கடந்த நாளில் சோறு சமைப்பதற்காக அரிசியை எடுத்தபோது அதனுள் நிறைய சிறிய சிறிய வண்டுகள் கிடந்ததை பார்த்தேன். அரிசியை கொதிக்கும் நீரில் போடபோவதால் வண்டுகள் வெந்து செத்ததுபோகும் என்று பரிதாபபடட நான், என்னால் முடிந்தவரை அதை அகற்ற முயன்றேன். அவ்வாறு நான் அகற்றிய போது கீழ்கண்ட மூன்றுவிதமான வண்டுகளை என்னால் அறிய முடிந்தது.
1. வெயிலில் வைத்ததும் வெளியேறின வண்டுகள்!
சில வண்டுகள் நான் வெயிலில் வைத்ததுமே உடனே வெளியேறி பறந்துவிடடன. அவைகள் உடனே தப்பித்துக்கொண்டன!
2. தண்ணீரை ஊற்றியதும் தப்பித்த வண்டுகள்!
சில வண்டுகள் அரிசியில் தண்ணீரை ஊற்றியதும் உள்ளே தாக்குப்பிடிக்க முடியாமல் மேலே மிதந்துவிடடான! அவற்றை வடிகட்டியபோது அவைகள் அழிவில் இருந்து தப்பித்து கொண்டன!
3. ஆழத்தில் பதுங்கிபோய் அழிவை தேடிய வண்டுகள்!
ஆனால் பல வண்டுகளோ வெளியிலேயே வராமல் தோண்ட தோண்ட அரிசியின் ஆழத்துக்கு உள்ளே போய் தங்களை மறைத்துக்கொண்டன. நான் எவ்வளவு முயற்றும் அவைகளை எடுக்க முடியாதபடி உள்ளே புகுந்து கொண்டன. கடைசியில் வேறு வழியில்லாமல் அரிசியை கொத்திக்கும் தண்ணியில் போடடபோது அத்தனையும் செத்து மிதந்தன அவற்றை சல்லடையால் அரித்து அப்புறப்படுத்தினேன்.
இந்த மூன்றுவித வண்டுகளை இந்த உலகில் வாழும் மூன்றுவித மனுஷர்களுக்கு ஒப்பிடலாம்.
அக்கினியின் மூலமாக அழிவுக்கு நேராக நிற்கும் இந்த உலகத்தில் இருந்து எப்படியாவது மனுஷர்களை மீட்டு வெளியில் எடுத்துவிட பரிதபிக்கும் நம் ஆண்டவர், தன சொந்த குமாரனையே உலகத்தினுள் அனுப்பி ஜீனவனை அர்ப்பணித்து ஆச்சர்யமான அன்பின் மூலமும் அநேகவிதமான எச்சரிப்பின் மூலமம் அனைவரையும் தேவ கரத்துக்குள் அடங்கி தப்பித்துக்கொள்ள அழைத்துக்கொண்டே இருக்கிறார்!
பக்கத்து வீட்டுக்காரர் மூலம் அழைக்கிறார்/ பழகியவர்கள் மூலம் அழைக்கிறார்
வலை தளங்கள் மூலம் அழைக்கிறார் வானொலி மூலம் அழைக்கிறார்
தொலைக்காட்சி மூலம் அழைக்கிறார் / தொண்டர்கள் மூலம் அழைக்கிறார்
அற்புதங்கள் செய்வதன் மூலம் அழைக்கிறார் / அவரே வாழ்வில் இடைப்படுவைத்தன் மூலம் அழைக்கிறார்
மத்தேயு 11:28வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில்வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்கிறார்!
அவ்வாறு அநேகர் மூலம் தேவன் தன எச்சரிப்பை அனுப்பும்போது, உணர்வடைந்து துன்மார்க்க ஊளையான இவ்உலகத்தில் இருந்து
உள்ளம் திருந்தி உடனே வெளியேறி விடுபவர்கள் விரைவில் தப்பித்து கொள்கிறார்கள். இவர்களே வெயில் படடதும் வெளியேறும் விவேகமான வண்டுகள்!. தேவனின்ஒளி தங்கள்மேல் பட்டதுமே திருந்திவிடும் திவ்யமானவர்கள் இவர்கள்!
ஆனால் அந்த எச்சரிப்புக்கு செவி சாய்காத சில மனுஷர்களோ! சோதனைகள் வேதனைகள் நோய் நொடிகள் துன்பங்கள் என்று நெருக்கங்கள் வரும்போது வேறு வழியில்லாமல் ஆண்டவரை தேடிவந்து விடுதலை அடைந்து தப்பித்துகொள்கிறார்கள். இவர்களே தண்ணீர் ஊற்றியதும் தாக்குப்பிடிக்க முடியமால் வெளியில் வந்து தப்பிக்கும் வண்டுகள்!
ஆனால் கடைசியில் சில பலரோ எந்தவித எச்சரிப்பையும் எடுத்துகொள்ளாமல் எச்சரிப்பு செய்பவன்மேல் எப்படி குற்றம் சுமத்தி குறை கண்டு பிடிக்கலாம் என்று எண்ணுவதோடு உலக இன்பங்களில் உள்ளே மூழ்கிகிடந்தது உணர்வடைந்து வெளியில் வர மனதில்லாமல் இருப்பார்கள். எந்தஒரு நல்ல செய்தியும் இவர்கள் இதயத்துக்குள் ஏறவே ஏறாது! .
இவர்களை பற்றி வேதம் இவ்வாறு சொல்கிறது!
சங்கீதம் 58:5பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டுவிரியனைப்போல் இருக்கிறார்கள்.
அழிவின் ஆழத்தை நோக்கி போகும் இவர்கள் ஆண்டவர் ஒருநாள் இந்த உலகை அக்கினிக்கு இரையாக்கும்போது அவியாத அக்கினிக்குள் அமிழ்ந்து போவார்கள் என்று வேதம் சொல்கிறது!
மத்தேயு 3:12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாதஅக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான்.
நீங்கள் எந்த விதமான வண்டு? விவேகமானவர்களா அல்லது வீணாய் போகப்போகிறீர்களா? இன்றே மூடிவிடுங்கள்!
அழைப்பின் குரலை கேளுங்கள் ஆண்டவரின் அன்பு கரங்களை அண்டி பிழைத்துகொள்ளுங்கள்!
-- Edited by SUNDAR on Saturday 6th of July 2019 12:00:03 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)