தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
இதில் பாவம் செய்கிறவன் நல்லவனுக்கு தொல்லையை சேர்த்து வைக்க தேவன் நியமித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது?
Debora
"இதில் பாவம் செய்கிறவன் நல்லவனுக்கு தொல்லையை சேர்த்து வைக்க தேவன் நியமித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது?"
இதன் பொருள் நல்லவனுக்கு தொல்லை சேர்த்து வைப்பது அல்ல சிஸ்ட்டர்.
கீழேயுள்ளதை சற்று நிதானமாக படியுங்கள்
பாவஞ்செய்கிறவனுக்கோ, தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்
தேவனின் பார்வைக்கு நல்லவனாக இருப்பவனுக்கு தேவையானவைகளை சேர்த்து குவித்து வைத்துவிட்டு போகும் தொல்லையை பாவம் செய்பவனுக்கு தேவன் நியமித்திருக்கிறார்.
அதாவது
பாவம் செய்து சம்பாதிப்பவன் எல்லாம் அந்த சம்பாத்தியத்தை தேவன் பார்வைக்கு நல்லவனாக இருப்பவனுக்காகவே சேர்த்து வைக்கிறான்
என்பதுபோல் சொல்லப்பட்டுள்ளது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)