ஒரு வெள்ளிகிழமை உபவாச ஜெபத்தில் சகோதரிகள் மத்தியில் பேசிய ஒரு நடுத்தர வயது பாஸ்டர் "திருமணமான எல்லோருக்குமே அடுத்த நல்ல ஆண்களை பார்க்கும்போது மனதில் இச்சை மற்றும் ஆசை வருவது சகஜம்தான் ஆனால் நாம்தான் அதை தவிர்த்து பரிசுத்தமாய் வாழ பிரயாசம் எடுக்க வேண்டும்" என்று சொன்னாராம்.
இதை கேட்ட என் மனைவி ஜெபவேளை முடிந்ததும் பாஸ்டரிடம் சென்று என்ன பாஸ்டர் இப்படி பேசுகிறீர்கள்? எல்லா பெண்களும் அடுத்த ஆண்களை பார்த்து ஆசைப்பட்டுவிடுவது இல்லை. நீங்கள் தவறான கருத்தை சொல்கிறீர்கள் என்று சொன்னதற்கு, அவர் நான் சொன்னது சரிதான் என்று வாதிட்டுள்ளார்.
உடனே என் மனைவி பக்கத்தில் நின்ற பாஸ்டரின் மனைவியாரை பார்த்து " சிஸ்டர் நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு மற்ற ஆண்களை பார்த்தால் மனதில் ஆசை வருவதுண்டா?" என்று கேட்டிருக்கிறாள் அதற்க்கு அந்த பாஸ்ட்டரம்மா ஒரு நமுட்டு சிரிப்புடன் பதில் ஏதும் சொல்லவில்லையாம்.
உடனே ஜெபத்துக்கு வந்திருந்த மற்ற ஸ்திரீகளை பார்த்து "உங்களுக்கு பாஸ்ட்டர் சொல்வதுபோல் பிற ஆண்களை பார்த்து ஆசை வருமா? என்று கேட்டதற்க்கு யாருமே இல்லை அது தவறு என்று திடமான பதிலை சொல்லவில்லையாம். என்னிடம் வந்து பாஸ்ட்டர் சொன்னது சரியா? என்று கேடடாள்.
எனக்கு ஸ்திரீகளின் மனதை பற்றி என்ன தெரியும்? ஆகினும், கணவனை தவிர மற்ற ஆண்களை மனதில் நினைத்துக்கூட பார்க்காத பண்பாடுள்ள அநேகம் ஸ்திரீகள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். என்று சொன்னேன். .
போதகர்களே! உங்கள் மன நிலையை வைத்தும் உங்கள் மனைவியின் மனநிலை அல்லது ஒருசில ஸ்திரிகளின் மனநிலையை வைத்து எல்லோரும் அப்படிதான் இருப்பார்கள் என்று தீர்மானிக்காமல், பிரசங்க பீடத்தில் சொல்வதை தேவ சித்தத்துக்கு ஏற்றபடி வசனத்தின் அடிப்படையில் சொல்வதே சிறந்தது.
மேலதிக விளக்கம் அறிந்தவர்கள் பதிவிடலாம்.
-- Edited by SUNDAR on Wednesday 17th of June 2020 02:17:31 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)