சிஸ்ட்டர் உங்கள் கருத்து சரியானதா என்பதை தீர்மானிக்க கீழ் கண்ட வசனத்தில் "தேவர்கள்" என்ற வார்த்தை யாரை குறிக்கிறது என்று சற்று யோசியுங்கள்
யாத்திராகமம் 12:12 அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
எகிப்த்து தேவர்கள் வெறும் கல்லும் மண்ணும் என்றால் அந்த உயிரற்ற பொருட்க்கள் மேல் நீதி செலுத்த கர்த்தருக்கு என்ன அவசியம் வந்தது?
அடுத்து, ஆதாம் ஏவாளிடம் சாத்தான் இவ்வாறு சொல்கிறது:
5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்
இவ்வசனத்தின் மூலம் ஆதாம் ஏவாள் பாவம் செய்து நன்மை தீமை அறியும் கனியை புசிக்கும் முன்னேயே "நன்மை தீமை" என்னவென்பதை அறிந்த தேவர்கள் இருந்தார்கள் என்று அறிய முடிகிறது.
சரி அது சாத்தன் சொன்னது என்று விட்டுவிடடாலும் கீழே கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை சற்று கவனியுங்கள்
4. நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
6. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்?
7. அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
அதாவது பூமி அஸ்திபார படுத்தப்படும்போதே தேவ புத்திரர்கள் அநேகர் இருந்து கெம்பீரித்தார்கள் என்று கர்த்தரே சொல்கிறார்.
அந்த தேவ புத்திரர்கள் அதாவது "son of god" யார்? இங்கு "தேவ புத்திரர் எல்லோரும்" என்று பன்மையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் அது அது தேவ குமாரனாகிய இயேசுவை குறிக்கவில்லை வேறு யாரோ அநேகரை குறிக்கிறது.
இதுபோன்ற பல வசனங்களை ஆராய்ந்தால் "தேவர்கள்" என்றோரு கூடடம் ஆதாம் ஏவாள் படைப்புக்கு முன்னமே இருந்தது. அவர்களைத்தான் ஜனங்கள் விக்கிரகங்களாக செய்து வழிபடடனர். அவர்களுக்கும் சில வல்லமைகளை இருந்தது ஆனால் நம் கர்த்தர் எல்லோரையும் விட மிகப்பெரியவர் என்று வசனம் சொல்கிறது
சங்கீதம் 135:5கர்த்தர்பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
அவரை அறிந்தவர்கள் தவிர வேறு எந்த தேவரையும் வணங்க கூடாது என்று திடமாக அவர் கடடளையிட்டுளளார்
-- Edited by SUNDAR on Friday 27th of April 2018 11:49:01 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
யாத்திராகமம் 12:12 அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசமெங்கும் கடந்துபோய், எகிப்து தேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர்.
தேவர்களுக்கு ஏன் நீதியை நம் தேவன் செலுத்த வேண்டும்.
எனக்கு புரியவில்லை.
மேலும் 7. அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே
தேவ புத்திரர் மற்றும் தேவர்கள் இரண்டும் ஒன்றா?
அத்துடன் இத் தேவ புத்திரர்கள் கெம்பீரித்தார்கள் என்று சொல்லப்படுகிறது அப்படியாயின் இந்த தேவர்கள் நம் தேவனுக்கு விரோதமானவர்கள் இல்லையா?
அவர்களுக்கு எப்படி வல்லமை வந்தது.. எப்படி உருவானார்கள் ?
///தேவர்களுக்கு ஏன் நீதியை நம் தேவன் செலுத்த வேண்டும்.////
நீதி எங்கு செலுத்தப்பட்டும்? அநீதி இருக்கும் இடத்திலேயே நீதி செய்ய வேண்டி வரும், இந்த தேவர்கள் பாவம் செய்ததால் கர்த்தர் அவர்களை எச்சரிப்பதோடு நீதியும் செலுத்தவேண்டி வந்தது.
2. எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)
மேலும் 7. அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே
///தேவ புத்திரர் மற்றும் தேவர்கள் இரண்டும் ஒன்றா? ///
தேவர்களுடைய வாரிசுகள் தேவ புத்திரர்கள். இவர்கள் மனுஷ குமார்த்திகளுக்குள் பெண்களை தெரிந்துகொண்டனர்.
ஆதியாகமம் 6:2தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்.
இப்படி தேவனால் படைக்கப்படட மனுஷர்களாகிய தேவர்கள் / தேவ புத்திரர்கள் மற்றும் ஆதாமின் வழி வந்த மனுஷர்கள் எல்லோரும் ஒரே நிலைக்கு வந்து சேர்ந்தனர்!
///அத்துடன் இத் தேவ புத்திரர்கள் கெம்பீரித்தார்கள் என்று சொல்லப்படுகிறது அப்படியாயின் இந்த தேவர்கள் நம் தேவனுக்கு விரோதமானவர்கள் இல்லையா?///
இல்லை!
அவர்கள்தான் முதலாம் நிலை மனுஷர்கள். அவர்கள் தேவனால் படைக்கப்பட்ட்தால் தேவர்கள் என்றும் அவர்களின் வாரிசுகள் தேவ புத்திரர்கள் என்றும் சொல்லப்படடார்கள். முதலில் பாவத்தில் வீழ்ந்தவர்கள் இவர்களே. அந்த பாவத்தின் தொடர்ச்சிதான் ஏதேன் தோடடத்தில் சர்ப்பமாக இருந்தது. இந்த தேவர்களை குறித்துதான் சர்ப்பம் "நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களை போல் இரூபிப்பீர்கள்" என்று சொன்னது.
//அவர்களுக்கு எப்படி வல்லமை வந்தது.. எப்படி உருவானார்கள் ?//