நதிகள் விருட்ச்சங்கள் மற்றும் எழிலோடு கூடிய இயற்க்கை அமைப்பு என்று ஆண்டவர் பார்த்து பார்த்து, நல்லது என்று கண்டு மனுஷனுக்காகவே அருமையாக உண்டாக்கியதுதான் ஏதேன் தோடடம்.
ஆனால் அந்த ஏதேன் தோடடத்துக்குள்ளும் ஒரு சத்துரு இருந்தான்.
அதுபோல் இன்றைய கால கட்டத்தில் உலகத்தில் நல்லதாகவும் இன்பமாகவும் இருக்கும் எல்லாவற்றிலும் தீமை என்பது ஒளிந்துகொண்டு இருக்கிறது என்பதை நாம் அறிய வேண்டும். சற்று ஏமாந்தாலும் நல்லதுபோலவே தெரியும் அந்த தீமை நம்மை ஆட்க்கொண்டுவிடும்.
நல்லவன்போல் தெரியும் எல்லா மனுஷனுக்குள்ளும் தீய குணங்கள் ஒளிந்துகொண்டு இருக்கும். கால நேரம் வரும்போது அது தன சுய புத்தியை காண்பித்துவிடும் எனவே மனுஷர்களிடத்தில் ஜாக்கிரதையாக இருங்கள்.
லூக்கா 18:19தேவன் ஒருவர் தவிர நல்லவன்ஒருவனும் இல்லையே.
பணம் பணம் என்று அலைபவனுக்கு பண ஆவி பிடித்திருக்கும் . பதவி பதவி என்று அலைபவனுக்கு பதவி ஆவி பிடித்திருக்கும்
வேலை வேலை என்று ஓடுபவனுக்கு வேலையின் ஆவி பிடித்துக் கொள்ளும்.
சினிமா சினிமா என்று ஓடுபவர்க்கு சினிமா ஆவி பிடிக்கும்.
படிப்பு படிப்பு என்று படிப்பவனுக்கு அறிவு ஆவி பிடித்துகொள்ளும்
அரசியலில் அதிக ஆர்வம் உள்ளவனுக்கு அரசியல் ஆவி பிடிக்கும்
facebookக்கும் ஒரு ஆவி உண்டு watsappக்கும் ஒரு ஆவி உண்டு gameக்கென்று தனியொரு ஆவி உண்டு.
ஏன்
ஊழியம் ஊழியம் என்று அலைபவர்களுக்கு பிடிப்பதற்குக் ஒரு கள்ளஊழிய ஆவி கூட இருக்கிறது. (இந்த ஆவி பிடித்தவர்கள்தான் "உம நாமத்தில்தானே செய்தோம்" என்று சொல்லும்போது ஆண்டவர் "உங்களை ஒருக்காலும் அறியேன்" என்று சொல்கிறார் )
சற்று தவறினால் எந்த ஆவியும் எவரையும் சுலபமாக பிடித்துவிடும். அப்படி ஒரு ஆவி நமக்குள் இருப்பது நமக்கே தெரியாது!
இந்த எல்லா ஆவியின் ஒருமித்த நோக்கம் நமது நேரத்தை திருடி தேவ வார்த்தைகளை மீரவைத்து, கீழ்படியாமைக்குள் நம்மை நடத்தி தேவனைவிட்டு எப்படியாவது நம்மை பிரிப்பதுதான்.
தேவனை விட்டு நம்மை பிரிப்பது தேவ வார்த்தைக்கு கீழ்படியவிடாமல் தடுப்பது எல்லாமே நமக்கு தேவையற்றதுதான்.
எந்த நன்மைக்குள்ளும் இருக்கும் தீமையை ஆராய்ந்து அறிந்து செய்யும் எந்த செயலையும் கர்த்தரின் வார்த்தைக்கு உட்பட்டு ஜெபத்தோடும் தாழ்மையோடும் கீழ்படிதலோடும் செய்வோமாக!
-- Edited by SUNDAR on Wednesday 21st of November 2018 04:52:27 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)