இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நியாயத்தீர்ப்பும்   நித்திய வாழ்வும்!  (சுருக்கமாக) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நியாயத்தீர்ப்பும்   நித்திய வாழ்வும்!  (சுருக்கமாக) 
Permalink  
 


கீழேயுள்ள வசனங்கள் இறுதி வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பை பற்றி கூறுகின்றன: 
 
வெளி 20:12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
 
13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
 
 
14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.  
 
15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்
 
 
இவைகள் நிறைவேறிய பிறகு நித்தியம் (முடிவில்லா வாழ்வு)  ஆரம்பம் ஆகிறது!
 
நியாய தீர்ப்பை பற்று நித்தய வாழ்வுக்கு போகும் கூட்ட்ங்கள் மூன்றாக  பிரிக்கப்பட்டு மூன்று ராஜ்யங்களுக்கு அனுப்பப்படும்.
 
 
1. பரலோக ராஜ்ஜியம் 
 
 ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்  
 
இயேசுவின் முதல் பிரசங்கமே பரலோக ராஜ்ஜியம் பற்றியதுதான் 
 
மத்தேயு 3:2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான்.
 
மத்தேயு 22:30 உயிர்த்தெழுதலில், கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்;  
 
 
இதுதான் ஆண்டவர் ஆயத்தப்பண்ண போகிறேன் என்று சொன்ன ஒரு ராஜ்ஜியம் 
 
யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.  
 
அந்த ஒரு வாசஸ்தலம்தான் பரலோக ராஜ்ஜியம் 
 
ஆயத்தமாக இருக்கும் அந்த பரலோக ராஜ்யம் இப்போது காலியாக இருக்கிறது அங்கு யாருமே இல்லை.
 
மேலேயுள்ள வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு பின்னர் ஒருகூடட மக்கள் இந்த பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்து கொள்வார்கள்!
 
இது இயேசுவை ஏற்றுக்கொண்ட ஜனங்களுக்கு என்று பிரத்யேகமாக ஆயத்தம் பண்ணப்பட்ட்து.
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
RE: நியாயத்தீர்ப்பும்   நித்திய வாழ்வும்!  (சுருக்கமாக) 
Permalink  
 


அப்படியாயின் மற்ற இரண்டு இடங்களும் எவை?

மற்றும் காலியாக இருக்கும் பரலோகம் என்று எவ்வாறு சொல்கிறீர்கள்? வேதவசனம் தர இயலுமா அண்ணா?

அப்போ தேவன் மற்றும் தூதர்கள் எங்கு இருக்கிறார்கள்? பரலோகத்தில் இல்லையா?

/////////////////15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் ///////////

வசனம் இப்படி சொல்லியிருக்க அன்று நீங்கள் கூறினீர்கள் வேறு புத்தகங்களின்படியும் அவர்கள் கிரியைகளுக்கு பலன் கிடைக்கும் என்று.. ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படாதவர்கள் யாவரும் அக்கினி கடலில் தானே தள்ளப்படுகிறார்கள்

ஜீவ புஸ்தகத்தில் பெயர் இல்லாதவர்கள் அக்கனி கடலில் தள்ளப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கும் அதே நேரம் வேறு புஸ்தகங்கள் படியும் தீர்ப்படைந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே ? சற்று விளக்கவும்

தெளிவாக விளக்கவும்



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நியாயத்தீர்ப்பும்   நித்திய வாழ்வும்!  (சுருக்கமாக) 
Permalink  
 


Debora wrote:

/////////////////15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான் ///////////

வசனம் இப்படி சொல்லியிருக்க அன்று நீங்கள் கூறினீர்கள் வேறு புத்தகங்களின்படியும் அவர்கள் கிரியைகளுக்கு பலன் கிடைக்கும் என்று.. ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படாதவர்கள் யாவரும் அக்கினி கடலில் தானே தள்ளப்படுகிறார்கள்

ஜீவ புஸ்தகத்தில் பெயர் இல்லாதவர்கள் அக்கனி கடலில் தள்ளப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கும் அதே நேரம் வேறு புஸ்தகங்கள் படியும் தீர்ப்படைந்தார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே ? சற்று விளக்கவும்

தெளிவாக விளக்கவும்


வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.

வெளி 20:15 ஜீபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.  
 
மேலேயுள்ள வசனங்களை சற்று கவனமாக ஆழ்ந்து படிக்கவும். இங்கு இரண்டு சம்பவங்கள் நடக்கிறது 
 
1.  அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன;
 ;2.  ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது
  
 
அதாவது முதலில் பல புஸ்தகங்கள் திறக்கப்படடன பின்னர் அந்த பல புஸ்தகத்தில் இல்லாத தனிப்படட  ஜீவ புஸ்தகம் என்ற வேறொரு புஸ்த்தகம் திறக்கப்படுகிறது.
 
இங்கு இரண்டு விஷயங்கள் நடக்கிறது: 
 
1. புஸ்தகங்கள் திறக்கப்பட்டன;
அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.  
 
;2.  ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது  
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.     
 
இங்கு முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 
 
ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ 
 
"எழுதப்படடவனாக காணப்படாதவன்"
 
அதாவது ஒரு மனுஷன் ரட்சிப்புக்குள் வரும்போது அவன் பெயர் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்படுகிறது.
இப்படி எழுதப்படட பெயர் கடைசி நியாயத்தீர்ப்பின் நாள்வரை காணப்பட வேண்டும் அதாவது அவன் முடிவு பரியந்தம் நிலை நிற்க வேண்டும்.
 
எழுதப்பட்டு பின்னர் காணப்படாதவன் அதாவது எழுதப்பட்டு பின்னர் நாமம் கிறுக்கிப்போடாமல் இருப்பவன் தப்பிப்பான்.  
 
வெளி 3:5 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.  
 
எழுதப்பட்டு பின்னர் கிறுக்கிப்போடப்பட்டு நாமம் காணப்படாதவன் மாத்திரமே 
 
வெளி 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.  
 
சுருக்கமாக ஆண்டவரை அறிந்தும் அவர் அன்பை ருசிபார்த்தும் பின்னர் பணத்தின் மீதோ உலகத்தின் மீதோ ஆசைவைத்து வழி மாறி போனவர்கள் மாத்திரமே இதில் வர வாய்ப்பு இருக்கிறது. 
 
வசனம் இவர்களை மட்டும்தான் புதுப்பிக்க முடியாது என்றும் திடடமாக சொல்கிறது.   
 
எபிரெயர் 6: 4. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,5. தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
 
6. மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புகிறதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
 
காரணம் அவர்களுக்கு வேறொரு பலி இல்லை! 
 
எபிரெயர் 10:26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல்,  
 
எனவே அவர்களை மாத்திரம் மீட்பது கடினமான காரியம். 
 
இந்த ஜீவ புஸ்தகத்தில் பெயரே எழுதப்படாதவர்கள் அதை பற்றி அறியாதவர்கள் வேறு புஸ்தகங்களின்படி அவரவர் கிரியைக்கு தகுந்த நியாயத்தீர்ப்பையே அடைவார்கள்.
 
என்ற உண்மையை ஆழ்ந்து தியானித்தல் அறிய முடியும். அநேகர் இது குறித்து தப்பான எண்ணம் கொண்டுள்ளார்கள். 
இவ்வாறு நடப்பதற்கு முக்கிய காரணம் ஒன்றும்  உள்ளது.    


-- Edited by SUNDAR on Tuesday 5th of November 2019 03:45:21 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard