புறம்பே இருக்கிறவர்களுக்கு ஏன் உவமைகளாக சொல்லப்படுகிறது?
புறம்பே இருப்பவர்கள் என்று யாரை இயேசு குறிப்பிடுகிறார்?
12. அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
புறம்பே இருக்கிறவர்கள் ஏன் குணப்படவும் மன்னிக்கப்படவும் கூடாது? ஏன் அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும் உணராதவர்களாகவும் இருக்கும்படியாக இவ்வாறு சொல்லப்படுகிறது என்று இயேசு குறிப்பிடுகிறார்
புறம்பே இருப்பவர்கள் என்பவர்கள் தேவனை தேடாமல் தேவனை அறிந்தும் அறியாமல் உலக இன்பங்களில் முழுமையாக மூழ்கி வாழ்ந்துகொண்டு இருப்பவர்களையே புறம்பே இருப்பவர்கள் என்று வசனம் சொல்கிறது.
ரோமர் 1:21அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
பொதுவாக ஆண்டவர் சொல்லுவது என்னை தேடுங்கள் அப்பொழுது நான் உங்களுக்கு தென்படுவேன் என்பதே!
ஆண்டவரை தேடாமல் உலக இன்பங்களை தேடுபவர்களுக்கு உவமையை சொன்னாலும் ஏறாது உண்மையை சொன்னாலும் மண்டையில் ஏறாது இவர்கள் இருதயம் இருளடைத்துவிட்ட்து.
பொதுவாக ஒரு yutube சேனலில் எதை தேடுகிறோமோ அது சம்பந்தமான செய்திகள்தான் வரும். அதேபோல் தேவனுக்குரியத்தை தேடினால் தேவன் தென்படுவார். உலக காரியங்களை தேடினால் அதுதான் வரிசையாக வரும்.
அதாவது ஒருவர் மிகவும் நல்லவராக இருந்தால் அவருக்கு ஆண்டவரை பற்றிய செய்தி யார் மூலமாகவோ அடிக்கடி சொல்லப்படும். ஓரளவு நல்லவராக இருந்தால் சிற்சில நேரங்களில் சிலர் மூலம் சொல்லப்படும். இருதயத்தில் ஈரமில்லாத கெடடவனுக்கு எங்கோ யாரோ சொல்வது லேசாக கேட்க்கும் ஆனால் அதை பெரிதாக எடுக்கவும் மாட்டான் அதன்மூலம் அவன் உணர்வடையவும் முடியாது
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்படியானால் ஒரு மனிதன் நல்லவனா கெட்டவனா என்று பார்த்தா அவனுக்கு சுவிஷேசம் சொல்லப்படுகிறது?
அவனுடைய குணாதியசங்கள் இரட்சிப்பில் தாக்கம் செலுத்துகிறதா?
வசனத்துடன் சற்று தெளிவாக விளக்கவும்
சிஸ்ட்டர் சில தேவனின் செயல்பாடுகளுக்கு நம் தீர்க்கமான பதிலை காண்பது சாத்தியம் இல்லாதது
பெதஸ்தா குளத்தருகில் எத்தனையோ நோயாளிகள் படுத்திருக்க இயேசு ஒரே ஒருவனை மட்டும் குணமாக்க காரணம் என்ன? மற்றவர்களை அவர் நேசிக்கவில்லையா?
இஸ்ரவேலில் எத்தனையோபேர் இருக்கும்போது வெறும் 12 பேரை இயேசு ஏன் எந்த அடிப்படையில் சீஷர்களாக தேர்ந்தெடுத்தார்? அதிலும் சிலரிடம் ரொம்ப நெருக்கமாகவும் சிலரிடம் சற்று தூரமாகவும் இருக்க காரணம் என்ன?
லுக் 4:25. அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.
26. ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.
27. அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
எதற்குமே ஒரு அடிப்படை இருக்கிறது. இயேசுவே சொல்கிறார் உங்களுக்கு அருளப்பட்ட்து புறம்பே இருப்பவர்களுக்கு அருளப்படவில்லை என்று.
தேவன் ஒருவரிடம் அடிக்கடி பேசவும் ஒருவரை விட்டு விலகி செல்லவும் அவரவர் இருதய நினைவுகளே காரணம்.
அசிங்கத்தை கண்டதால் நாமே விலகித்தானே செல்கிறோம் அதுபோல் ஒருவர் இருதயம் சூதும் கேடும் நிறைந்திருந்தால் தேவனால் அங்கு பிரவேசிக்க முடியாது அப்படிபடடவர்கள் புறம்பேதான் இருப்பார்கள்.
ஆனால் அவர்களுக்கும் சுவிசேஷம் சொல்லப்படும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)