந்தைகள் பிறக்கின்றனர் அவர்களிடமும் தேவனின் மகிமை எப்படி விளங்கும்? அவர்கள் தேவனை அறியாதவர்களே..
சிஸ்ட்டர் இந்த கேள்விக்கான பதிலை நான் வேதாகமத்தின் உள்ளபடி ஆண்டவராகிய இயேசுவின் வார்த்தையின் அடிப்படையில் விளக்கினால் என் பதில் இதுதான்
அதாவது எந்த ஒரு மனுஷனும் ஊனமாக பிறப்பது தேவ நாமம் மகிமைப்பட வேண்டும் என்பதற்குத்தான் எப்படியெனில்
ஒருவருக்கு குழந்தை ஊனமாக பிறக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அப்பிள்ளையின் தாய் தகப்பன்கள் அந்த உணத்தினிமித்தம் ரொம்பவம் மனம் வருந்தி இறைவனை தேடி அவரை விடாப்பிடியாக மாற்றாடி கேடடால் அந்த பிள்ளைக்கு தேவனால் விடுதலை கிடைக்கும் அதனிமித்தம் தேவ நாமம்
மகிமைப்படும்.
அப்படியே இல்லாமல் அந்த தாய் தகப்பன் எதோ விதி என்று எண்ணி இறைவனை தேடாமல் விட்டுவிடடால் அந்த பிள்ளை வளர்ந்து பெரியவாகும் பொது அது தன ஊனத்தினிமித்தம் மிகவும் நொந்து தன்னை படைத்த்த இறைவனை நோக்கி அழுகையோடு மன்றாடும்போது அந்த ஊனம் குணமாகும்
இப்படி பல சம்பவங்கள் நடந்து சாட்சிகளை கேள்விப்பட்டிருக்கிறோம்.
எனவே தேவன் தன நாமத்தை ஊனத்தின் மூலம் மகிமைப்படுத்த தயாராக இருக்கிறார்.
அதை அறிந்து பெற்று கொள்வதும் பெற்று கொள்ளாமல் ஊனமாகவே வாழ்ந்து முடிவதும் அந்தந்த மனுஷன் கையில் இருக்கிறது.
ஏசாயா 59:1இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்படியாயின் தேவனை அறியாத குடும்பங்களில் கூட அவ்விதமாய் ஊனமான குழந்தைகள் பிறக்கின்றனர் அவர்களிடமும் தேவனின் மகிமை எப்படி விளங்கும்? அவர்கள் தேவனை அறியாதவர்களே..