வாழ்க்கை துணை விடயத்தில் சரியான தீர்மானம் எடுப்பது எப்படி? தேவ சித்தத்தை சரியாக அறிந்துகொள்வது எவ்வாறு?
ஒருவரை திருமணம் செய்யலாமா வேண்டாமா அதில் கர்த்தருடைய சித்தம் என்னவென்பதை நாம் எப்படி அறிவது?
வேதத்தில் இதுபோன்ற குழப்பமான சூழ்நிலையில் என்ன செய்தார்கள்?
லேவியராகமம் 16:8அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு,
அதில் என்ன வருகிறதோ அதன்படி செய்தார்கள்.
நீதிமொழிகள் 16:33சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
என்று வசனம் அதை அங்கீகரிக்கிறது.
புதிய ஏற்பட்டில் யூதாஸ் இடத்தில் அப்போஸ்தலரை தேர்ந்தெடுக்கு சீட்டு போட்டு பார்த்த சம்பவம் உண்டு.
அப்போஸ்தலர் 1:26பின்பு, அவர்களைக் குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின் பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
எனவே குழப்பமான நேரத்தில் இந்த சீட்டு போட்டு பார்க்கும் முறையை பின்பற்றலாம்.
பின் குறிப்பு:
1. சீட்டு போட்டு பார்க்கும் முன் தீர்மானமான ஜெபம் ஒன்றை தேவனிடம் ஏறெடுக்க வேண்டும்.
2. சீட்டின் தீர்ப்பில் வரும் முடிவுகளை ஆண்டவரே பொறுப்பேற்கும்படிக்கு அவர் கையில் விட்டுவிட வேண்டும்.
3. சீடடை பல நேரம் போட்டு போட்டு பார்க்க கூடாது.
4. சீட்டு போட்டு பார்த்த பிறகு வந்த பதிலை தேவனே இடைபடடால் அன்றி எக்காரணத்தை கொண்டும் மாற்றகூடாது அது ரொம்ப வேதனையை தரும் முடிவாக இருக்கும்
5. வந்த முடிவுக்காக வருந்தபட கூடாது.
6. சீட்டு போட்டு பார்த்தபின் வருந்துவதற்கு பதில் சீடடே போட்டு பார்க்காமல் உங்கள் மனதுக்கு பிடித்ததை செய்யலாம். போட்டு பார்த்தபின் மாற்ற கூடாது.
இவ்வாறு இருப்பின் கர்த்தர் அதற்க்கு நிச்சயமாக பொறுப்பேற்று காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.
இது வேதத்தின் அடிப்படையில் என்னுடைய அனுபவ விளக்கமும் கூட. இதையே நான் பலமுறை கையாண்டிருக்கிறேன் நல்ல பலன் கிடைத்துள்ளது என்பதால் இங்கு எழுதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)