நான் எங்கள் வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு எழுதுகிறேன் இதில் உங்கள் கருத்து என்ன என்பதை பதிவிடும்படி அன்புடன் கேட்கிறேன்
நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கடந்த ஒரு வருடமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றி வருகிறோம். எங்கள் வீடு Flat System. இருக்கும் மூன்று வீடுகளில் நாங்கள் மாத்திரம் சொந்த வீடு வைத்துள்ளோம் மற்றும் இரண்டுபேர் வாடகைக்கு இருக்கிறார்கள்.
தண்ணீர் ;லாரிக்கு உண்டான பணத்தை நான் முதலில் கொடுத்துவிட்டு பின்னர் மற்ற இரண்டு பேரிடமும் பாகத்தை வாங்கி வருகிறேன்.
இதில் ஒரு வீட்டில் இருப்பவர்கள் தண்ணீர் அதிகம் செலவழிப்பதோடு தண்ணீர் ஊற்றியதும் உடனே பணமும் தருவதில்லை ஆனால் லெட்ட்தாக
கொடுத்துவிடுவார்கள். ஓரளவுக்கு வசதியான குடும்பம்தான் ஆனாலும் ஏனோ உடனே அவர்களுக்கு பணம் கொடுக்க மனம் வருவதில்லை.
இதனால் எங்கள் வீட்டில் உள்ள எல்லோருமே குமிறிப்போய் இருக்கிறார்கள். எல்லோருமாக சேர்ந்து அவர்களை போய் சத்தம் போட்டு இனி லாரி தண்ணீருக்கு பணம் கொடுத்து நீங்கள் வாங்குங்கள் நாங்கள் எங்கள் பங்கை உடனே கொடுத்து விடுகிறோம் என்று திடடமாக சொல்ல சொல்கிறார்கள்.
நானோ இதில் என்ன இருக்கிறது ஒரு 1500/- ரூபாயை கொடுத்துவிட்டு கொஞ்சம் லேடடக அதை வாங்குவதில் என்ன குடி முழுக்க போகிறது?
அவர்கள் பணம் தந்தாலும் சரி தராமல் போனாலும் சரி நான் தண்ணீர் போடுகிறேன் என்றும் சொல்லி ஆண்டவராகிய இயேசுவும் இதைத்தானே சொல்கிறார் என்று சொல்கிறேன்
உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. என்று ஆண்டவர் சொல்லுகிறார்
ஆனால் வீட்டில் இருக்கும் மனைவி பிள்ளைகளோ, வாடகைக்கு இருக்கும் அவர்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கிறது நாம் சொந்த வீடு வைத்துக்கொண்டு அவர்களுக்கு என் தாழ்ந்து போகவேண்டும் என்று சொல்லி என்னை அவரிடம்போய் பேச சொல்வதோடு மட்டுமெல்லாமல், நான் ஒரு பயந்தாங்கோலி என்றும் படடம் சூட்டுகிறார்கள்
எனக்கு இது ஒரு பெரிய மேடடராகவே தெரியவில்லை. அவரிகளிடம் போய் சண்டைபோடவும் விருப்பமில்லை அவர்கள் வேண்டுமென்று செய்தாலும் வேண்டாவெறுப்பாக செய்தாலும் எனக்கு எந்த தாக்கமும் இல்லை.
எங்கள் வீட்டில் உள்ளவர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்ற எண்ணமே மேலோங்குகிறது.
இதை படிக்கும் மற்றவர்கள் கருத்து என்ன அன்பானவர்களே!
-- Edited by SUNDAR on Monday 3rd of August 2026 10:12:43 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)