இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கடலில் பிடிக்கப்படும் மீன்களும்! கர்த்தரின் வார்த்தையும்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கடலில் பிடிக்கப்படும் மீன்களும்! கர்த்தரின் வார்த்தையும்!
Permalink  
 


கடந்த நாளில் கப்பலில் மீன் பிடிக்கும் ஒரு காணொளியை காண நேர்ந்தது.  நடு கடலில் பெரிய பெரிய தூண்டிலை போட்டு பெரிய பெரிய மீன்களை பிடிக்கிறார்கள். இஷடம்போல் வாழ்ந்த அந்த பெரிய மீன்களை இரும்பு கொக்கிகள் போட்டு  இழுக்க முடியாமல் இழுத்து கப்பலுக்குள் போட்ட்தும் ஒருவர் பெரிய இரும்பு கம்பியால் அதன் தலையில் அடி  அடி என அடிக்கிறார். அப்படியே தூக்கி ஐஸ் கட்டி போட்டு குளிர் பண்ணப்படட ஒரு குடோன் போன்ற இடத்தில் போட்டு மூடி விடுகின்றனர்.  அந்த மீன் அப்படியே உயிரோடு உறைந்துபோக வேண்டியதுதான். 
 
அதை மிகவும் கலக்கத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தபோது  ஆண்டவர் எனக்கு உணர்த்தியது::
 
இந்த உலகம் ஒரு கடல் போன்றது!
 
கடலில் வாழும்வரைதான் மீனாத்து அது இஷடம்போல செயல்பட முடியும்! அதுபோல் தேவனின் கிருபையால் பாதுகாக்கப்பட்டுள்ள இந்த உலகத்தில் நீ வாழும்வரைதான் உன் இஷடம்போல செயல்பட முடியும்! 
 
இங்கும் இன்பம் துன்பம் எல்லாமே உண்டுதான்! ஆனால் இவைகள் மனுஷன் தாங்கக்கூடிய தன்மையிலேயே தேவனால் நமக்கு குறைத்து கொடுக்கப்பட்டுள்ளன!  
 
ஆனால் மரணம் என்று ஓன்று நேர்ந்து இந்த உலகத்தை விட்டு கடந்துபோன உடனே நடப்பது என்ன தெரியுமா?
 
மேலான சரீரம்தான் சாகும்!  உள்ளன மனிதன் சாவதில்லை!  
 
தேவன் அளித்த கிருபையை பெற்று மரிப்பவர்கள் தேவன் ஆயத்தப்படுத்தியிருக்கும் நித்தியமான ஒரு நல்ல இடத்தை அடைவார்கள்!
 
தேவ கிருபையை வீணடித்தவர்களோ! 
 
மரித்த மறுகணமே அங்கு பிடிபடும் மீனைப்போல வாதிக்கிறவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். அவர்களை வாதிப்பவர்கள் எங்கு அடிப்பார்கள் எப்படி வாதிப்பார்கள் என்று சொல்லவே முடியாத அளவுக்கு  கொடூரமான வாதிப்பார்கள். அதற்க்கு பின்னர் அங்குபோய் ஆண்டவரே ஆண்டவரே என்று கதறுவதில் எந்த பயனும் இல்லை!
 
வாதிக்கும் இடத்தை நானே பார்த்து அனுபவித்தேன்! எங்கும் அக்கினி!  நாம் போடும் அலறல் சத்தம் அடுத்தவர் அனுபவிக்கும் எந்த வேதனையையும் பார்க்கவே முடியாத அளவுக்கு பெரிதாய் இருக்கும்! 
 
பிடிபடட மீன்கள் வாதிக்கப்பட்டு செத்து உணவாகும் தவிர அவைகள் திரும்பி கடலுக்குள் வருவது நடக்காத காரியம். அதுபோல் செத்துப்போன ஒருவர் திரும்பி வந்து என்ன நடந்தது என்று சொல்வது முடியாத காரியம்.
 
அப்படியே ஓரிருவர் தப்பி வந்து சொன்னாலும் அவர்கள் சொல்வதை யாரும் செவிகொடுத்து கேட்பது இல்லை. 
 
காரணம் தூண்டிலில் இருக்கும் இறைக்கு ஆசைப்பட்டு போகும் மீனைப்போல இந்த உலகத்தில் ஆங்காங்கே அள்ளி தெளிக்கப்பட்டிருக்கும் பாவ  இன்பங்கள் ஒருவரையும் மரணத்துக்கு அப்பால் என்ன இருக்கிறது என்று சிந்திக்க விடாமல் தடுத்து வைத்துள்ளது.
 
அதற்காகவே அனுதினமும் புது புது புரோகிராம்கள்  புதுப்புது பொலிவுடன் புதுப்புது கருவிகளை மூலம் அரங்கேற்றப்படுகின்றன. டிவி புரோகிராம்கள்/ சினிமாக்கள் / வாட்ஸ்அப்/  பேஸ்புக் / மது  புகையிலை போதை பொருட்க்கள் / பணம் தேடல் பிரச்சனைகள் போன்றவை நம்மை நாள்தோறும் அமுக்கி தேவனதேடவிடாமல்தடுக்கின்றன!   
 
நம்மை படைத்த இறைவனுக்கு நமக்கு தேவையானதை தரமுடியும் என்ற நம்பிக்கைஇல்லாமல் நாமே முயன்று நாடொறும் ஓடியும் என்றுமே திருப்தியில்லாத ஒரு வாழ்க்கையையே வாழ்ந்து முடிக்கிறோம்.
 
நம்மை படைத்த தேவனே மனுஷனாக பூமியில் வந்து பாவிகள் மத்தியில் சித்திரவதை பட்டு சிலுவையில் தொங்கி கொடூரமாக  மரிக்க வேண்டும் என்றால்,  நம் மரணத்துக்கு பின்னால் இருக்கும் பயங்கரம் எப்படி இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்! 
 
சாதாரணமானதாக இருந்தால் அவர் மேலே இருந்தே இந்த மீட்ப்பை முடித்திருக்கலாம்! ஆனால் அது சாத்தியமில்லாமல் போகவே அவரே மனுஷனாக இறங்கி வந்து கோர மரணம் அடைய வேண்டியதாயிற்று! 
 
இப்படி அநேக பாடுகள் மத்தியில் ஆண்டவர்  பெற்றுத்தந்த கிருபையை போக்கடித்தால் தண்டனைக்கு எப்படி தப்பிக்க முடியும்?
 
பிடிபடும் மீனைப்போல் வாதிக்கிறவனால் பிடிக்கப்பட்டு வாதிக்கப்பட போகிறீர்களா? 
அல்லது 
தேவன் உயிரையே கொடுத்து வாங்கித்தந்த கிருபையை பெற்று நித்திய சந்தோசத்தில் பிரவேசிக்க போகிறீர்களா?
 
நீங்களே முடிவு செய்யுங்கள்!
 
இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கடவுள் சொல்லுகிறார்.  எரே 21:8
 
மரண வழியில் இருந்து தப்பிக்கவும் ஜீவ வழியை அறியவும்  விருப்பம் இருந்தால் அல்லது உங்களுக்கு எதாவது  கேள்வி எழுந்தால்  பதில் சொல்ல தயாராக இருக்கிறோம்! (அருகில் இருக்கும் ஏதாவது கிறிஸ்தவ சபையை அல்லது ஆவிக்குரிய கிறிஸ்த்தவரை அணுகுங்கள்) 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

good msg

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard