இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஞானம் என்றால் என்ன? அது எப்படி வரும்? உதாரணத்துடன் விளக்குக!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2016
Date:
ஞானம் என்றால் என்ன? அது எப்படி வரும்? உதாரணத்துடன் விளக்குக!
Permalink  
 


ஞானத்தின் மகிமை பற்றி  யோபு சொல்வதை சற்று ஆராய்ந்து பார்த்தால் அதன் உண்மை புரியும்.   


13 ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?

14 அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.

15 ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.

16 அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.

17 ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.

18 பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது.

பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.

எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்…

21 இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?

அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப்பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.

 

23தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.

 

28  ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

 

ஆம்! மனுஷன் என்னதான் ஞானத்தில் பெயர் பெற்றாலும் அந்த ஞானம் எல்லாம் தேவனுடைய ஞானத்துக்கு முன்னால் பயித்தியம் போன்றது.

 

அவரை அறிவதே ஞானம். அவரே ஞானத்தின் ஆரம்பம்.

விபச்சாரம் செய்த ஸ்திரீயை மோசேயின் நியாயப்பிரமானப்படி கல்லெறிந்து கொல்வதா அல்லது அவளை மன்னித்து விடுவதா? எப்படி செய்தாலும் அவர்மேல் குற்றம் கண்டுபிடிக்கலாம் என்று மனுஷ ஞானத்தின்படி எல்லோரும் காத்துக்கொண்டிருக்க

"உங்களில் பாவம் இல்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்"

என்ற வார்த்தைதான் தேவ ஞானம் எப்படிப்பட்ட்து என்பதற்கு ஒரு உதாரணம் அதன் முன்னால் எந்த மனுஷனும் நிற்க முடியாது.

9அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள்.

சுருக்கமாக சொன்னால் "மனுஷர்கள் எல்லோரும் ஒரு கோணத்தில் சிந்தித்து கொண்டிருக்க, யாருமே சிந்திக்காத ஒரு கோணத்தில் சிந்தித்து  அறிய முடியாத பதிலை கொடுப்பதே" ஞானம் என்பதன் பொருள். 

அப்படி ஒரு பதிலை கொடுக்க தேவனால் மட்டுமே முடியும்.



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard