நாங்கள் சென்னையில் புதியதாக ஒரு Flat வாங்கி 2013ல் குடிவந்தோம். 6 வருடங்கள் 2019 வரை அருமையான காற்றோட்டமாக வீடு இருந்தது
ஆகினும் மே மாதம் மட்டும் கொஞ்சம் அதிக சூடு இருக்கும் அது இயற்கையின் நியதி எல்லோருக்கும் அப்படித்தான்.
ஆனால் என் மனைவி தேவன் நியமித்த அந்த ஒரு மாத சூட்டை தாங்கிகொள்ள மனதில்லாமல் A/C வேண்டும் என பிடிவாதம் பிடிக்த்தாள். நான் A/c வெளியேற்றும் வெப்ப காற்று பல தீமைகளை உருவாக்கும் எனசொல்லி வாங்க மறுத்துவிட்டேன். ஆனால் என் மகன் என்னை கேட்காமல் அவன் தாய் கேட்டதால் ஏசி வாங்கி கொடுத்துவிட்டான்.
#2019 மே மாதம் ஏசி வாங்கினோம். அதே வருடத்தில்தானே எங்கள் வீட்டு பக்கத்தில் காலியாய் இருந்த இடத்தை ஒருவர் வாங்கி எங்கள் வீட்டை மிகவும் நெருக்கி எங்கள் வீட்டுக்குள் காற்றோட்டமே வராத அளவுக்கு மிகப்பெரிய வீட்டை கட்டிவிட்டார்.
இப்போது நாங்கள் ஏசி போடாமல் வீட்டில் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம். கரண்ட் பில் வேறு மிக அதிகமாக வருகிறது,
இது குறித்து #ஆண்டவரிடம் விசாரித்தபோது, நான் அளந்து கொடுப்பதை அப்படியே ஏற்க மனமில்லை என்றால் உன் சுய பெலத்தால் எதுவரை சாதிக்க முடியுமோ சாதித்துகொள்ளுங்கள். என்று உணர்த்துகிறார்.
#கர்த்தர் நியமித்துள்ள எதையுமே உள்ளபடி ஏற்றுக்கொண்டு அங்கு கஷ்டம் இருந்தாலும் அவர் கைக்குள் மன ரம்யமாக வாழ பழகுவோம்.
6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, #அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.
1 பேதுரு 5
அவர் கரத்துக்கு வெளியே அனேக இன்பங்களை சாத்தான் வைத்திருக்கலாம். ஆனால் அது எல்லாமே நமக்கு கண்ணிகளாகவே அமையும் என்பதை அறியுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)