கடந்த நாளில் எங்கள் வீட்டில் சபையில் இருந்து ஜெபகூடடம் வைத்திருந்தார்கள். சபை விசுவாசிகள் வீட்டில் வரிசை முறைப்படி இக்கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
இவ்வாறு எங்கள் வீட்டில் ஜெப கூடடம் நடத்தும் முறை வந்தபோது வருபவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் திருப்தியாக அனுப்ப வேண்டும் என்று நினைத்த என் மனைவி டீ / ஸ்னாக்ஸ் மற்றும் சிக்கன் சாப்பாடு எல்லாம் போதுமான அளவு செய்து வைத்துவிட்டு. பக்கத்து வீட்டுக்கும் எல்லாம் ஓடிப்போய் சொல்லி அழைத்துவிட்டு, பால்கனியில் போய் ஆள்கள் வருகிறார்களா என்று அடிக்கடி எட்டி பார்த்துக்கொண்டும் சமையலை சூடாக வைப்பதற்கு ஏற்ற வேலைகளை செய்துகொண்டு அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருந்தாளாம்.
சபை விசுவாசிகள் வர தாமதமாகவே முதல் மாடியில் இருந்து இறங்கி கீழே வந்து வாசலில் வந்து சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு இன்னும் வரவில்லையே என்ற யோசனையில் வீட்டுக்குள் கதவை திறந்துகொண்டு வந்தபோது.
"மகளே எல்லோரும் வருகிறார்களா எனபதை எத்தனை முறை ஓடிப்போய் பார்க்கிறாய்? என்னை ஒரு முறைகூட நீ கூப்பிடவும் இல்லை, நான் வந்துவிடடேனா என்று ஒருமுறை கூட நீ யோசிக்கவும் இல்லையே" என்று ஆண்டவர் என் மனைவியின் இருதயத்தில் வருத்தத்தோடு பேசினாராம்.
அதைகேட்ட என் மனைவி அப்படியே ஆடிப்போய் அமர்ந்து விடடாளாம். ஆம் அவள் அந்த கூடத்துக்கு மிக முக்கியமான ஆண்டவரை அழைக்க மறந்திருந்தாள்.
நாமும்கூட உண்மையில் பல்வேறு அலுவல்கள் மற்றும் அல்லல்கள் நிமித்தம் ஆண்டவரை அநேக நேரங்களில் அழைக்கவும் கவனிக்கவும் தவறிவிடுகிறோம்.
மார்த்தாள் செயலிலும் இவ்விதமான காரியமே தென்படுவதை அறியலாம். ஆண்டவருக்கு சேவை செய்வதிலேயே கவனமாக இருந்த அவள் அவர் பாதத்தில் அமரவும் அவர் சொன்ன ஜீவ வார்த்தைகளை கவனிக்க தவறி விடடாள்.
அந்நியரை அழைப்பதும் உபசரிப்பதுவும் அவசியம்தான் ஆனால் அதைவிட அவசியம் ஆண்டவரை அழைப்பதும் அவர் சொல்லை கேட்பதும்.
ஆண்டவருக்கு அழைப்பு வைத்திருந்த கல்யாண வீட்டில் உண்டான திராட்ச்சை ரஸகுறையை நிறைவாக்கிய சம்பவம் அனைவரும் அறிவோம்.
எனவே அன்பானவர்களே உங்கள் வீட்டில் எந்த ஒரு கூடடமானாலும் / விழாவானாலும் / விஷேஷமானாலும் முதலில் ஆண்டவரை அழைக்க தவறாதீர்கள்! அவ்வாறு அழைத்தால் மற்ற வரவேண்டியவர்கள் தடையில்லாமல் தானாக வந்து சேர்வார்கள்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)