தேவனுடைய ராஜ்யத்தையம் அதன் நீதியையும் தேடுவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும் அவ்வாறு நாம் இருந்தால் மற்ற எல்லாவற்றையும் அவர் பார்த்துகொள்வார்.
ஆண்டவர் இவ்வாறு சொல்கிறார்.
மத்தேயு 6:33முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
என் எண்ணம் நோக்கம் எல்லாமே தேவனுடைய வார்த்தைகள்படி வாழ்கிறேனா என்பதை ஆராய்வது மட்டுமே வேறு எந்த திடடமோ நோக்கமோ என் வாழ்வில் இல்லை.
மற்ற எல்லாவற்றையும் அதனதன் காலத்தில் தேவன் எப்படி செயகிறாரோ அப்படியே விட்டுவிடுகிறேன்.
நிரந்தரம் இல்லாத வேலைதான் ஆனால் பெரிதாக கஷ்ட்டப்பட்டு வேலை தேடுவது கிடையாது. ஆண்டவரை அறிந்த பின் 4 கம்பனியில் வேலை பார்த்துள்ளேன் எல்லாமே தானாக வந்ததுதான்
அது மட்டுமல்ல கர்த்தரின் வார்த்தைகளை காத்துக்கொள்வதை தவிர வேறு எந்த ஒரு காரியத்துக்கும் பெரிதாக முயற்சிகளை எடுப்பதே கிடையாது.
நம் எண்ணம் ஏக்கம் எல்லாம் அவர் வார்த்தைகள்படி சரியாக வாழவேண்டும் அதை குறித்து தியானிக்க வேண்டும் அதை குறித்து பேச வேண்டும்.
அவ்வாறு இருந்தால் வேறு எந்த எதிர்பார்ப்பும் வராது. நாம் சமாதானத்தோடு வாழ தேவையானதை ஆண்டவர் நிச்சயம் தந்துகொண்டே இருப்பார். அதற்க்கு மீறி ஆசைப்பட கூடாது. அவர் தருவதில் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் அவ்வளவே!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)