கடந்த நாளில் ஒரு பேஸ்புக் வீடியோ ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில், சாலையில் ஒருவர் குனிந்து பைக் ரிப்பர் பண்ணிக்கொண்டு இருக்கும்போது அந்த பக்கம் வரும் ஒருவர் அந்த பைக் ஆளின் பின் பாக்கெட்ல் இருந்து பர்ஸை எடுத்துவிடுவார். பின்னர் அவர் சுற்றும் மூன்றும் பார்க்கும்போது அங்கு நடப்பதை ஒரு CCTV கேமரா பதிவு செய்வதை அறிந்த உடன் பயந்துபோய் அந்த கேமராவை பார்த்து ஒரு கும்பிடுபோட்டுவிட்டு அந்த பர்ஸை பக்கத்தில் கீழே போட்டு அந்த பைக் நபரை கூப்பிட்டு "உங்கள் பர்ஸ் கீழே கிடைக்கிறது" என்பது போல் சொல்லிவிட்டு, மிகுந்த பயத்துடனே அந்த இடத்தை விட்டு கடந்து போவதுபோல் இருந்தது.
சற்று யோசித்து பாருங்கள்! நாம் செய்யும் ஒவ்வொரு காரியமம் யாராலோ எங்கோ கவனிக்கப்படுகிறது என்பதை நாம் அறியும் போது நமது நடை உடை பாவனை எல்லாமே எவ்வளவாய் மாறிப்போகிறது. ஒரு கெடுதல் செய்ய பயப்படுகிறோம், பிறரை ஏமாற்ற / சுய இச்சையை வெளிக்காடட தயங்குகிறோம் அடுத்தவர் முன்னர் நம்மை நல்லவராக கட்டிக்கொள்ள அதிக பிரயாசம் எடுக்கிறோம். நமது உண்மையான முகத்தை ஆமை ஓட்டுக்குள் மறைத்துக்கொண்டு ஒரு மாறுபட முகத்தை உலகுக்கு காட்டுகிறோம்.
ஆனால் அந்த கேமராவும் சரி எந்த ஒரு மனுஷனும் சரி நமது புற தோற்றத்தை மற்றும் செயல்படடை மட்டுமே கவனிக்கவோ பார்க்கவோ முடியும். நம் அக அதாவது இருதய நினைவுகளை அவர்களாலோ கேமெராவாலோ அறிய முடியாது. இப்படி இருக்கும் பட்ச்சத்தில், நம் இருதய நினைவுகளை எல்லாம் எல்லோருக்கும் வெளிச்சம் போட்டும் ஒரு கருவி இருந்தால் நாம் எவ்வளவு பயந்து நம் சிந்தனையில் கூட பாவம் செய்ய பயப்படுவோம் அல்லவா?
ஆனால் உண்மையில் பார்த்தால் நம் இருதய சிந்தனைகள் மற்றும் செய்கைகள் எல்லாமே நம்மை உண்டாக்கிய இறைவனாலும், தேவனின்எதிரியான
சாத்தானாலும் மற்றும் அநேக சக்திகளாலும் கவனிக்கப்படுகிறது. அது நம் மனுஷ கண்களுக்கு தெரியாத காரணத்தால் நாம் அதை பொருட்படுத்துவது இல்லை.
அவர்கள் தாங்கள் பார்த்ததை ஒருநாளில் எல்லோருக்கு முன்னும் பகிரங்கமாக கூறுவார்கள் என்பதிற் ஆண்டவர் சொல்லும் இவ்வார்த்தையில் இருந்து சுலபமாக அறிய முடியும்:
லூக்கா 12:3ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அதுவீடுகளின்மேல் கூறப்படும்.
ஆம் நீங்கள் யாருக்குமே தெரியாது என்று எண்ணிக்கொண்டு மறைவாக செய்த காரியங்கள் எல்லாமே கண்ணுக்கு தெரியாத கேமராக்களால் படம்பிடிக்கப்படுகிறது . அது எல்லாமே வெளிச்சத்தில் போட்டு காண்பிக்கப்படகும் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?
முக்கியமாக நம்மை உண்டாக்கிய தேவன் நம் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு இருக்கிறார். ஒரு நாளில் எல்லாவற்றையும் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் என்று வேதம் தெளிவாக சொல்கிறது.
பிரசங்கி 12:14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
மனுஷனால்ம் உண்டாக்கிய கேமராவே இன்னொரு மனுஷனையும் அங்க அசைவுகளை அப்படியே படம்பிடித்து காட்டும்போது மனுஷனையே உண்டாக்கியவர் ஞானம் எப்படியிருக்கும்?
அவர் சாதாரணமானவன் அல்ல! உள்ளிருதயங்களை ஆராயக்கூடியவர் இருதய நினைவுகளை வரையறுக்கக்கூடியவர் என்று வேதம் சொல்கிறது.
அப்படிபடட தேவனுக்கு நாம் எவ்வளவாய் பயந்து நம் நடை உடை பாவனைகளை சீர் செய்ய வேண்டும்.
அப்படி செயகிறோமா?
நாளை நாம் அந்தரங்கத்தில் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம் மனதில் ஓடிய ஒவ்வொரு கேடுகெடட எண்ணங்களும் அடுத்தவனை ஏமாற்றி அபகரித்த ஒவ்வொரு காசும், அடுத்தவனை பற்றி சிந்தித்த ஒவ்வொரு கபாடான எண்ணங்களும் எல்லோருக்கும் முன்னால் பகிரங்க படமாக போட்டு காடடபடடால் அங்கு நாம் வெட்க்கப்படாமல் இருக்க முடியுமா?
சற்று யோசியுங்கள் அன்பர்களே! நமது ஒவ்வொரு நடக்கைகளை இன்றே தேவ வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்த்து சீர்செய்வோமாக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)