இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழுள்ள வசனங்களில் ஆண்டவரை சோதிக்க மாட்டேன் என்று சொல்லும் ஆகாஷை பார்தி ஏன் ஏசாயா தேவனை விசனப


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
கீழுள்ள வசனங்களில் ஆண்டவரை சோதிக்க மாட்டேன் என்று சொல்லும் ஆகாஷை பார்தி ஏன் ஏசாயா தேவனை விசனப
Permalink  
 


கீழுள்ள வசனங்களில் ஆண்டவரை சோதிக்க மாட்டேன் என்று சொல்லும் ஆகாஷை பார்தி ஏன் ஏசாயா தேவனை விசனப்படுத்த பார்க்கிறீர்களா என்று கேட்கிறார்? 
 
மேலும் அசீரிய ராஜாவை உங்கள் மேல் வரப்பண்ணுவேன் என்று ஏன் சொல்கிறார் ?
 
ஏசாயா 7: 13- 20
 
அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
 
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
 
தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.
 
அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.
 
எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்
 
அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார்.
 
அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும்.
 
அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால் தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து தாடியையும் வாங்கிப்போடுவிப்பார்.
 
விளக்கவும்


__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

  1. தங்களின் இந்த கேள்விக்கு சரியான பதில் அறிய தாமதம் ஆனதால் பதிவிட முடியவில்லை 
வசனத்தை நன்றாக படித்தால்:
 
10. பின்னும் கர்த்தர ஆகாசை நோக்கி  நீ உன் தேவனாகிய  கர்த்தரிடத்தில ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார். 12. ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் 
கர்த்தரப் பரீட்சைசெய்யமாட்டேன் என்றான்.
 
வசனப்படி,  கர்த்தர் ஆகாஸை நோக்கி ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள் என்று சொல்கிறார்.
 
கர்த்தரே ஒரு காரியத்தை செய் என்று சொன்ன பிறகு அதற்க்கு எதிர் கேள்வி ஏது?  
 
ஆனால் ஆகாஸோ கர்த்தருக்கு புத்தி சொல்வதுபோல் நான் கேட்க்க மாடடேன் என்று சொல்கிறான்.
 
அது தேவனை விசனப்படுத்தும் செயல்!
 
கர்த்தர் சொல்வதை சொன்ன நேரத்தில் செய்ய வேண்டும் அவர் பேச்சுக்கு நாம் எதிர் பேச்சு பேச கூடாது.  நமது நீதியை தேவன் முன் காண்பிக்க கூடாது 
 
எனவேதான் 
ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் 
விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?  
 
என்று சொல்ல வேண்டி வந்தது என்பது வசன அடிப்படையில் எனக்கு கிடைத்த வெளிச்சம்.


-- Edited by SUNDAR on Wednesday 5th of December 2018 06:29:56 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

superb anna thnx

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard