கடந்த நாளில் தேவ பிள்ளையோடு பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சொன்னது "நான் வேலை பார்க்கும் ஸ்தலத்தில் யாராவது என்னிடம் கடன் கேடடால் உடனே என்னுடைய மனதில் இவள் கடனை திருப்பி தந்துவிடுவாளா? என்ற எண்ணம் தோன்றுகிறது. திருப்பி தந்துவிடுவாள் என்று தோன்றினால் பணம் கொடுக்கிறேன் இல்லை என்றால் ஏதாவது காரணம் சொல்லி இல்லை என்று சொல்லிவிடுகிறேன். இது ஆண்டவர் பார்வைக்கு தவறான ஒரு நிலை என்று அறிய முடிகிறது காரணம் ஆண்டவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்
மத்தேயு 5:42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. லூக் 6: 34. திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? 35 கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள்,
ஆனால் என்னால் அப்படி கொடுக்க முடியவில்லை. ஒருவேளை நான் அப்படி கேட்பவனுக்கு எல்லாம் கொடுத்தால் எல்லோரும் என்னிடம் வந்து கடன் கேட்க்க வந்துவிடுவார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது என்று சொன்னாள்
இன்று அநேக தேவ பிள்ளைகளுக்கு இந்த் கேள்வி உண்டு!
ஒரு கன்னத்தில் அடிப்பவனுக்கு இன்னொரு கன்னத்தை திருப்பி கொடுத்தல் இன்னொரு கன்னத்திலும் அடித்து விடுவானோ?
நம்மை எதிர்ப்பவனுக்கு நாம் எந்த பதிலும் சொல்லாமல் போனால் நம்மை கோழை/ ஏமாளி என்று நினைத்தது விடுவானோ?
இல்லை என்று சொல்லாமல் கேட்பவனுக்கு கொடுத்தால் நாம் ஒன்றுமில்லமல் தெருவில் நின்றுவிடுவோமோ என்பதுதான் அந்த கேள்விகள்!
எனவே ஆண்டவராகிய இயேசு சொல்லியிருக்கும் இதுபோன்ற பொன்னான வார்த்தைகளை பிரயாசம் எடுத்து யாரும் கைக்கொள்ள முன்வருவது இல்லை! ஆடடத்துக்கும் பாட்டத்துக்கும் துள்ளி குதிப்பதற்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஆண்டவர் வார்த்தைகளை கைக்கொண்டு நடப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதிகம் போதிக்கப்படுவதும் இல்லை!
ஆண்டவர் சொன்ன அந்த வார்த்தைகளை கைக்கொண்டு நடந்து பார்த்தால்தான் தெரியும் அதில் அடங்கியுள்ள மேன்மைகள் எவ்வளவு பெரியது என்று!
1.முதலில் தேவன் மனுஷரால் செய்யமுடியாத பெரிய காரியங்களை நம்மேல் சுமத்தவில்லை/ சுமத்தவும் மாடடார் என்பதை மனதார ஏற்க வேண்டும்!
மத்தேயு 11:30என்நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.
2. நம் இருதயத்தில் ஆண்டவரின் வார்த்தகையளை எப்படியாவது கைக்கொண்டு நடக்கவேண்டும் என்ற தீர்மானம் எடுக்க வேண்டும் அதை விசுவாசிக்க வேண்டும் . இந்த தீர்மானத்தையே தேவன் அதிகமாக எதிர்பார்க்கிறார். ஒருவேளை தவறினாலும் மன்னிப்பு கேட்டுவிட்டு அடுத்தடுத்து அதற்க்கான பிரயாசங்களில் முயற்சிக்க வேண்டும்
மாற்கு 9:23இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம்கூடும் என்றார்.
3.அடுத்து மிக முக்கியமாக :
யோவான் 19:11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது;
ஆண்டவராகிய இயேசுவை பார்த்து பிலாத்து: "உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா?
என்று கேட்ட்டபோது இயேசு சொன்ன பதில்தான் மேலேயுள்ள வசனம்!
தேவ வார்த்தைகளின்படி வாழ பிரயாசம் எடுக்கும் தேவ பிள்ளைகளாகிய எவரையும் பரத்தில் இருந்து அதிகாரம் பெறாமல் யாரும் நெருங்கவும் முடியாது எந்த ஒன்றையும் பிடுங்கவும் முடியாது!
எனவே நாம் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் சம்பாதிக்கும் பணம் நமது சரீரம் நம் பிள்ளைகள் நம்முடைய சொத்துக்கள் எல்லாமே கர்த்தரின் பாதுகாப்பில் இருக்கிறது.
பரத்தில் இருந்து அனுமதி பெற்றவன் மட்டுமே அதை பிடுங்க முடியும். மற்றவன் எவனும் நம்மை நெருக்கி கடன்கூட கேட்க்க முடியாது என்பது உறுதியிலும் உறுதி.
அதே நேரத்தில் நம்மிடம் இருக்கும் சில தவறான காரியங்களினிமித்தம் பரத்தில் இருந்து அதிகாரம் கொடுக்கப்பட்டு ஒருவன் நமக்குண்டானதை பிடுங்க வந்தால் அதற்க்கு எதிர்த்து நிறக்காமல் விட்டுவிடுவதே சிறந்தது!
இந்த் செய்தி பலருக்கு மிக கடினமானதாக தோன்றலாம் ஆனால் ஆண்டவர் அதைத்தான் தெளிவாக சொல்லியிருக்கிறார் :
மத்தேயு 5:40உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
சொன்னதோடு மட்டுமல்லாமல் தன் ஜீவனையே நமக்காக விட்டுக்கொடுத்தார்
/////////////////தேவ வார்த்தைகளின்படி வாழ பிரயாசம் எடுக்கும் தேவ பிள்ளைகளாகிய எவரையும் பரத்தில் இருந்து அதிகாரம் பெறாமல் யாரும் நெருங்கவும் முடியாது எந்த ஒன்றையும் பிடுங்கவும் முடியாது! //////////////////
இந்த வசனம் என் உள்ளதோடு பேசி என் மனத்திட்கு புத்துணர்வையும் மகிழ்வையும் தந்தது..
மீண்டும் நீங்கள் செய்திகளை தொடர்ந்து எழுத ஆரம்பித்துள்ளது மிக்க புத்துணர்ச்சியை தருகிறது.
தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள் அண்ணா.