தேவன் திரித்துவமானவர் என்பதற்கு எப்படி நேரடி வசன ஆதாரம் கிடையாதோ அதுபோல் இதற்கும் நேரடி வசன ஆதாரம் சொல்ல முடியாது ஆனால் சில பல வசனங்கள் மூலம் புரிய முடியும்.
திரித்துவம் - 1 வது ஆள்த்துவம்
பிதாவாகிய தேவன் - தேவ ஆவியானவர் -(தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
ஆதி 1:2)
I சாமுவேல்10:10அப்பொழுது தேவனுடைய ஆவிஅவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான்.
சங்கீதம் 110:1கர்த்தர்என்ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
இதில் கர்த்தர் என்பது கர்த்தராகிய தேவன் / ஆண்டவர் என்பது ஆண்டவராகிய இயேசு
கர்த்தராகிய தேவன் ஆண்டவராகிய இயேசுவை நோக்கி, "நான் உம்முடைய சத்துருக்களை பாதப்படியாகி போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்."
அவ்வசனபடியே இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்று வேதம் சொல்கிறது
அவ்வாறிருக்க பூமியில் சந்துருவை பாதப்படியாக்கிப்போடும் செயலை தற்போது செய்துகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவரே கர்த்தராகிய தேவன்.
புரித்தால் எடுத்துகொள்ளுங்கள் இதற்குமேல் என்னிடம் விளக்கம் இல்லை சிஸ்ட்டர் அனுபவ அறிவுதான் உண்டு.
-- Edited by SUNDAR on Friday 28th of June 2019 07:49:16 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)