இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நியாயப்பிரமாணம் தேவையா இல்லையா ? நீங்களே தீர்மானியுங்கள்! (உண்மை சம்பவம்) 


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
நியாயப்பிரமாணம் தேவையா இல்லையா ? நீங்களே தீர்மானியுங்கள்! (உண்மை சம்பவம்) 
Permalink  
 


என் மனைவி மிகவும் ஆவிக்குரியவள் அநேக நேரங்களில் தேவனை பற்றிய சிந்தையோடு ஊழியம்  ஜெபம் மீட்டிங் என்று அங்கும் இங்கு ஓடுபவள்.
 
கண் விழித்துக்கொண்டு இருக்கும்போதே தரிசனங்களை கண்டு அதோ இப்படி நடக்கிறது இதோ இப்படி தேவன் என்னோடு இடைபடுகிறார் என்று அடிக்கடி சொல்லுவாள். அனால் அவள் காட்டும் திசையில் பார்த்தால் என் கண்களுக்கு ஓன்றுமே தெரியாது.
 
இன்று ஜெபம் செய்த இடத்திலிருந்து  ஒரு மண்டையோடு வெளியில் பறந்து போனது இன்னொரு வீட்டினுள் இருந்து ஒரு பொம்மை வெளியில் போனது இன்னொரு வீட்டில் இருந்து பெரிய கருப்பு நாய் வெளியில் போனது என்று நம் கண்களுக்கு தெரியாத காரியங்களை எல்லாம் பார்த்து சொல்லுவாள்.
 
தேவனின் அபிஷேகங்களை  இடைப்படுதலை அதிகம் அனுபவித்தவள் தேவ தூதர்களை பலமுறை நேரடியாக பார்த்தவள்.
 
எப்பொழுதும் கிறிஸ்த்தவ பாட்டு தேவ சிந்தை என்று இருப்பவள்!
 
கடந்த 4 மாதங்களுக்கு முன்னால்  சபையில் கூட ஜெபிக்க வரும் சகோதரி  மிகவும் அவசரமாக பணம் வேண்டும் நான் வட்டி தருகிறேன் ஒரு 40 ஆயிரம் கொடுங்கள் என்று கேடடார்களாம். எனக்கு தெரியாமல்  செயினை கொண்டு அடகு வைத்து தன கையில் இருந்த கொஞ்ச பணத்தையும் போட்டு அவர்களுக்கு பணத்தை கொடுத்துவிட்டாள்.
 
ஓரிரு மாதங்களுக்கு பின்னர்  அநேக நேரங்களில் அவள் ரொம்ப டல்லாக  இருப்பதை பார்த்து "உனக்கு என்ன ஆச்சு எப்போதும் ஜெபம் பாட்டு என்று இருப்பாய் இப்பொழுது எதோ வாழ்க்கையே வெறுத்த நிலையில் இருக்கிறாயே என்ன ஆனது என்று கேட்ட்டேன்"
 
அப்பொழுதுதான் நான் இப்படி கடன் கொடுத்தேன் அந்த சகோதரி பணத்தை தரவில்லை ரொம்ப ஏமாத்துகிறது நான் ஏதாவது பேசினால் போலீசில் போய் கம்ளைட் கொடுக்கட்டுமா? என்று என்னிடமே கேடகிறது. சபை பாஸ்டரிடம் சொன்னால் நீங்கள் பணம் கொடுக்கும்போது என்னிடம் ஏன் சொல்லவில்லை அதனால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிடடாராம். ( பணம் கொடுக்கும்போது சொல்லியிருந்தால் அதில் பாதியை சபை கட்டுவதற்கு அவசர தேவை என்று சொல்லி பிடுங்கியிருப்பர் என்பது வேறு விஷயம்) 
 
அநேகந்தரம் அவர்கள் வீட்டுக்கு அலைந்தாகிவிட்ட்து இப்போது அந்த பணத்தை  எப்படி வாங்குவது என்று தெரியவில்லை என்று மிகுந்த சோகத்தோடு சொன்னாள்.
 
நான் சொன்னேன் பணத்தை வட்டிக்கு கொடுப்பது தவறு என்று வசனம் சொல்கிறது   
 
எசேக்கியேல் 18:13 வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை,  
 
சங்கீதம் 15:5 தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும்......... இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.  
 
தன பணத்தை வட்டிக்கு கொடாமல் இருப்பவன் அசைக்கப்படுவது இல்லை கொடுப்பவன் நிச்சயம் அசைக்கப்படுவான். அப்படி அசைக்கப்படும்போது அவன் வீழ்ந்து போகவும் வாய்ப்புகள் உண்டு  
 
இப்படி தேவ வார்த்தையை மீறி செய்ததால்தான் உனக்கு இந்த கஷடம் வந்தது என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் அல்லவா என்று சொன்னேன்.
 
ஆனால் அவள் நியாயப்பிரமான வார்த்தைகள் தேவையில்லை "ஆண்டவராகிய இயேசு ஒரு தாலந்து பெற்றவனை பார்த்து இதை நீ காசுகாரனிடம் 
ஏன் கொடுத்து வைக்கவில்லை அப்பொழுது வட்டியுயோடு  பெற்றுக்கொள்ளலாம் அல்லவா" என்று சொன்னாரே என்றாள்.
 
நான் சொன்னேன்  "காசுக்கடை காரன் என்பவன் ஏறக்குறைய வங்கியின் செயல் செய்பவன் இப்படி அவசரத்து பணம் கடன் கேட்பவன் அல்ல அதுவும்  "நாம் கிறிஸ்த்தவர்கள் சகோதரர்களாக இருக்கிறோம் அவர்களிடத்தில் கடடயாம் வாங்க கூடாது" என்று வசனம் சொல்கிறது என்றேன்.
 
உபாகமம் 23:19 கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.  
 
யாத்திராகமம் 22:25 உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். 
 
ஆனால் அவளோ நான் சொன்ன பழைய ஏற்பாட்டு வசனங்களை ஏற்கவில்லை. இப்போது  அநேகதரம் அவர்கள் வீட்டுக்கு அலைந்து மிகுந்த சோர்வு நிலையில் இருக்கிறாள். சரியாக சாப்பிடுவதுகூட இல்லை.  அது என்னையும் வீட்டில் உள்ள எல்லோரையும் பாதிக்கிறது.. முக்கியமாக அவள் ஆவிக்குரிய நிலையை மிகவும் பாதித்துள்ளது.
 
சாலமோனுக்கு தேவன் கனவில் உணர்த்தியதுபோல இவளுக்கும் ஆண்டவர் ஒரு கனவின் மூலம் அவள் செய்துள்ள தவறை விளக்கியுள்ளார் ஆகினும் நான் சொல்லும் வார்த்தைகளை கேட்க்கும் நிலையில் இல்லை. 
 
எனவே அன்பானவர்களே நீங்கள் என்னதான் ஆவிக்குரிய நிலையின் உச்சத்தில் இருந்தாலும் தேவன் சொல்லி கொடுத்துள்ள "கற்பனைகள் நீதி நியாயங்களை படித்து முடிந்தவரை கைக்கொண்டு நடக்க பிரயாசம் எடுங்கள்.  தேவையில்லாமல் / காரணம் இல்லாமல் தேவன் எதையும் நமக்கு எழுதித்தரவில்லை.  சிலவற்றை கைக்கொள்ள முடியாமல் கடினமாக இருக்கலாம் முடியாமல் போகலாம்  ஆனால் அதனால் நம் பரலோக வாழ்வுக்கு எந்த பங்கமும் வரப்போவது இல்லை. 
 
மற்றபடி தேவ வார்த்தைகளை அறிந்தும் துணிந்து மீறி நடப்பீர்கள் என்றால் எங்காவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு நமக்கு நாமே வேதனையை வரவைத்துகொள்வது உறுதி.
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

அண்ணா புரிகிறது

மீண்டும் அக்காவை மீண்டும் பழைய நிலையில் கட்டி எழுப்புங்கள்

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard