யோசேப்பின் வாழ்க்கையில் அவன் அநேக துக்கங்களை அனுபவித்தான்.. தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்டான். இவனின் வாழ்க்கை தேவ திட்டமா ? அல்லது சாத்தான் யோசேப்பை கஷ்டப்படுத்தினானா?
யோசேப்பு மூலம் பின்னர் யாக்கோபு பஞ்ச காலத்தில் போஷிக்க பட்டு யாக்கோபுக்கு தேவையானவைகளை செய்கிறான் ..
எனவே இது தேவ திட்டமா ? அவன் சகோதரர்கள் மூலம் விற்கப்படுவது? சிறைக்கு போவது ? இவைகள் எல்லாம் தேவ திட்டமா?
யோசேப்பு மட்டுமல்ல சிஸ்ட்டர் தானியேல் / யோபு போன்றவர்கள் கூட அதிகம் துன்பத்தை அனுபவித்து இருக்கிறார்கள்.
தேவன் ஒவ்வொருவரை படைக்கும்போதும் ஒரு மேலான திடடத்தோடுதான் படைக்கிறார் அதை அறிந்து சரியாக செய்து முடிந்த்தவன் தேவன் பார்வையில் மேன்மை அடைகிறான்.
தவறி தவறி தடுமாறி விழுந்துபோகும் சிம்சோன் / சவுல் போன்றவர்கள் நமக்கு திருஷ்டாந்திரமாக உள்ளனர்.
எல்லோர் மேலும் தேவ திடடம் உண்டு அதற்க்கு அவர்கள் வேதனை அடையவேண்டும் என்று அவசியம் இல்லை. .
பொன் புடமிட படுவதன் நோக்கம் அதனோடு ஒட்டியிருக்கும் அசுத்தம் நீக்கப்படவையும் அதை பயனுள்ள ஆபரணமாக செய்யவும்தான்
மனுஷன் பாவத்தில் கர்ப்பம்தரிக்க படுவதால், இந்த உலகத்தில் மனுஷனாக பிறந்தவனுக்கு உலக பாவனைகள் தானாக ஒட்டிக்கொள்ளும். நம் இருதயம் திறக்கப்படடால்தான் நாம் எவ்வளவு அருவருப்பாக இருக்கிறோம் என்பதை அறிய முடியும். மற்றபடி இந்த அடைக்கப்பட்டுள்ள இருதயத்தை வைத்து நம் குறைகளை காணவே முடியாது.
வேதனை துன்பம் சோதனை வருவதற்கு காரணம் அவன் மேல் ஒட்டியிருக்கும் இந்த உலகத்தின் பற்றை நீக்கி அவனை தேவனுக்கு ஏற்ற பரிசுத்த படுத்தவே நடைபெறுகிறது.
உலகத்தில் உயர்வை பெற பல வழிகள் இருக்கிறது ஆனால் தேவன் மூலம் உயர்வை பெற ஒரே வழி நாம் உத்தமன் எந்நிலையிலும் தேவனை தவிர வேறு யாருக்கு அடிபணிய மாடடேன் என்று அவருக்கு நிரூபிப்பதுதான்.
அவ்விஷயத்தில் யோசேப்பு / தானியேல் / யோபு போன்றோர் எல்லா சோதனைகளிலும் ஜெயித்து உத்தமன் என்று நிரூபித்த பின்னால் உயர்வு கிடைத்தது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
வேதனை பட அவசியம் இல்லையேல் ஏன் யோசேப்பு / தானியேல் போன்றவர்கள் வேதனை அனுபவித்தார்கள் ?
ஒட்டியிருக்கும் அசுத்தம் நீக்கி எம்மை சுத்திகரிக்க நாம் வேதனை அனுபவிக்காமல் தேவனால் செய்ய முடியும் அல்லவா? மனுஷன் வேதனைபடுவது தேவனுக்கும் வேதனையை தானே தரும் இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது?
///ஒட்டியிருக்கும் அசுத்தம் நீக்கி எம்மை சுத்திகரிக்க நாம் வேதனை அனுபவிக்காமல் தேவனால் செய்ய முடியும் அல்லவா? மனுஷன் வேதனைபடுவது தேவனுக்கும் வேதனையை தானே தரும் இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது?//
தேவன் மனதார யாரையும் வேதனை படுத்துவது கிடையாது என்று புலம்பல் புத்தகத்தில் சொல்லிவிடடார்.
அப்படியெனில் தவிர்க்க முடியாத நிலையில் அதை அனுமதிக்கிறார்.
நாம் பெற்றிருக்கும் இந்த ரத்தமும் சதையுமான மாம்சம் என்பதே வேதனை அனுபவிக்க பிறந்ததுதான்.
அதாவது இந்த சரீரமே பாவ சரீரம் தேவன் செய்ய சொல்வதை செய்யாது தேவன் வெருப்பத்தை ஆசை ஆசையாக செய்யும்.
அதை பெரிய பரிசுத்தவானாகிய பவுல் சொல்கிறார்
ரோமர் 7:14. நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.
15. எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்
மாம்சமாக இருக்கும் எல்லா உயிர்களும் வேதனை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது.
மாம்சமுள்ளவரை நோவு உண்டு காரணம் இந்த மாம்சமே பாவத்தின் பிரதிபலிப்பே.
பரிசுத்தராகிய இயேசுவே என்னை நல்லவனென்று சொல்வானேன் தேவனை தவிர நல்லவன் ஒருவனும் இல்லை என்று சொன்னார்.
யாக்கோபு 3:2 நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்
மீறுதல் இல்லாமல் யாரும் இங்கு வாழ முடியாது எனவேதான்
ஆண்டவர் உலகத்தில் உபத்திரவம் உண்டு என்று சொன்னார்.
ஆதாம் ஏவாள் தேவ மகிமையால் மூடப்பட்டு இருந்தனர் எப்பொழுது தேவ மகிமை விலகி மரணத்தின் சாயல் மாம்சத்துக்கு வந்ததோ அன்றே வேதனையும் ஆரம்பமானது மீண்டும் அந்த மகிமையின் சாயலுக்கு திரும்பும் வரை மாம்சத்துக்கு நோவு தவிர்க்க முடியாதது.
தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் இந்த பூலோகத்திலும் செய்யப்படும் நிலை வந்தபின்னால் மட்டுமே இந்த நோவு வேதனை தீரும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)