நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 12 : 51
இந்த வார்த்தை மூலம் இயேசு கிறிஸ்து இந்த பூமியிலே அவர் சமாதானத்தை அழிக்க அல்லது இல்லாமல் பண்ண வந்தார் என்பது போலவும் சமாதானத்தை தர வரவில்லை போலவும் காணப்படுகிறது.
ஆனால் அவ்வார்த்தையை ஆழமாக ஆவியானவருக்குள் ஆராயும் போது அவ் வார்த்தையில் இருக்கும் ஆழமான அர்த்தத்தை காண முடிகிறது.
அதாவது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இப்பூமிக்கு வந்து சுவிசேஷத்தை அறிவித்தார் அத்தோடு ஜனங்களுக்கு தேவையான பல காரியங்களை செய்தார். நோய்களை சுகமாக்கினார், மரித்தோரை உயிரோடு எழுப்பினர் என்று பல காரியங்களை செய்தார் என்பது யாவரும் அறிந்ததே. அதுமட்டும்மல்லாமல் தன் இரத்தத்தை எமக்காக சிந்தி எமக்கு கிடைக்க வேண்டிய எமது பாவத்திட்கான உச்சகட்ட தண்டனையை அவர் தம்மேல் ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பின் விடுதலையை எமக்கு பெற்று கொடுத்தார்.
இப்படி பல காரியங்களை எமக்காகவே செய்த அந்த உத்தம தெய்வம் மேட்குறிப்பிட்ட வசனத்தை சொல்ல காரணம் என்ன? என்று சற்று ஆழமாக சிந்திப்போமானால் அதில் இருக்கும் சத்தியம் வெளிப்படுகிறது. அதாவது இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு பின்னர் பூமியில் பிரிவினை உண்டாக்குகிறது சுவிசேஷம் அறிவிக்கப்பட அறிவிக்கப்பட பூமியில் பல பிரச்சினைகள் ஏட்பட போகிறது என்பதை அறிந்தே தேவன் அவ்வாறு சொல்கிறார் என்பதே எனது கருத்து..
உதாரணத்திட்கு ஒரு வேறு மதத்தில் உள்ள ஒருவர் சுவிசேஷத்தின் மூலம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தன் தெய்வமாக ஏற்று கொள்ளும் போது அக்குடும்பத்தில் பிரிவினை உண்டாக்குகிறது தனது மதப்பற்றினால் இரட்சிக்கப்பட்ட அந்த மகனையோ / மகளையோ கொலை செய்யும் அளவிட்கு கூட அந்த குடும்பத்தார் முயல்கின்றனர் .. இதனால் பிரிவினை உண்டாகுவதை எம்மால் காண முடிகிறது..
எனவே ஆண்டவராகிய இயேசு சுவிசேஷத்தின் மூலம் உண்டாகப்போகும் காரியங்களையே அப்படியாக அறிவித்தார் மேலும் சுவிசேஷத்தை தடுப்பதட்கு சாத்தானும் பல பிரச்சனைகளை கொண்டு வருவான் இதன் மூலம் சமாதானம் இல்லாமல் கூட போகும் என்று ஆண்டவர் அறிந்தபடியால் அவர் உலகிட்கு வந்ததால் தான் இவைகள் எல்லாம் நடக்க போகிறது என்று அறிந்து ஆண்டவர் அப்படி சொல்லியிருப்பார் தவிர அவர் சமாதானத்தின் பிரபு என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
ஏசாயா 9:6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
நல்ல அருமையான கேள்வி விளக்கங்களோடு எழுதியிருக்கிறீர்கள் நன்றி. இதற்கான பதிலை ஒரு சம்பவம் மூலம் விளக்க விரும்புகிறேன்.
நான் பேச்சலர்ஆக இருந்தபோது போது எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். மிகவும் நல்லவர், நான் என்ன சொன்னாலும் கேட்பார் நாங்கள் இருவரும் ஒன்றாகவே அநேக இடங்களுக்கு போவோம், ஒன்றாக சாப்பிடுவோம், தண்ணியடிப்போம், ஒன்றாகவே தூங்குவோம். நான் இருவரும் தனியாக ரூம் எடுத்து சேர்ந்தே தங்கியிருந்தோம். சுமார் 4-5 வருட ஆத்ம நண்பனாக இருந்தார்.
ஒருநாள் நான் ஆடவரை ஏற்றுக்கொண்டு திடீர் என்று மனம் திருந்திய போது எந்த வித காரணமும் இல்லாமல் அவர் என்னை கடுமையாக எதிர்க்கவும் வெறுக்கவும் ஆரம்பித்தார். என்னை கொன்று விடுவதாக கூட கூறினார்.
நான் அவரிடம் கேட்டேன் "நாம் ஒன்றாக சேந்து தவறான காரியங்கள் செய்யும் போதெல்லாம் நீங்கள் எனக்கு மிகவும் நண்பனாக இருந்தீர்கள், ஆனால் இன்று ஒரு சரியான வழியை தேர்ந்தெடுத்து தேவனுடைய பாதையில் நடக்க விரும்பும்போது எதிர்த்து நிற்கிறீர்கள், நான் உங்களுக்கு செய்த துரோகம் என்ன எனக்கு விளக்குங்கள் என்று அழுதுகொண்டே கேட்ட்டேன். ஆனால அவர் எனக்கு எந்த பதிலும் சொல்லாமல் "ஓன்று நீங்கள் இங்கு இருங்க வேண்டும் அல்லது நான் இருக்க வேண்டும் உங்களை நான் ஒழித்து விடுவேன் என்று கோபக்காக கத்தினார்"
ஆவியின் நிறைவில் இருந்த நான், அவருக்குள் இருந்தது சத்துருவாகிய சாத்தானே என்றும் நான் திடீர் என்று மனம் மாறியது தாங்க முடியாமல் அப்படி கொக்கரித்தான் என்றும் அறிந்துகொண்டேன். அவரை நான் வெறுக்கவே இல்லை.
அதேபோல் ஒருவர் ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுகொண்டு ஜீவ பாதையை அறிந்துகொள்ளும் போது அவீட்டில் அவனோடு/அவளோடு கூட இருக்கும் மற்றவருக்குள் சாத்தான் புகுந்து செயல்பட்டு பிரிவினையை மற்றும் கடுமையான ஏத்திவிளைவுகளை உண்டாக்குவான் இதையே ஆண்டவர்
நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
லூக்கா 12 : 51
என்று சொல்லியிருக்கிறார் என்பது என்னுடைய கருத்து
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)