தேவனின் கற்பனைகளை கைகொள்ளுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஆசீர்வாதங்களில் ஒன்றாக கர்த்தர் சொல்வதுதான்
உபாகமம் 7:15 கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; என்பது
ஆனால் ஆண்டவராகிய இயேசுவோ நம் பாவங்களை தானே சுமந்து எந்தவித நிபந்தனையும் இல்லாமல் சகல வியாதிகளையும் நீக்கி சொஸ்தமாக்கினார்.
மத்தேயு 4:23 ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
சுருக்கமாக சொன்னால் இயேசுவானவர் நிபந்தனைகளுக்குட்பட்ட நியாயப்பிரமானத்தின் ஆசீர்வாதங்க்ளை நிபந்தனை இல்லாமல் இலவசமாக வழங்கினார்.
ஆகினும் நாம் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் இயேசுவை ஏற்றுக்கொண்டு பாவத்தில் இருந்து நோயினில் இருந்து விடுதலை ஆனவர்களுக்கு எல்லாம் மீண்டும் நோய் வராமல் இருக்கிறதா?
இல்லையே! எனக்கு தெரியும் பல கிறிஸ்த்தவர்கள்/ பாஸ்டர்கள் கேன்சர் வியாதிவரை வந்து மரித்துள்ளார்கள்!
பிறகு இயேசு நியாயப்பிரமான கட்டளைகளின் மேல் பயன்படுத்திய தேவ வல்லமை எங்கே போனது ?
அதற்குதான் வெகுகாலம் வியாதியாய் இருந்து சொஸ்தமாக்கியவனுக்கு வெகு தெளிவான பதிலை இயேசு இங்கே சொல்லியிருக்கிறார்:
யோவான் 5:14 இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
பாவம் என்றால் என்ன?
I யோவான் 3:4 நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். (தேவன் சொன்ன எந்த வார்த்தையை மீறினாலும் அது பாவமே)
இங்கு பலர் நியாயப்பிரமானத்தையும் கிருபையையும் போட்டு குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதன் புரிதல் மிக சுலபம்.
ஆண்டவராகிய இயேசு ஒருவர் வாழ்வினில் வரும்போது அந்த நபர் செய்துள்ள எவ்வித பாவமானாலும் அதற்க்கு நியாயப்பிரமாண கட்டளைப்படி கிடைக்ககூடிய தண்டனையானாலும் அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டு செயலாற்றி எல்லாவித நோய் நொடிகள் சாபங்கள் போன்றவற்றை எவ்வித நிபந்தனையும் இன்றி நீக்கிவிட முடியும் அதற்காக அவர் தன ஜீவனை கொடுத்திருக்கிறார்.
அனால் அதற்க்கு பின்னரும் பூமியில் வாழும் அந்த நபருக்கு மீண்டும் அதிக கேடுகளும் நோய் நொடிகளும் வராமல் இருக்க அதன்பின்னர் பாவம் செய்ய கூடவே கூடாது எனவேதான் இயேசு சுகமாக்கியவரை பார்த்து
அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
மீண்டும் தீமையான பாவம் செய்தால் அதிக கேடான நோய் வரத்தான் செய்யும்.
நியாயப்பிரமாணத்தினால் எவனும் தேவனுக்கு முன்னால் நீதிமானாகிவிட முடியாது என்பது உண்மை! ஆகினும் இயேசுவை ஏற்றுக்கொண்டு நீதிமானாகிய பிறகும் தேவன் கொடுத்துள்ள வாக்கு தத்தமாகிய "சகல நோய்களும் நம்மை விட்டு விலக வேண்டுமானால்" பாவம் செய்ய கூடாது. தேவனின் வார்த்தைகளை கைகொண்டு நடத்தல் அவசியம்.
நான் மீண்டும் உங்களை நியாய பிரமானத்துக்குள் தள்ளுவது போல் நினைக்க வேண்டாம். சுருக்கமாக சொன்னால்,
பழைய ஏற்பாடு மாம்சத்துக்குரியது - இதனால் பரலோகத்துக்கு வழியை ஏற்படுத்த முடியாது, ஆனால் இந்த மாம்ச சரீரத்தில் நாம் பூமியில் வாழும்வரைக்கும் சந்துருவின் பிடியில் இருந்து மாம்சத்தை தப்புவிக்க தேவனின் வார்த்தைகள்படி நடப்பது மாத்திரமே வழி.
புதிய ஏற்பாடு ஆவிக்குரியது - இதனால் மாம்சத்துக்கு நிரந்தர விடுதலையை கொடுக்க முடியாது- உலகத்தில் உபத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் என்பதே இயேசுவின் அட்வைஸ்
நியாயப்பிரமானமே வேண்டாம் கிருபையால் நான் அதை செய்வேன் என்று சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு வரும் வேதனை மிகுந்த நோய் போன்ற உபத்திரவங்களை தாங்கிக்கொண்டு இயேசு சொன்னதுபோல் திடனாக இருக்க முடியும் என்றால் நீங்கள் தேவன் சொன்ன நியாயப்பிரமாண வார்த்தைகளை கைக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் மாம்சத்தில் இருந்து விடுபடவுடன் பரலோக நிச்சயம் உண்டு
மற்றபடி மாம்ச உபத்திரவத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் தேவன் சொன்ன வார்த்தைகளை கருத்தாய் கைக்கொண்டு நடத்தல் அவசியம்!
பிரசங்கி 8:5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்;
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
/////////////////////நியாயப்பிரமானமே வேண்டாம் கிருபையால் நான் அதை செய்வேன் என்று சொல்லிக்கொள்ளும் உங்களுக்கு வரும் வேதனை மிகுந்த நோய் போன்ற உபத்திரவங்களை தாங்கிக்கொண்டு இயேசு சொன்னதுபோல் திடனாக இருக்க முடியும் என்றால் நீங்கள் தேவன் சொன்ன நியாயப்பிரமாண வார்த்தைகளை கைக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் மாம்சத்தில் இருந்து விடுபடவுடன் பரலோக நிச்சயம் உண்டு.////////////////////
நியாயப்பிரமாணத்தை கைக்கொள்ளாமல் உபத்திரவங்களை தாங்கிக்கொண்டு மட்டும் இருந்தால் எப்படி பரலோகம் செல்ல முடியும்? நியாய பிராமண வார்த்தைகளை கைக்கொள்ளாமல் பரலோகம் எவ்வாறு செல்வது ? கிருபையை தரவராக பயன்படுத்துவது போல் ஆகிடுமே?
கிருபையின் காலத்தில் பாவத்தை கண்டித்து உணர்த்தும் பரிசுத்த ஆவியானவர் நம்முள் வந்து தங்கி இருப்பதால் ஒருவர் துணிந்து நியாயப்பிரமாணத்தை மீறி கொடிய பாவம் செய்துவிட முடியாது. அப்படியே செய்தாலும் ஆவியானவர் துக்கப்படுவதால் அதை மீண்டும் செய்யாமல் தவிர்க்க வழி உண்டாகிறது. .
ஆகினும் ஆவியானவருக்கு செய்விகொடுக்காமல் துணிந்து நியாயப்பிரமாணத்தை மீறி பாவம் செய்தால் அங்கிருந்து ஆவியானவர் வெளியேற வாய்ப்புண்டு.
அப்படி ஒருவரை விட்டு ஆவியானவர் வெளியேறினால் மட்டுமே ஒருவர் கிருபையை / பரலோக ராஜ்ய தகுதியை இழக்கிறார். அது எவ்வித பாவம் எப்படி செய்தால் அவர் வெளியேறுவார் எனபது ஆவியாருக்கும் சம்பந்தப்படடவருக்கும் உள்ள விஷயங்கள்.
எனவே நம்மை பொறுத்தவரை புதிய ஏற்பாட்டு காலத்தில் நியாயப்பிரமாணத்தை மீறி பாவம் செய்தால் அது மாம்சீக தண்டனையை கொண்டுவரும் என்பதை மட்டும்தான் சொல்ல முடியும்.
மற்றபடி எந்த நிலையில் ஒருவன் கிருபையை இழக்கிறான் என்பது அவனுக்கு ஆவியானவர்னுக்கு உள்ள தொடர்பை பொறுத்தது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)