இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரக்கமற்ற ஈனப்பிறவிகளாக  இருக்காதீர்கள்!  


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
இரக்கமற்ற ஈனப்பிறவிகளாக  இருக்காதீர்கள்!  
Permalink  
 


கடந்த நாள் காலை சுமார் 4 மணிக்கு  பூந்தமல்லியில் இருந்து தாம்பரம் செல்லும் 66 நம்பர்  பஸ்ஸில் பயணம் செய்ய நேர்ந்தது.
 
பஸ்ஸில் பயணம் செய்த ஒரு முதியவரை கண்டக்கடர் எதோ சொல்லி இடையில் இறக்கி விடடார் நான் சரியாக கவனிக்க வில்லை.
 
அடுத்த மாங்காடு வந்தபோது ஒரு வயதான தாயாரும் ஒரு 15-16 வயது மதிக்கதக்க ஒரு வாலிப பெண்ணும் வண்டியில் ஏறினார்கள். 
 
வண்டி கிளம்பி சிறிது தூரம் சென்றதும் டிக்கட் கேட்டபோது இரண்டு தாம்பரம் டிக்கட் விலை 38 ருபாய் அந்த பெண் 200 ருபாய் 
தாளை கொடுத்தது.
 
சில்லறை வேண்டும் என்று கண்டக்கடர் கேட்க்க,  அவர்களிடம் சில்லறை  இல்லை, நான் தாம்பரம் சென்று வாங்கிக்கொள்கிறேன் என்று சொன்னது.  ஆனால் அந்த கண்டக்டரோ சன்றும் செவி கொடுக்காமல் உடனே விசிலை ஊதி அந்த காலை நேரத்தில்  இரண்டு போரையும்  எங்கோ இருட்டில் இறக்கி விட்டுவிடடார்.
 
நீண்ட தூர பிரயாணத்தால் மிகுந்த சோர்வில் இருந்தான் நடப்பதை சரியாக கிரகிப்பதற்குள் ஒரு சில நிமிடங்களில் இக்காரியம்  நடந்து விட்டது.  
 
அவர் சுமார் 300 ரூபாக்கான சில்லறையை எண்ணி பண பைக்குள் வைத்ததை நான் பார்த்தேன் ஆகினும் 162 ருபாய் சில்லறை எடுத்து கொடுக்க மனதில்லாமல் அந்த வயதான தாயாரையும் வயசு பெண்ணையும் இப்படி விசில் ஊதி அந்த இருட்டில்  இறக்கி விட்டு விட்டது எனக்கு மிகுந்த மன வருத்தமாக இருந்தது.
 
பின்னர் அவரிடமே சென்று ஏன் அவர்களை இறக்கிவிடதீர்கள் என்று கேட்ட்டேன். அதற்க்கு "இவளுவ இப்படித்தான் பஸ் ஏறப்போகிறோம் என்று தெரிகிறது ஏன் கையில் சில்லறை எடுத்து வரக்கூடாது?  இப்பொது பிறகு வாங்குவேன் என்று சொல்வார்கள் பின்னர் என்னை சுற்றி சுற்றி வந்து பேலன்ஸ்  கேட்டுகொண்டே இருப்பார்கள்" என்பது போன்று  எதோ சாக்கு போக்கு சொல்லிக் கொண்டே போகிறார்.  அதிகம் பேசினால் வாக்குவாதம் வரும் என்று நினைத்து நான் பேசுவதை தவிர்த்துவிடடேன்.  
 
என் ,மனது வலித்தது!
 
இதே காரியத்தை உன் தாயாரும் உன் பிள்ளையாக இருந்தால் நீ செய்வியா?
 
நீ இன்று இவர்களை இப்படி இரக்கமில்லாமல் இறக்கிவிடடால்  நாளை உன் பிள்ளைகளுக்கு யாருங்க இரக்கம் காட்டுவார்கள்?
 
அல்லது நீதான் ஒரு இக்கடடான சூழ்நிலையில் இருக்கும்போது உனக்கு யார் இரக்கம் காட்டுவார்கள்!  
 
இரக்கமுள்ளவனுக்கே இரக்கம் கிடைக்கும்! என்று ஆண்டவர் சொல்கிறார். 
 
மத்தேயு 5:7 இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.  
 
அவனவன் விதைத்த பலனை ஒருநாள் அறுத்தே தீருவான்!
 
கோதுமை விதைத்து சோளம் ஒருநாளும் அறுவடை செய்ய முடியாதுங்க 
 
நீ பிறருக்காக உன் கையில் இருந்து காசு போட்டு  பெரிய தியாகம் எல்லாம் பண்ண வேண்டாம்!  உன்னால் முடிந்த சிறு உதவியைக்கூட செய்ய முடியாத நீயெல்லாம் ஆறறிவுள்ள மனுஷன்  என்று பெயரில் அலைய என்ன தகுதி இருக்கிறது?  
 
I தெசலோனிக்கேயர் 4:6  இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார்.  
 
இதை படிக்கும் யாரானாலும் சரி. தயவு செய்து உங்களால் முடிந்த உதவியை பிறரின் இக்கடடான சூழ்நிலையில் செய்யுங்கள் அதனால் கொஞ்சம் பணம் போனாலும் பரவாயில்லை! 
 
அதற்க்கான பலன் உங்களுக்கு கிடைக்காமல் போகாது! 
 
அப்படி எதுவுமே பலன் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை அவர்கள் அடையும் மகிழ்ச்சி அதனால் நமக்கு கிடைக்கும் சந்தோசம் போதும்.
 
மனுஷனாய் பிறந்து இதைகூட செய்யாமல் வேறு என்னத்தை நாம் கொண்டு போக போகிறோம்?
 
 
 

 

 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

கண்டிப்பாக அண்ணா முடிந்ததை செய்வோம்

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard