நியாயத்தீர்ப்பின் பின்னர் புதிய உலகம் மற்றும் புதிய வானம் படைக்கப்பட்ட பின்னர் போது எமது உறவுகள் இன்னார் என்று அறிய முடியுமா ? வேதத்துடன் விளக்கம் தரவும்
நியாயத்தீர்ப்பின் பின்னர் புதிய உலகம் மற்றும் புதிய வானம் படைக்கப்பட்ட பின்னர் போது எமது உறவுகள் இன்னார் என்று அறிய முடியுமா ? வேதத்துடன் விளக்கம் தரவும்
அறியவேண்டும் என்று விரும்பினால் நிச்சயமாக அறிய முடியும். ஆனால் நமக்கு அதில் விருப்பம் இருக்காது
ஆனால் இங்கு இருக்கும் இந்த பூமிக்குரிய பந்த பாசங்கள் ஈர்ப்புகள் பரலோகத்தில் இருக்காது. நம் இருதயம் தேவன் தந்த புது இதயமாக மாறியிருக்கும். அதில் தேவன் பேரில் மட்டுமே பற்றுதல் இருக்கும் மற்றபடி கூட இருக்கும் மனுஷர்கள் எல்லோர் மேலும் ஒரேவிதமான அன்புதான் இருக்கும். அதில் படச்ச பாதம் இருக்காது.
சிஸ்ட்டர் நீங்கள் தேவனின் வல்லமையை சரியாக அனுபவிக்கவில்லை என்று கருதுகிறேன்.
புதியவானாம் புதிய பூமி என்பது தேவனின் மகா வல்லமைக்கு உட்ப்பட்ட்து.
இந்த பாவம் நிறைந்தஹ் உலகத்தில் நாம் வாழும்போதே தேவ ஆவி நமக்குள் வரும்போது நாம் நினைப்பதை பார்க்கும் அளவுக்கு நம்முள் அது வல்லமையாய் செயல்படுகிறது.
அவ்வாறு இருக்க,
புதிய இருதயத்தை பெற்ற நித்திய வாழ்வில் நாம் நினைத்தாலே போதும் நாம் விரும்புவது நமக்கு இருதயத்தில் சொல்லப்படும். நினைத்தவர்கள் நம் நேரில் வந்து நிற்பார்கள். எல்லோருக்கும் ஒர் connectivity இருக்கும் நாம் நினைப்பது அவர்களுக்கு தெரியும் அவர்கள் நினைப்பது நமக்கு தெரியும். நாம் எந்த பிரயாசமும் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இங்கு கேட்ட கேள்வியை மனதில் நினைத்தால் போதும் அதற்க்கான பதில் உடனே உங்களுக்கு சொல்லப்படும் நம் நினைவுகள் எல்லாம் தேவனுக்குள் இருக்கும்,
அதை சரியாக விளக்குவது கடினம் அதை அனுபவித்தல் மட்டுமே புரியும்.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதி நிறைவேறாத ஆசை என்று எதுவும் அங்கு இருக்காது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)