கடந்த நாளில் என் இந்துக்கார முதலாளியிடம் ஆண்டவரை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தபோது அவர் சில கேள்விகளை கேடடார் அதன் சுருக்கத்தை இங்கு பதிவிடுகிறேன்.
நான் சொன்னது : சார் , ஆண்டவராகிய இயேசு நம்முடைய பாவத்துக்காக மரித்தார் ஆகையால் அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சார் சொன்னது : "அவனின்றி அணுவும் அசையாது" என்று சொல்லப்பட்டுள்ளது எனவே அவர் அனுமதியில்லாமல் நான் எதுவுமே செய்ய முடியாது. எனவே நான் செய்யும் பாவங்களை எல்லாம் அவர் அனுமதியுடன்யே செய்கிறேன்.
நான் சொன்னது : சார் நமக்கு சுயாதீனம் இருக்கிறது எந்த ஒரு தப்பையும் செய்யவோ செய்யாமல் இருக்கவோ நம்மால் முடியும். ஒரு நிமிடம் யோசித்தால் அந்த தவறை செய்ய மாட்டொம். தவறு செய்தால் தண்டனை உண்டு.
அதற்க்கு சார் சொன்ன பதில் : "என்னை கேட்க்காமலேயே என்னை படைத்தது இறைவன். என்னை கேட்க்காமலேயே எனக்கு சுயாதீனத்தை தந்தது இறைவன் பிறகு அவர் கொடுத்த சுயாதீனத்தோடு நான் செய்யும் பாவங்களுக்கு மட்டும் நான் எப்படி பொறுப்பாக முடியும்? எல்லாம் அவன் செயல்! இதில் என்மேல் எந்த தப்பும் கிடையாது. எல்லாவற்றிக்கும் மேலாக ஒரு சக்தி இருக்கிறது அதுதான் அனைத்தையும் நடத்துகிறது அது பார்த்துக்கொள்ளும்"
என்று சொல்கிறார்.
இதற்க்கு என்ன பதில் சொல்லலாம்?
எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் சரியான பதிலை சொல்லுங்கள் பார்க்கலாம் !
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
மனிதனை தேவன் படைத்தது அவரை துதிக்க ஆனால் இன்று மனிதன் தான் இஷ்டப்படி நடக்கிறான்..
எதை செய்யவேண்டும் எதை செய்யக்கூடாது என்று தேவன் எல்லாவற்றையும் நமக்கு எழுதி தந்துள்ளார் அதேபோல தீர்மானம் எடுக்கும் சுதந்திரத்தையும் நமது கைகளில் கொடுத்துள்ளார் ஏனெனின் தேவனுடைய ஆவி மனுஷனோட போராடுவதில்லை எனவே நாம் செய்யும் தவறுகளுக்கு நாமே பொறுப்பு..
கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவருடைய கட்டளைகளை கைகொள்ளுவது நமது கரங்களில் உள்ளது..