இவ்வசனத்தை தேவன் சொல்லாதபடியால் எனக்கு ஒரு குழப்பம் இருக்கிறது.
அதாவது பாவிகளின் ஜெபம் தேவனிடம் எட்டாதா? அவர்களின் ஜெபம் கேட்கப்பட மாட்டாதா?
மேலும் பாவிகளின் ஜெபத்தை கேட்காதபடிக்கு தேவன் தன் முகத்தை மறைக்கிறாரா?
வேத விளக்கம் தருக
உண்மையில் இந்த புலம்பல் புஸ்தகம் என்பது மிகவும் ஆவிக்குரிய புஸ்த்தகம். இதை படித்து படித்து அநேக முறை நான் அழுதிருக்கிறேன். இதில் சொல்லப்படட வார்த்தைகள் எல்லாமே தேவ ஆவியால் நிரம்பிய எரேமியா என்ற தீர்க்கதரிசி சொன்னது.
தாங்கள் குறிப்பிட்டுள்ள இந்த வசனம் தேவனால் நேரடியாக சொல்லப்படவில்லை என்றாலும் ஒரு தேவதாசன் அல்லது தேவனுடைய தீர்க்கதரிசி அறிந்து உணர்ந்து சொன்னது அல்லது ஆதங்கத்தில் சொன்னது என்பதால் அதை நாம் சாதாரணமாக நிராகரிக்க முடியாது.
மேலும் இந்த வசனம் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்ட்து என்று பார்க்க வேண்டும். தேவன் பலமுறை எச்சரித்தும் அதை கேட்டு திருந்தாத இஸ்ரவேல் ஜனத்தவர் தேசமானது நேபுகாத்நேச்சாரல் அழிக்கப்படட பிறகு அவர்கள் பண்ணிய ஜெபத்தை தேவன் கேட்க்காத காரணத்தால் எரேமியா இவ்வாறு புலம்புகிறார்.
சாதாரணமான ஒரு பாவி மனம்திரும்பும்போது அவன் என்னதான் பாவம் செய்திருந்தாலும் அதை கேட்டு தேவன் அவனை மன்னித்து ஏற்றுக்கொள்வார். ஆனால் பலமுறை எச்சரித்த பிறகும் துணிந்து பாவம் செய்துவிட்டு தண்டனை வரும் நேரத்தில் மட்டும் ஆண்டவரை தேடினால்
என்ன சொல்கிறார்?
எசேக்கியேல் 8:18ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்.
எனவே எந்த சூழ்நிலையில் பாவியின் ஜெபத்தை தேவன் கேட்பதில்லை என்ற நிலைப்பாடு மிக மிக முக்கியம்.
இந்த வசனங்களுக்கு இணையாக பல வசனங்கள் வேதத்தில் இருக்கிறது: முக்கியமாக ஆண்டவர் ஏசாயா மூலம் இவ்வாறு சொல்கிறார்
ஏசாயா 1:15நீங்கள் உங்கள் கைகளைவிரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
என்றும் சொல்கிறார்.
எனவே தேவனின் எண்ணங்களையே எரேமியா இங்கு பிரதிபலிக்கிறானேயன்றி வேறல்ல.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சூழ்நிலைகளுக்கு ஏற்ப இது மாறுமா என்று விளக்க முடியுமா அண்ணா? அதாவது ஒரு ஆண்டவரை அறிந்த மனிதன் எதோ ஒன்றில் விழுந்து போய் மறுபடி உணர்வடைந்து ஜெபிக்கும் போது தேவன் அந்த ஜெபத்தை ஏற்று கொள்ளுவார் அல்லவா? இதை வசனத்தோடு விளக்க முடியுமா?
மற்றும் ஆண்டவரை அறியாத ஒரு பாவி ஒரு ஆபத்திலோ என்றோ நமது ஆண்டவரை நோக்கி கூப்பிடும் போது அந்த சூழ்நிலை எப்படி இருக்கும்? அவனின் ஜெபம் கேட்கப்படுமா?
////சூழ்நிலைகளுக்கு ஏற்ப இது மாறுமா என்று விளக்க முடியுமா அண்ணா? அதாவது ஒரு ஆண்டவரை அறிந்த மனிதன் எதோ ஒன்றில் விழுந்து போய் மறுபடி உணர்வடைந்து ஜெபிக்கும் போது தேவன் அந்த ஜெபத்தை ஏற்று கொள்ளுவார் அல்லவா? இதை வசனத்தோடு விளக்க முடியுமா?///
எழுதரம் அல்ல ஏழெழுப்பதுதரம் மன்னிக்க சொன்ன தேவன் தாம் மன்னியாது இருப்பாரா?
ஆம் நிச்சயமாக மன்னிப்பார். நம் தேவன் மிகுந்த இரக்கமுள்ளவர் ஒரு மனுஷன் எந்த நிலையில் இருந்தும் உண்மையாய் மனம்திரும்பி தேவனிடத்தில் தன்னை தாழ்த்தி மன்னிப்பு கேட்க்கும்போது அவர் மனமிறங்குகிறார்.
இதற்க்கு அநேக உதாரணங்கள் உண்டு. :
நெகேமியா 9:28அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத் தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர்.
முக்கியமாக இஸ்ரவேலின் ராஜா மனாசே செய்யாத பாவம் இல்லை அப்படி தேவனுக்கு கோபமூட்டினான் என்று வசனம் சொல்கிறது
2 ராஜா 21: 6. தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து,கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.
16. கர்த்தரின்பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப்பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.
II நாளாகமம் 33:11ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.
II நாளாகமம் 33:12. இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகியகர்த்தரைநோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்.13 அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.
ஆகினும்செய்த பாவத்துக்கு சிலகாலம் தண்டனை உண்டு அந்நேரங்களில் கர்த்தர் தனமுகத்தைமறைப்பார் அவர் பிரசன்னத்தை உணர முடியாத ஒரு நிலை உண்டாகும்.
சவுல் மற்றும் யூதாஸ் மனந்திரும்பியும் மன்னிப்பை பெறாமல் போனதற்கு காரணம் அவர்கள் தேவனிடம் திரும்பவில்லை என்பதே கீழேயுள்ள திரியை வாசிக்கவும்
///////////////////எழுதரம் அல்ல ஏழெழுப்பதுதரம் மன்னிக்க சொன்ன தேவன் தாம் மன்னியாது இருப்பாரா? ///////////////////
ஆம் உண்மை தான்.
மன்னித்த பின்னர் தம் முகத்தையோ மறைப்பாரா?
தேவனோடு இருக்கும் பொது கூட சில நேரங்களில் தேவ பிரசன்னத்தை உணர முடியாத சூழ்நிலை வருகிறது அல்லவா? அது ஏன்? பாவத்திட்கான தண்டனையா?
///////////////////////////சவுல் மற்றும் யூதாஸ் மனந்திரும்பியும் மன்னிப்பை பெறாமல் போனதற்கு காரணம் அவர்கள் தேவனிடம் திரும்பவில்லை என்பதே கீழேயுள்ள திரியை வாசிக்கவும் ////////////////////////////
மனந்திரும்பினால் மட்டும் காணாது தேவனிடம் திரும்ப வேண்டும் அப்படியா?