இந்த உலகத்தில் காலம்காலமாக நடக்கும் கொடுமைகள் வேதனைகள் கொல்லுதல் அழித்தல் சித்திரவதை செய்தல் குறித்து மிகவும் வேதனை அடைந்து ஆண்டவரை நோக்கி பல நாடகள் அழுது "என் இந்த உலகம் ஏன் இப்படி சீர்கெட்டு இருக்கிறது இதை சீர் செய்யவே முடியாதா? இந்த வேதனை மிகுந்த உலகத்தை ஏன் படைத்தீர்? என்னை என் இங்கு வர அனுமதித்தீர் என்றெல்லாம் பல கேள்விகளை எழுப்பியபோது.
1993ம் வருடம் ஆண்டவர் இந்த உலகம் தோன்றியதில் இருந்து இன்று வரை நடந்துகொண்டிருக்கும் போராடடமும் அதற்கான காரணமும் குறித்து
தெளிவாக விளக்கினார். அது என் தலையில் அப்படியே பதிவிறக்கம் செய்யப்பட்ட்து. தேவன் தன வேதனையின் உச்சத்தில் வெளிப்படுத்திய அந்த அநேக காரியங்களையும் அதற்கான தீர்வு என்னவென்பதையும் நான் அறிந்து கொண்டுள்ளேன்.
தீமையை ஒழிக்க தேவனுக்கு கீழ்ப்படிந்து வேத வசனங்களை நம் நடைமுறை வாழ்வில் கைக்கொண்டு வாழ்வதை தவிர வேறு வழியே இல்லை. இன்று அநேகர் ஏதாவது சாக்கு சொல்லி வேத வசனங்களை கைக்கொண்டு நடக்க பிரயாசம் எடுப்பதில்லை.
ஏசாயா 8:20 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
எரேமியா 11:3 என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான்உங்கள் தேவனாயிருப்பேன்;
எல்லோரும் எல்லாம் பற்று சுகமாக நலமாக தீங்கில்லாத மரணம் / முதுமை இயலாமை பற்றாக்குறை என்ற கொடுமைகள் ஏதும் இல்லாமல் என்றென்றைக்கும் வாழ வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு அதுவே தேவனின் எதிர்பார்ப்பும் கூட. அதற்காக மட்டுமே நான் கடந்த 25 வருடமாக போராடி வருகிறேன்.
ஏசாயா 25:8 அவர் மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
கர்த்தரே இதை சொல்லியும் இருக்கிறார் அதை நிறைவேற்றவும் போகிறார். அதற்க்கான வழியை என்னிடம் போதித்தும் இருக்கிறார். அதை மாத்திரமே என் முழு மூச்சாக நான் செய்து வருகிறேன்.