இந்நாடகளில் அநேக ஊழியர்கள் தங்களுக்கென்று புதுப்புது பெயர்களை தயார் செய்து சூட்டிகொள்கிறார்கள். விதவிதமாக அங்கவஸ்திரங்கள் தரித்துகொள்கிறார்கள்!
பாஸ்டர், ரெவரென்ட், அப்போஸ்தலர், பிஷப், ஆயர், பேராயர், தீர்க்கதரிசி போன்ற எத்தனையோ பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். அப்படி அழைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புவதோடு யாராவது சற்று மரியாதையை குறைவாய் அழைத்துவிடடால் அவர்கள்மேல் எரிச்சல் அடைகிறார்கள்.
நீங்கள் என்ன பெயரால் மனுஷர்களால் அழைக்கப்படுகிறீர்கள் எனபது கர்த்தருக்கு ஒரு பொருடத்தே அல்ல! கர்த்தர் உனக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என்பதே முக்கியம்!
கருப்பாய் இருப்பவனுக்கு வெள்ளை சாமி என்று பெயர் வைக்கலாம், திருநெல்வேலியில் இருப்பவனுக்கு திருப்பதி என்று பெயர் வைக்கலாம் அந்த பெயரால் எதுவும் ஆகிவிட போவது இல்லை.
நான் வேலை பார்த்த அலுவலகத்தில் அதிகநாள் வேலை பார்த்த ஒருவர இருந்தார் அவர் முதலாளியிடம் சென்று நான் இவ்வளவு நாள் இங்கு வேலை பார்த்துவிடடேன் எனக்கு ஏதாவது மேலான பெயருள்ள பதவி தரக்கூடாதா என்று கேட்டபோது சற்றும் தாமதிக்காமல் அவருக்கு "வைஸ் பிரசிடெண்ட்" (என்ற பதவியை முதலாளி கொடுத்துவிடடார். ஆனால் அந்த பதவிக்கு என்று எந்த ஒரு முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதை அறிந்து மீண்டும் அவர் முதலாளியிடம் சென்று இந்த பதவியில் முக்கியத்துவம் இல்லை எனக்கு "டைரக்ட்டர்" பதவிதான் வேண்டும் என்று கேட்டார் உடனே அவருக்கு "டைரக்ட்டர்" என்ற பதவியை கொடுத்துவிடடார். ஆனால் அந்த டைரக்ட்டர் பதவிக்கு கொடுக்க வேண்டிய எந்த அதிகாரமோ அல்லது மரியாதையோ கொடுக்கவில்லை.
இப்படி உங்கள் இருதயத்தில் உங்களுக்கு எந்த பட்ட பெயர் வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த பெயரை உங்களுக்கு உலகம் சீக்கிரத்தில் கொடுத்துவிடும். ஆனால் அதற்க்குறிய தகுதி என்பது உன்னதத்தில் இருந்தே தரப்படவேண்டும். அதற்க்கு ஏற்ற தகுதி உங்களுக்கு இருக்கிறதா? கர்த்தர் உங்களை என்ன பெயர் வைத்து அழைக்கிறார் என்பதே மிகவும் முக்கியம்.
தேவ தீர்மானத்தை சொன்ன எரேமியா தீர்க்கதரிசியை பிரதான விசாரிப்புகாரன் என்ற நிலையில் இருந்த பஸ்க்கூர் கன்னத்தில் அடித்து காவலில் வைத்து மறுநாள் வெளியில் விடடபோது கர்த்தர் அவனை பிரதான விசாரிப்புகாரன் என்ற ஸ்தானத்தில் பார்க்காமல் "மாகோர்மீசாபீப்" அதாவது "பயங்கரம் சூழ்ந்துள்ளது" என்ற பெயரில் அழைத்து அவனையும் அவனை சூழ்ந்தவர்களையும் பயத்துக்கு ஒப்புக்கொடுப்பதாக சொன்னார்.
இன்றும் தேவ தீர்மானத்தையும் தேவன் சொல்லும் வார்த்தைகளுக்கு சற்றும் செவிகொடுக்காமல் தன சுய இச்சைகளை நிறைவேற்ற நினைக்கும் பல பிரதான ஊழியர்களையும் தேவ சித்தம் நிறைவேற பிரயாசம் எடுக்காமல் தங்கள் இருதயத்தில் ஏவுதலை பின்றுகிற ஊழியர்களையும் கர்த்தர் அவ்வாறே அழைப்பார் எனபதை நினைவில் வையுங்கள்.
கர்த்தர் என்னை நடத்திகொண்டுபோன நாடகளில் ஒரு இடத்தில் அவர் சொன்ன சாலையில் போகாமல் சில காரங்களினிமித்தம் வேறு பாதையில் போனபோது அந்த சிறிய தவறுக்காக கீழ்கண்ட வசனத்தை சொல்லி
என்னை "மூடன்" என்றார்.
பிரசங்கி 10:15ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.
உடனே அவரின் வார்த்தையில் இருந்த ஆதங்கத்தை அறிந்து என் தவறை உணர்ந்து நான் திறுத்திக்கொண்டேன்
நம்முடைய சிறிய கீழ்படியாமையினிமித்தம் நமது பெயர் கர்த்தர் சமூகத்தில் எப்படி வேண்டுமானாலும் கீழ்த்தரமாக மாறியிருக்கலாம் உலகில் உங்களுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரால் பெருமிதம் அடையவேண்டாம். உலகில் என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது அல்லது என்ன பதவி கொடுக்கப்பட்டுளள்து எனபது கர்த்தருக்கு முக்கியமல்ல. அந்த பெயராலும் பதவியாலும் கர்த்தருக்கு எந்த பாதிப்போ பயனோ இல்லை.
உன்னதத்தில் இருந்து கர்த்தர் உங்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் என்பதை அறிய முயலுங்கள் அதுவே இந்நாட்களில் மிக மிக முக்கியம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)