மும்பொரு நாளில் என் திருமணத்துக்கு முன்னர் நான் மும்பையில் வசித்து வந்தேன்!
கர்த்தரை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் வாழ்ந்த காலம் அது! ஆண்டவரை அறிந்தும் அறிவற்றவனாக இருந்த நாடகள் அது!
ஒருநாள் வேலைக்கு 92Ltd BEST பஸ்ஸில் நான் பயணம் செய்துகொண்டு இருந்தபோது எனக்கு எதிர் சைடில் ஒரு ஸ்திரி (பிறன் மனைவி) அமர்ந்திருந்தாள். மிகவும் அழகாக இருந்த அவளை பலமுறை நோடடமிடட நான், நமக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன் (மும்பையில் ஆண் பெண் பாகுபாடின்றி ஒரே இருக்கையில் அமர்ந்து செல்லலாம்)
நான் நினைத்துதான் தாமதம், அந்த பெண் அங்கிருந்து எழுந்து என் இருக்கைக்கு முன் இருக்கையில் வந்து அமர்ந்துவிடடாள். நான் கை பிடித்திருந்த இடத்துக்கு பக்கத்தில் அவளின் கழுத்து மற்றும் திறந்த முதுகு பகுதி.
லேசாக தொட்டு பார்த்தேன் எந்த ரீஆக்சனும் இல்லை. இன்னும் கொஞ்சம் அதிகமாக தொடடேன் நோரெஸ்பான்ஸ். நல்லாவே தொட்டு பார்த்து விடடேன். என் மாம்சம் எல்லாம் அந்த ஐந்து நிமிட அற்ப சுகத்தில் பொங்கி வழிந்தது.
சிறிது நேரத்தில் நான் இறங்கும் இடம் வந்தது இறங்கி விடடேன். இறங்கியதுதான் தாமதம் என் மனதுக்குள் எதோ ஓன்று குடைய ஆரம்பித்து விட்ட்து. நீ அடுத்தவன் மனைவியை ஆசையோடு தொட்டுவிடடாய் அதற்க்கான தண்டனை ஆக்கினை (நரகம்) நீ தப்பவே முடியாது. என்பதுபோல் பேச ஆரம்பித்து, ஒரு மிகப்பெரிய குற்ற மன சாட்சியை உண்டாக்கி விட்ட்து.
என் சமாதானம் எல்லாம் போய், நரத்தை நினைத்து பயம் தொற்றிக்கொண்டது. நான் தப்பவே முடியாதா? மன குடைச்சலை போக்குவதற்காக வேண்டாம் என்று விட்டிருந்த சிகரெட் பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்தேன். எல்லாமே போச்சு இனி உனக்கு அவ்வளவுதான் என்று சத்துரு ஓதிக்கொண்டே இருந்ததால். இனி எதை செய்தால் என்ன என்று எண்ணி, தண்ணி/ பான் பராக் என்று நான் விட்டுவிட்டிருந்த எல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிடடேன். என் மனசாட்சியை சமாதான படுத்தவே முடியவில்லை.
பின்னர் என்ன செய்தும் சமாதானம் இல்லாத நிலையில். கர்த்தர் ஒருவரே வழி என்று அறிந்துகொண்டு கர்த்தரிடம் அதற்காக வேண்ட ஆரம்பித்தேன் அந்த பாவத்தை என்னைவிட்டு நீக்கிப்போடும் என்று மாற்றாடினேன். அழுதேன் கெஞ்சினேன்.
இறுதியில் ஓர் நாள் மதியம் சுமார் ஒரு மணிக்கு வீட்டில் பலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது திடீர் என என்னை யாரோ கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் போடடதுபோல் உணர்ந்தேன். அவ்வளவுதான், கொதிக்கும் எண்ணெயில் போடட மனுஷன் எப்படி துடிப்பானோ அதுபோல் தரையில் கிடந்தது கொடூரமாக துடிக்க ஆரம்பித்து விடடேன். நரக வேதனையை அப்படியே அனுபவித்து. அங்கும் இங்கும் புரண்டு யார் பிடித்தும் என்னை தடுக்க முடியாமல் துடித்தேன்.
நான் எத்தனை நிமிடம் அந்த சுகத்தை அனுபவித்தேனோ ஏறக்குறைய அத்தனை நிமிடம் அந்த கொடிய வேதனையையும் அனுபவித்து பின்னர் தானாக நின்றுபோனேன்.
"தொடுகிற எவனும் அக்கினிக்கு தப்பான" (தப்பவே முடியாது) என்று வசனம் திடடமாக சொல்கிறது.
அலுவலகத்தில்எ னக்கு பக்கத்திலேயே அதுபோன்ற பாவங்கள் அரங்கேறிக்கொண்டு இருப்பதால் எச்சரிக்கை பதிவாக இதை எழுதுகிறேன்.
அப்படியொரு பாவம் உங்கள் வாழ்வில் இருந்தால் இப்பொழுதே மன்னிப்பு கேட்டு மனம்திரும்பி அழுது இயேசுவின் இரத்தத்தால் மீண்டும் ஒரு முறை அதை கழுவி சுத்திகரித்து அதைவிட்டு விலகி ஓடுங்கள்.
இல்லையேல் நான் சொல்லவில்லை வசனம் சொல்கிறது
"அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்"
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)