தேவன் தான் சொல்வதை மறுபேச்சின்றி அப்படியே செய்ய துணியும் மனுஷர்களையே எதிர்பார்க்கிறார் என்பதை ஆப்ரஹாம் ஈசாக்கை பலியிடும் சம்பவத்தின் மூலம் அறிய முடியும்.
தேவன் ஆரஹாமை நோக்கி
ஆதியாகமம் 22:2உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.
இங்கே ஆப்ரஹாம் ஆண்டவரே கொலை செய்வது பாவம் அல்லவா அதை நீரே செய்ய சொல்லலாமா நீரே சொன்னாலும் நான் இதுபோன்ற கொலை பாதகம் எல்லாம் செய்யவே மாடடேன் என்றெல்லாம் சொல்லி தன்னை பெரியவனாக காட்டிக் கொள்ளாமல்
என்ற மிகப்பெரிய ஆசீர்வத்தை மற்றவர்களும் பெறமுடிந்தது .
அதேபோல் இன்றும் தேவன் என்ன செய்ய சொல்கிறாரோ அதை மறுப்பின்றி செய்பவரை வைத்தே தேவன் காரியங்களை சாதிக்க முடியும்.
அனாதியாய் என்றென்றும் வீற்றிருக்கும் அவருக்கு தெரியும் இங்கு எது பாவம் எது பாவமில்லை என்பது.
எது பாவம் எது பாவமல்ல எந்தை தீர்மானிப்பது யார்?
நான் இப்பொழுது ஒரு வீட்டில் தங்கியிருக்கிறேன் ஒருவேளை நான் அங்கு இல்லை என்றால் அங்கே வேறு ஒருவர் தங்குவதற்கு இடம் கிடைத்திருக்கும் எனவே யாரோ ஒருவருக்கு பயன்படும் இடத்தை நான் பயன் படுத்துகிறேன் அது பாவம் தானே?
நான் கடையில் சாப்பாட்டுக்கு ஒரு மூடடை அரிசி வாங்குகிறேன் ஒருவேளை நான் அதை வாங்காவிடடாள் அது வேறு ஒருவருக்கு பசியாற பயன்பாட்டிற்கும் அதை நான் வாங்கிவிடடேன் அது பாவம் தானே?
சுவாசிக்கும் காற்றில் இருந்து நாம் பயன்படுத்தும் ஒவ்வொன்றும் நாம் இல்லை என்றால் வேறொருவருக்கு பயன்படும்.
இப்படி பாவம் எதுவென்று பார்த்தால் நாம் செய்யும் ஒவ்வொன்றும் பாவம்தான் என்ற நிலை வரும்.
எனவே தேவன் என்ன செய்ய சொல்கிறாரோ அதை மாத்திரம் நாம் கருத்தாய் கைக்கொண்டு நடந்தால் போதும் எப்படி ஆப்ரஹாமின் செயல் மூலம் பூமியின் வம்சங்களை எல்லாம் ஆசீர்வதித்தாரோ அதேபோல் நம்மூலம் தேவன் பெரிய காரியங்களை செய்ய முடியும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவன் செய்ய சொல்வதை நாம் செய்ய வேண்டும்.. அதட்கு மறுபேச்சு இல்லை..
ஆனால் நீங்கள் கூறிய இந்த உதாரணங்கள் எல்லாம் பாவம் என்ற போர்வைக்குள் வராது என்றே எனக்கு தோன்றுகிறது.. ஏனென்றால் நாம் வாங்குகின்ற கடையில் இன்னொருவர் வாங்குவதட்கு பொருட்கள் இல்லை அது மிகப்பெரிய பஞ்சகாலம் என்றால் நாம் முழுவதையும் வாங்கிகொள்ளுவது தவறு ஏனென்றால் நான் முழுவதையும் வாங்கிக்கொண்டதால் இன்னொருவருக்கு கொஞ்சம் கூட இல்லாமல் ஆகிவிட்டது ஆனால் சாதாரணமான நேரங்களில் நான் அரிசியை வாங்குவதால் மற்றவருக்கு கிடைக்காமல் போகாது அவர் வேறு கடையிலோ எங்கயோ வாங்கலாம். ஆகவே அது பாவமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது ..
தங்குமிடம் கூட அவருக்கு இன்னொரு இடம் கிடைக்கும் ஆனால் இருக்கவே இடம் இல்லாத ஒருவருக்கு நாம் உதவாமல் இருப்பது பாவமாகலாம் ஆனால் நீங்கள் குறிப்பிட்ட உதாரணம் பாவமானது என்று தோணுகிறது ..