கீழுள்ள வசனங்களில் ஆண்டவரை சோதிக்க மாட்டேன் என்று சொல்லும் ஆகாஷை பார்தி ஏன் ஏசாயா தேவனை விசனப்படுத்த பார்க்கிறீர்களா என்று கேட்கிறார்?
மேலும் அசீரிய ராஜாவை உங்கள் மேல் வரப்பண்ணுவேன் என்று ஏன் சொல்கிறார் ?
ஏசாயா 7: 13- 20
அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார்.
அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும்.
எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார்
தங்களின் இந்த கேள்விக்கு சரியான பதில் அறிய தாமதம் ஆனதால் பதிவிட முடியவில்லை
வசனத்தை நன்றாக படித்தால்:
10. பின்னும் கர்த்தர ஆகாசை நோக்கி நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார். 12. ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான்
கர்த்தரப் பரீட்சைசெய்யமாட்டேன் என்றான்.
வசனப்படி, கர்த்தர் ஆகாஸை நோக்கி ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள் என்று சொல்கிறார்.
கர்த்தரே ஒரு காரியத்தை செய் என்று சொன்ன பிறகு அதற்க்கு எதிர் கேள்வி ஏது?
ஆனால் ஆகாஸோ கர்த்தருக்கு புத்தி சொல்வதுபோல் நான் கேட்க்க மாடடேன் என்று சொல்கிறான்.
அது தேவனை விசனப்படுத்தும் செயல்!
கர்த்தர் சொல்வதை சொன்ன நேரத்தில் செய்ய வேண்டும் அவர் பேச்சுக்கு நாம் எதிர் பேச்சு பேச கூடாது. நமது நீதியை தேவன் முன் காண்பிக்க கூடாது
எனவேதான்
ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும்
விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ?
என்று சொல்ல வேண்டி வந்தது என்பது வசன அடிப்படையில் எனக்கு கிடைத்த வெளிச்சம்.
-- Edited by SUNDAR on Wednesday 5th of December 2018 06:29:56 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)