இங்கு முழுநேர ஊழியம் பற்றி குறிப்பிடுவதாக நான் கருதவில்லை மாறாக தேவன் சொன்னதை உடனடியாக செய்து முடிக்கமுடியாதபடிக்கு "பிழைப்புக்கடுத்தது அலுவல்களில் நாம் சிக்கிக்கொள்ள கூடாது" என்பதே அதன் நோக்கம்.
அதாவது நாம் பிழைப்புக்காக செய்யும் எந்த ஒரு வேலையும் தேவன் நமக்கு சொல்லும் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கும் ஒரு நிலையில் நாம் இருக்கக்கூடாது.
முழு நேரம் ஊழியம் செய்தால் பிறர் பணத்தின் நாம் சாப்பிட வேண்டியது வரும்:
ஆனால் பவுல் தான் வேலை செய்து சாப்பிட்ட்தாகவும் எல்லோரும் வேலை செய்து சாப்பிட வேண்டும் என்றும் பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
I தெசலோனிக்கேயர் 2:9உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
I தெசலோனிக்கேயர் 4:12நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.
II தெசலோனிக்கேயர் 3:10ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
II தெசலோனிக்கேயர் 3:12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
எனவே நான் புரிந்துகொண்டபடி "பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொண்டு பிழைப்பு நடத்துவதும் குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பதும் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட கூடாது. கர்த்தரின் அழைப்பு வருமாகின் எந்த நேரத்திலும் எதையும் செய்ய ஆயத்தமாக இருக்கவேண்டும் என்பதே"
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)