இந் நாட்களில் அதிக பெலவீனமாயிருக்கிறது. எதாவது ஒரு பெலவீனத்தின் நிமித்தம் கஷ்டப்படுகிறேன். ( வயிறு வலி, தலை வலி இப்படி எதாவது ஒன்று வந்த வண்ணமே உள்ளது ) எனவே எனக்காக ஜெபித்துக் கொள்ளுபடி கேட்டுக் கொள்கிறேன்.
ஏன் இப்படி ஒன்று போனால் ஒன்று என்று யோசிக்க தோணுகிறது ..
எனது தாயாரும் பஸ்சில் விழுந்து விட்டார்கள் அவர்களும் நடக்க கூட கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்காகவும் ஜெபிக்கவும்.
உங்கள் சரீர சுகத்துக்காக நிச்சசயமாக ஜெபிக்கிறேன் சிஸ்ட்டர். கர்த்தர் பரிபூரண சுகத்தை கடடளையிடுவாராக.
மேலும் இந்த சரீர பிரச்சனைகளில் இருந்து விடுபட என்னுடைய அனுபவ ஆலோசனைகளை தருகிறேன். விருப்பம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.
பழைய ஏற்பாடு - சரீரத்துக்குரியது
புதிய ஏற்பாடு - ஆவிக்குரியது
பழைய ஏற்பாட்டு கற்பனைகள் மீறப்படுவதால் சரீர பெலகீனத்தை சத்துரு கொண்டுவருகிறான் .
முக்கியமாக ஓய்வுநாள் கற்பனை.
ஆறுநாளும் வேலை செய்து ஏழாம் நாளில் ஓய்ந்து இருக்க வேண்டும் அது எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஓய்வுநாளில் செய்ய கூடாதவைகள்
1. பணம் சம்பாதிக்கும் வேலை எதுவும் செய்யக்கூடாது.
2. சொந்த பேச்சுகளை/ வேலை சம்பந்தமான பேச்சுகளை பேசக்கூடாது
3. நமக்கு பிரியமான எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது.- டிவி பார்ப்பது /செல்போன் பயன்படுத்துவது போன்றவை
(கர்த்தர் சம்பந்தப்படடவைகளை செய்யலாம்)
4. பிரயாணம் போகாமல் இருப்பது நல்லது
5. பணம் கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்க வேண்டும்.
கர்த்தருடைய ஆயுவுநாளை மகத்துவமான நாள் என்று எண்ணி இவற்றை நீங்கள் ஒவ்வொன்றாக முயச்சித்து பாருங்கள். உடனடி பலனை காண்பீர்கள்.
உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் தாயாருக்கும் விடுதலை கிடைக்கும்.
ஏசாயா 58:13என்பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடையபரிசுத்தநாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,14. அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்,
உபாகமம் 7:11. ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக.12. இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால் 15கர்த்தர்சகலநோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்;