(எனது வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை தொடர்ந்து எழுதுகிறேன். மீண்டும் சொல்கிறேன் உண்மையில் நடந்து நான் பார்த்து அனுபவித்த உண்மை சம்பவங்களுக்கு வேத விளக்கங்கள் எதுவும் என்னால் கொடுக்க முடியாது. நம்பினால் நம்புங்கள் நம்ப வில்லை என்றால் விட்டுவிடுங்கள். என்னை யாரும் நம்பவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தேவையற்ற பதிவுகள் வந்தால் உடனே நீக்கப்படும்)
மும்பையில் வந்து சில நாட்களே ஒழுங்காக வேலைக்கு சென்றேன். மீண்டும் ஒருநாள் என் கண்கள் திறக்கபடவே ஆவிக்குள்ளானேன். இரவெல்லாம் எங்குபோனேன் எங்கு அலைந்தேன் என்பதே தெரியாமல் மும்பையில் பல இடங்களில் சுற்றி விட்டு, குழப்பமாகி ஒன்றுமறியாத ஒரு நிலையில் வீடு வந்து சேர்ந்தேன்.
நான் இப்படி ஆனது இது இரண்டாவது முறை ஆகையால் எனக்கு பழக்கமானவர்களும் உறவினர்களும் என்னை பார்க்கவந்து ஒரு மரண வீட்டில் வந்து அனுதாபப்படுவது போல் என்னை பார்த்து அனுதாபப் பட்டு சென்றனர். "ஐயோ பாவம் எப்படி இருந்த மனிதன்" என்று எல்லோரும் சொல்வது என் காதில் கேட்கிறது. நானும் அவர்களை பார்க்கிறேன் அவர்கள் எனக்கு நன்றாக தெரிந்தவர்கள் தான். ஆனால் இந்த உலகத்தின் என்னநடக்கிறது என்று அறியாமல் என்னை பார்த்து அனுதாபப்படும் அவரிகளிடம் என்னால் எதுவும் சொல்லவோ பேசவோ முடியாது. அப்படி பேசினாலும் அவர்களுக்கு எதுவும்புரியாது. நான் மீண்டும் ஒரு குழந்தை போல ஆனேன். ஆனால் குழந்தைகூட சிரிக்கும் என்னால் சிரிக்கவும் முடியாது பேசவும்முடியாது. அப்படியே திரு திரு என்று விழித்துக்கொண்டு அமர்ந்திருப்பேன் அனால் அங்கு நடப்பது எல்லாமே எனக்கு நன்றாக தெரியும். ஒவ்வொருவர் செய்யும் செயலும் எதற்க்காக செய்யப்படுகிறது என்று ஆவிக்குரிய நிலையில் எனக்கு புரிவதால், உலக நிலையில் என்னால் எதுவும் பேசமுடியாத ஒரு நிலைமைக்குள்ளானேன்.
மாரநாதா ஜெப வீட்டில் அடைக்கப்பட்டேன்.
மாரநாதா கிறிஸ்த்தவ சபையின் கிளைசபை ஒன்று மும்பை செம்பூரில் உள்ளது. எனது நிலையை கேள்விபட்டு அங்கிருந்து பலர் எனக்காக ஜெபிக்க வந்திருந்தனர். எனக்காக ஜெபித்த அவர்கள் தங்கள் சபையில் 40நாட்கள் உபவாசம் நடப்பதாகவும் அங்கு கொண்டு தங்க வைத்தால் என்னை சரியாக்கிவிடலாம் என்றும் சொல்லவே, என் மனைவி மற்றும் உறவினர்கள் உடனடியாக சம்மதித்துவிட்டார்கள். என்னை கொண்டுபோய் அந்த சபையில் தங்க வைத்து விட்டனர்.
அனேக நாட்கள் என்ன செய்கிறேன் என்றே தெரியாமல் ஒரு சிறை கைதியை போல அங்கே அடைக்கப்பட்டு இருந்தேன். அங்குள்ள கிறிஸ்த்தவ சகோதரர்கள் நான் சொன்ன எந்த கருத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் சொன்ன எந்தகருத்தும் அவர்களுக்கு புரியவும் இல்லை. மாறாக எனக்கு பேய் பிடித்திருக்கிறது என்று எண்ணி "நீ எங்கிருந்து வந்தாய்? ஏன் வந்தாய் என்று என்னை அதட்டி அதட்டி கேட்டு, முழங்காலில் நிற்கவைத்து "நீ உண்மையை சொல்லாவிட்டால் உன்கண்ணில் மெழுகுவர்த்தியை ஊற்றிவிடுவோம்" என்றெல்லாம் பயம் காட்டினார்கள். நான் மிகவும் பயந்துபோனேன் காரணம் என்னை என்ன செய்தாலும் கேட்பதற்கு அங்கு யாரும் இல்லை அங்குள்ள எல்லோரும் எனக்கு பேய்களாகவே தெரிந்தனர். "கர்த்தர் என்னை அபிஷேகித்தார்" என்று சொல்லி நான் பைபிளில் உள்ள அனேக வசனங்களை சுட்டிகாட்டி பேசிய எந்த பேச்சும் அவர் காதுகளுக்கு ஏறவே இல்லை. "கர்த்தர் இப்பொழுதெல்லாம் வரமாட்டார் அவர் பழைய ஏற்ப்பட்டில்தான் அபிஷேகித்தார்" என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட வழியில் டியூன் செய்யபட்டது போல் செயல்பட்ட அவர்களுக்கு அதற்க்குமேல் எதையும் கிரகிக்க முடியவில்லை. நடு இரவு நேரத்தில் என்னை மத்தியில் வைத்துகொண்டு எல்லோரும் என்னை சுற்றி சுற்றி வந்தார்கள் எனக்கோ பேய்கள்எல்லாம் சுற்றிசுற்றி நடனமாடுவதுபோல் தெரிந்தது.
எனக்கு மிகவும் கொடுமையாக இருந்தது ஆனால் பயந்துபோய் உள்ளேயே இருந்துவிட்டேன். எனக்கு அனேக நண்பர்கள் உண்டு. யாராவது என்னை பார்க்க வருவார்கள் அவர்களிம் நடந்ததை சொல்லி அங்கிருந்து தப்பித்துவிடலாம் என்று எதிர்பார்த்தேன் ஆனால் யாருமே வரவில்லை. ஒருநாள் மதியநேரத்தில் சர்ச்சில் உள்ளவர்கள் கொஞ்சம் அசந்து இருக்கும் போது இருந்த நிலையிலேயே வெளியில் ஓடினேன். ஆனாலும் அதை கவனித்துவிட்ட அவர்கள் என்னை விரட்டிக்கொண்டு
ஓடி வந்தனர். கொஞ்ச தூரம் ஓடியதும் திலக் நகர் ரோடு என்னும் இடத்தில் ஒருசிறிய முருகன் கோவில் உண்டு. அந்த கோவிலில் ஒரு பெரிய சிகப்பு துணியை கட்டி வைத்திருந்தனர். அந்த இடம் சாவு நடந்த ஒரு இடம்போல் இருந்ததால் ஏதோ ஒரு சக்தி என்னை தடுத்தது அதற்குமேல் என்னால் ஓட முடியவில்லை அங்கேயே நின்று விட்டேன். அதற்குள் எல்லோரும் வந்து என்னை பிடித்து திரும்ப உள்ளே கொண்டு அடைத்துவிட்டனர்.
பிறகு என்னால் தப்பிக்கவே முடியவில்லை. யாரும் என்னை கண்டு கொள்ளவில்லை எனது உறவினர்கள் யாரும் என்னை பார்க்க வந்தாலும்கூட என்னிடம் எதுவும் பேசுவது இல்லை. நான் என்ன சொன்னாலும் கேட்பதும் இல்லை. என்னை ஒரு மனுஷனாகவே மதிக்கவில்லை. சர்ச்சில் உள்ளவர்களிடம் மட்டுமே என்னைபற்றி விசாரிப்பார்கள். அவர்கள் ஏதாவது பதில் சொல்வார்கள் அதை கேட்டு விட்டு போய்விடுவார்கள்.
பல நாட்கள் அந்த சபையினுள் அடைக்கபட்டு கிடந்தேன் நான் மாம்ச நிலையில் இருக்காமல் ஆவிக்குரிய நிலையில் இருந்தேன். எரேமியா நிலவறையில் கிடந்ததைபோல அங்கு அனேக நாட்கள் அடைபட்டு கிடந்தேன். அங்கிருந்த எல்லோருமே கிறிஸ்த்தவர்கள்தான் ஆனால் அவர்கள் ஏதோ ஒரு ஆவியால் பீடிக்கபட்டு ஏதோ ஒரு இலைக்கை நோக்கி போவதுபோலேவே எனக்கு தெரிந்தது. அநேகர் எனக்கு பிசாசுகளாகவே தெரிந்தனர். அவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது என்பது மாத்திரம் தெளிவாக புரிந்துவிட்டதால் எனது நண்பர்கள் யாராவது என்னை மீட்க வருவார்களா என்று எண்ணி காத்திருந்தேன்.
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்...............
-- Edited by SUNDAR on Friday 3rd of February 2012 03:57:07 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கடைசியாக ஒருவழியாக நாற்பது நாள் உபவச ஜெபம் முடிந்து விட்டிருந்தது. அன்று பகல் எனக்கு மிகவும் வேண்டிய நல்ல கிறிஸ்தவ நண்பர் யோபு என்பவர் என்னை பார்க்க வந்தார்கள். அவரை பார்த்ததும் எனக்கு உயிரே திரும்பி வந்ததுபோல் இருந்தது. அவரிடம் உண்மையை சொல்லி எப்படியாவது அங்கிருந்து தப்பித்து விடலாம் என்று சிந்தித்துக் கொண்டு இருந்தபோது, நான் தங்கிஇருந்த சபையின் மூத்த பாஸ்டர் வேகமாக சபை வாசலுக்கு வந்து, சகோ. யோபு அவர்களை சபை உள்ளே கால் வைக்ககூடாது என்று தடுத்துவிட்டார். இருவரும் கார சாரமாக எதோ பேசிக் கொண்டனர் கடைசியில் "வெளிலே போடா பிசாசின் மகனே" என்று சொல்லி அந்த நண்பரை சபையின் பாஸ்டர் விரட்டி விட்டுவிட்டார். அந்த நண்பரும் என்னை பார்க்காமலேயே துக்கத்தோடு போய்விட்டார்.
மீண்டும் என்னுடய நம்பிக்கை எல்லாம் போய்விட்டது. ஆனாலும் எனது கிறிஸ்தவ (பாஸ்டர்) தம்பி தூத்துக்குடியில் இருந்து என்னை பார்க்க மும்பை வந்திருந்தான். அன்று பகலில் ஈஸ்டர் ஜெபம் நடந்து. அநேகர் சபையில் வந்து ஜெபத்தில் பங்கு கொண்டிருந்தனர் எனக்கு அங்கு நடக்கும் எல்லாமே ஏதோ ஆவிகள் உலகில் நடப்பது போல எனக்குதெரிந்தது. யாருமே மனுஷர்கள்போல எனக்கு தெரியவில்லை.
அவர்களுக்குள் இருந்து செய்லபடும் ஆவிகள் மட்டுமே எனக்கு தெரிந்தது.
ஜெபம் முடிந்ததும் என்னை சர்ச்சில் இருந்து என் தம்பியோடு சேர்ந்து அனுப்பிவிட்டார்கள் எல்லோரும் வீட்டுக்கு வந்துவிட்டோம். எங்கள் வீட்டில் வந்து நான் அமர்ந்திருக்கும் போது பலர் என்னை பார்க்க வந்தனர். எனக்கு வருபவர் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது அவர்களுக்கும் இந்த உலகில் உள்ள ஏதாவது ஒரு விலங்குக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதுபோல தெரிந்து கொண்டே இருந்தது. சிலருக்கு கழுதையுடனும் சிலருக்கு கோழியுடனும் சிலருக்கு பன்றியுடனும் இப்படி ஒவ்வொரு விலங்குகளுடனும் அவர்களுக்கு ஏதோ தொடர்பு இருந்தது எனக்கு காண்பிக்கப்பட்டது. நான் அவர்களை பார்த்து மிகவும் திகைத்துகொண்டிருந்தபோது அவர்களோ எனக்கு புத்தி சரியில்லாமல் ஆகிவிட்டது என்று வருத்தபட்டு பேசிக்கொண்டு இருந்தார்கள்.
நான் இன்னும் முழுமையாக சரியான சுய அறிவுக்கு வராததால், இனி என்னை மும்பையில் வைக்கக்கூடாது என்று அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து வீட்டில் இருந்த கொஞ்ச ஜாமான்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற ஜாமான்களை எல்லாம் எனது மனைவியில் அக்காள் வீட்டில் விட்டுவிட்டு, நாங்கள் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு என்னையும் என் மனைவியையும் அழைத்துக் கொண்டு என் தம்பி தூத்துக்குடி புறப்பட்டு விட்டான். மீண்டும் சென்னையை நோக்கி ரயில் பயணம். இந்த முறை இரயிலில் வரும்போதெல்லாம் நார்மலாகவே இருந்தேன். எந்த பிரச்சனையும் இல்லாமல் தூத்துக்குடி வந்து சேர்ந்து விட்டோம்..
ஊருக்கு வந்து ஓரிரு நாளில் என் மனைவியை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். எனது மனநிலை ஓரளவு சரியானதுபோல் இருந்தாலும் ஆனால் உடம்பில்உள்ள பலம் எல்லாம் போய்விட்டதால் சரியாக எழுந்து நடக்ககூட முடியாமல் சிலநாட்கள் படுத்தே கிடந்தேன். பின்பு ஒரு வாரத்தில் சரியான நிலைக்கு வந்து விட்டேன். அதன் பின்னர் சுமார் 4, 5 நாட்கள் கழித்து என் மனைவியின் ஊருக்கு போகலாம் என்று நினைத்து புறப்பட்டேன். நான் அங்குபோனது எனக்கு மிக கேடாக அமைந்தது.
நரகத்தில் விழுந்தேன்!
என் மனைவியின் ஊரானது களக்காடு ஏன்னு ஊருக்கு பக்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம். அங்கு ஓரிரு குடும்பத்தை தவிர மற்ற எல்லோருமே இந்துக்களே. நான் அங்கு போய் சேர்ந்ததுமே எனக்கு ஆவிக்குரிய விஷயங்களை அறியும் கண்களும் இருதயமும் மீண்டும் திறக்கபட்டு பல விதமான குழப்பங்கள் என்னை ஆட்கொண்டது. பல்வேறு அசுத்த ஆவிகள் மற்றும் இந்து சாமியின் ஆவிகள் அந்த ஊரில் குடிகொண்டு இருப்பது எனக்கு தெரியவந்தது. நான் அங்கு வந்தது பல ஆவிகளுக்கு பிடிக்கவில்லை. "உடனே இங்கிருந்து போய்விடும்படி என் மனதினுள் கட்டளை உண்டானதால் உடனே நான் அங்கிருந்து கிளம்பினேன். என் மனைவி எனது நிலையை அறிந்து என்னை தனியாக விட மனதில்லாமல் என் பின்னால் புறப்பட்டு வர ஆரம்பித்தாள். ஆனால் என் மனமோ இனி இங்கு நீ இருக்ககூடாது உடனே ஓடு என்று கட்டளை இட்டுக்கொண்டே இருந்ததால் கொஞ்சம் தூரம் ஓடினேன். என் மனைவியும் என்னவென்று எதுவும் அறியாமல் என்னுடன் சேர்ந்து ஓடி வந்தாள். அந்த கிராமத்தில் அநேகர் நின்று எங்களை வேடிக்கை பார்த்ததால் வேறு வழியின்றி திரும்ப வீட்டில் வந்து அமர்ந்துவிட்டேன்.
மீண்டும் ஆவிக்குரிய அனேக காரியங்களை பார்க்கும் நிலைக்கு திரும்பினேன். அப்பொழுது மதியம் 1 மணி நான் சரியான உலக நிலையில் இல்லாமல் தரையில் படுத்து கிடந்தேன். அப்பொழுது திடீர் என்று பூமி அப்படியே திறந்துகொள்ள, கீழ்நோக்கி சென்ற நான் நேராக ஒரு கொதிக்கும் எண்ணெய் போன்ற திரவம் உள்ள கொப்பரை உள்ளே போய் விழுந்ததாக தத்ரூபமாக உணர்ந்தேன். கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடப்பட்ட மனிதன் எப்படி துடிப்பனோ அதுபோல் பூமியில் கிடந்தது நான் மிக பயங்கரமாக துடித்தேன். என் ஆவியில் இந்த காரியங்களை உணர்ந்தாலும் உண்மையில் அந்த வேதனையை அப்படியே என் சரீரத்தில் உணர்ந்தேன். பலர் வந்து என் கை/காலை பிடித்து நிறுத்தமுயன்றும் அவர்களால் என்னை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கடுமையாக அங்கும் இங்கும் புரண்டு துடித்தததால் என் கை கால் எல்லா மற்றும் பல இடங்களிலும் அடிபட்டு இரத்தம் கொட்ட ஆரம்பித்தது.
(இதற்க்கு முன்னர் பாதாளம் என்னும் இடத்தினுள் சென்று வந்த நான் இப்பொழுது நரகம் என்னும் இடத்தினுள்ளும்
சென்றுவிட்டேன். இந்த இடங்கள் எல்லாம் பூமிக்கு அடியில் ஏதோ ஒரு ஸ்தானத்தில் இருப்பது உண்மை என்பதை நான் அனுபவபூர்வமாக அறிந்துகொண்டேன். சில ஆவிக்குரிய கிறிஸ்த்தவர்கள் நரக பாதாளத்தை பார்த்து வந்ததுபோல் அங்கு ஒரு பார்வையாளனாக நான் செல்லாமல், அந்த வேதனையை அனுபவிக்கும் ஒரு ஜந்துவாகவே நான் நான் சென்று வந்தேன்)
சுமார் 5-10 நிமிடங்கள் கொதிக்கும் திரவத்துக்குள் கிடந்தது கடுமையாக துடித்த நான், பின்னர் உணர்வின்றி மயங்கி விட்டேன். நான் கண் விழித்து பார்த்த போது எனக்கு பேய் விரட்ட ஆஞ்சநேயர் சாமியை கும்பிடும் ஒருவரை என் மனைவி வீட்டார் அழைத்து வந்திருந்தனர்.
கர்த்தருக்கு சித்தமானால் தொடரும்....
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"உலக நிலையில் இருந்த ஜனங்களை மட்டுமல்ல,கிறிஸ்தவர்களைகூட பேய் கூட்டங்களாக என் கண்முன்னே பார்த்தேன், சபைக்குள் இருந்தது எல்லாம் மனுஷர்களே அல்ல எல்லாம் பேய்களின் கூட்டங்களே" என்று சொன்ன பிறகு, எனக்குள் இருந்தது இதை உணர்த்திய அந்த மேன்மையான ஆவியானவர் யார் என்பதை புரிய முடியாமல் இருப்பது ஆச்சரியமே!
நான் எந்த கிரிஸ்தவனுக்க்காக இங்கு எழுதவில்லை. நமக்கு மீறிய சக்தி ஒன்றும் இல்லை நரகம் இல்லை பாதாளம் இல்லை என்று எண்ணிகொண்டிருக்கும் மனுஷர்களுக்ககவே இதை எழுதுகிறேன்.
இயேசுவையே பிசாசு பிடித்தவன் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளை ல்லாம் துன்புருத்திய உலகம்தானே இது! எனவே தங்கள் கூற்றில் ஆச்சர்யபட ஒன்றும் இல்லை.
-- Edited by SUNDAR on Thursday 25th of July 2013 04:03:24 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
முதலில் நடந்த உண்மை சம்பவங்களை அப்படியே எழுதிவிட்டு பின்னர் அதுதொடர்பாக தேவன் எனக்கு வெளிப்படுத்திய காரியங்களை குறித்து விளக்கமாக எழுதலாம் என்று கருதினேன். ஆனால் அதற்குள் சிலர் நியாயம்தீர்க்க துடிப்பதால் சிறு சிறு விளக்கமும் கொடுத்துவிட்டு எழுதலாம் என்று கருதுகிறேன்.
நான் மும்பையில் வாழ்ந்தபோது அதிகமாக பாவம் செய்திருந்தேன் அந்த பாவத்துக்கு எனக்கு கிடைக்ககூடிய தண்டனை என்னவென்பதை உணர்த்தவே தேவன் என்னை சில காலங்கள் குழப்பத்தில் ஆவியில் நடத்தியதோடு, அந்த நிலையில் நான் மரித்தால் நான் செல்லவேண்டிய இடமாகிய நரகம் மற்றும் நான் அனுபவிக்க வேண்டிய தண்டனைகள் எல்லாவற்றையுமே அப்படியே நான் உணரும் அளவுக்கு என் வாழ்வில் நடத்தி காட்டினார்.
ஏறக்குறைய தாவீது பாவம் செய்தபின் புலம்புவதுபோலவே என்னுடய வாழ்க்கையிலும் நடந்தது. கீழ்கண்ட வசனங்கள் எல்லாம் நான் அப்படியே அனுபவபூர்வமாக அனுபவித்து உணர்ந்துள்ளேன்.
ஒருமுறை என்னுடய இருதயம் அப்படியே மெழுகுபோல் இளகி என்னுடய வயிற்றுக்குள்ளாக ஓடுவதுபோல் அப்படியே உணர்ந்தேன்.
சங்கீதம் 22:14தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
அனேக தீமையானவர்களின் கைகளில் நான் விழநேர்ந்தது எல்லோரும் என்னை ஒரு மனுஷனாகவே நடத்தாமல் என்னை வேட்டை ஆடினார்கள்.
சங்கீதம் 40:12எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.
மூன்றுமுறை மரணத்தின் வாயில் வரை சென்று திரும்பினேன்
இப்படி எழுதிக்கொண்டே போகலாம். தாவீது தான் செய்த பாவத்துக்கு பெற்ற தண்டனையை காட்டிலும் அதிக தண்டனையை நான் அனுபவித்தேன் என்றே கூற வேண்டும்.
சங்கீதம் 71:20அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
என்ற வசனப்படி, பாதாளத்துக்கு போனவன் திரும்பி வரமுடியாது என்ற நிலை இருந்தாலும் கர்த்தர் என்னோடு இருந்ததால் மட்டுமே நான் மீண்டும் திரும்பி வர முடிந்தது.
-- Edited by SUNDAR on Thursday 9th of February 2012 04:17:38 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
பின்வரும் சங்கீதம் 22 இல் குறிபிடபடுகின்ற வசனங்கள்.,என் தேவனே என் தேவனே ஏன் என்னை கை விட்டீர் என கதறிய நம் இயேசு சிலுவையில் அனுபவித்த வேதனையை பற்றிய தீர்க்கதரிசனங்கள்..
தேவன் நம் அனைவரின் பாவத்தை சுமந்த பொது பட்ட வருத்தத்தை,வேதனையின் உச்சங்களை நம் சகோதரர் தனது சொந்த பாவத்தில் விழுந்த போது அனுபவித்ததாக கூறி உள்ளார்..
தாம் அனுபவித்த வேதனை மேற்கோள் காட்டின வசனங்களில் உள்ளதை காட்டிலும் அதிகம் எனவும் கூறியுள்ளார்.
என் தேவன் சிலுவையில் தொங்கிய போது அவரது மொத்த சரீர எடையையும் அவரது ஆணி பதிந்த கைகள் தாங்க வேண்டியதாயிற்று..
அவர் கால்களில் ஊன்றி மேல் எழும்பி,மேல் எழும்பி இறுதி மூச்சுகாற்றை சுவாசிக்க வேண்டியதாயிற்று..
சந்து,சந்தாக கிழிக்கப்பட்ட நம் எசுவானவர், தம் குடல்களுக்கு நடுவே அவர் தம் இருதயம் உருகி ஊற்றபட்டதை தீர்க்கதரிசியான தாவீது முன் அறிவித்தான்..
இந்த சொல்லொணா வேதனையை, தம் பாவத்தின் காரணமாக தானும் அனுபவித்ததாக நம் சகோதரரும் கூறுகிறார்..
நான் விளக்கி கூற கூட தேவை இல்லை பின் வரும் வசங்களை நீங்களே படியுங்கள்,.தேவன் நமக்காக பட்ட வேதனையை..கண்ணீர் பெருக்கெடுக்குமே!!
சங்கீதம் 22 அதிகாரம் --------------------------------------------------------------------------------
1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
2. என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
8. கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.
9. நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.
10. கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.
11. என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.
12. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.
13. பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.
14. தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
15. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.
16. நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
17. என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
18. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.
19. ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.
20. என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
21. என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
22. உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
23. கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.
24. உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
25. மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
26. சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
28. ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
29. பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.
30. ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
31. அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிறவர்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.
சகோதரர் சாதாரணமாய்,அவர் பட்ட வேதனையை என் தேவன் பட்ட வேதனைக்கு ஒப்பிடுகிறார்..
நாம் அவரவர் தம் தம் சிலுவையை எடுத்து கொண்டு தேவனை பின்பற்றவேண்டியவர்கள் தான்.. மாற்று கருத்தில்லை.. ஆனால்.,
இயேசுவின் பாடுகளில்,காயங்களில் பங்குள்ளவன் அடுத்தவர்களுக்காக அவைகளை தன சரீரத்தில் அனுபவிக்கவோ,தரித்து கொள்ளவோ முடியுமே தவிர தனது புத்தியீன பாவங்களால் அல்ல..
-- Edited by JOHN12 on Friday 10th of February 2012 03:38:15 PM
பின்வரும் சங்கீதம் 22 இல் குறிபிடபடுகின்ற வசனங்கள்.,என் தேவனே என் தேவனே ஏன் என்னை கை விட்டீர் என கதறிய நம் இயேசு சிலுவையில் அனுபவித்த வேதனையை பற்றிய தீர்க்கதரிசனங்கள்..
என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அப்படியே இத்திரியில் எழுதுகிறேன். "அந்நேரம் ஒருவர் என்னை வேகமாக அறைந்துவிட்டார்" என்று நான் எழுதினால் அதற்க்கு வசன ஆதாரம் வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்க்கு நான் "எரேமியா தீர்க்கதரிசியை பஸ்கூர் அடித்தான்" என்று வசன ஆதாரம் சொன்னால், அது எரேமியாவை பற்றிதான் கூறுகிறது உன்னை அடித்ததற்கு வசன ஆதாரம் எங்கே? என்று கேட்டால் நான் எங்கிருந்து வசன ஆதாரம் சொல்லமுடியும்?
இதுபோல கருத்துடன் வேதத்தை பார்த்தால் வேத புத்தகத்தில் உள்ள அனேக வார்த்தைகளை யாரை பார்த்தோ பேசியதுதான. இயேசு பேசியதில் அனேக வார்த்தைகள் சீஷர்களையும் அன்றைய யூதர்களையும் பார்த்துதான். பவுல் எழுதிய நிரூபங்கள் எல்லாம் அந்தத்த சபைகளுக்கு மட்டும்தான் எனக்கு இல்லை என்று எடுக்க வேண்டிவருமே.
வேத வார்த்தைகளின் மகிமை என்னவென்றால் என்றோ யாருக்கோ எழுதப்பட்டது இன்று நமக்கு அப்படியே பொருந்தும்.
எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன் யாரையோ பார்த்தோ சொன்ன ஒரு வேத வார்த்தை மூலம் தேவன் இன்றும் நம்மோடு
பேசமுடியும். இதை ஏற்பீர்கள் என்று கருதுகிறேன். அதே போல் நான் குறிப்பிட்ட வசனம் இயேசுவை பற்றிய தீர்க்கதரிசனம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்து எதுவும் இல்லை. ஆனால்அந்த வார்த்தைகள்போல் என்னுடய வாழ்வில் நடக்க வாய்ப்பில்லை என்று யாரும் மறுக்க முடியாது. இயேசுவின் வாழ்க்கையில் நடந்ததுபோல் எனக்கும் நடந்தது என்று எழுதுவதில் என்ன தவறு என்று புரியவில்லை. அவர் மொத்த மனுகுலத்தின் பாவத்துக்க்காகவும் வேதனை பட்டார். நான் என்னுடய பாவத்துக்காக அதுபோல் வேதனைபட்டேன் அவ்வளவே. இதன் மொத்த சாராம்சம் பாவம் தண்டனைக்குரியது என்பதே.
நடந்த உண்மையை எழுத சாட்சி எதுவும் தேவையில்லை என்று கருதுகிறேன். மேலும் "என்னை கண்டிப்பாக நம்புங்கள்" என்றுசொல்லி நான் யாரையும் கட்டாயப்படுத்தவும் இல்லை.
"தேவன் ஒருவர் இருக்கிறார் நமக்கு மீறிய சக்திகள் இந்த உலகத்தில் இருக்கிறது நரகம் பாதாளம் இருக்கிறது, தவறுக்கு தண்டனை இருக்கிறது நிர்விசாரமான வாழ்க்கை வேண்டாம்" என்பதை அறிவிக்கவே என்னுடய பாடுகளுடன் கூடிய இந்த அனுபவ கட்டுரையை எழுதுகிறேன்.
-- Edited by SUNDAR on Saturday 11th of February 2012 10:36:43 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
உண்மையை சொல்லனுன்னா எனக்கு இதைப் படிக்கும் போது ஒரு வித பய உணர்வு ஏற்படுகிறது ஏனென்று தெயவில்லை ஏதோ ஒன்றை இழந்த மாதிரியும் இருக்கு. ஏன் இப்படி ஒரு உணர்வு சொல்லுங்களேன் சகோதரரே ,
-- Edited by I am Follower of Jesus on Tuesday 10th of July 2012 06:46:30 PM
நடந்த எந்த ஒரு காரியமும் சாதாரணமானது அல்ல, சுமார் இருபது வருடங்கள் ஆகியும் எனக்குகூட நடந்த இந்த காரியங்களால் உண்டான பயம் இன்னும் முழுமையாக நீங்கவில்லையே.
தேவன் வெளிப்படுத்திய சில காரியங்களை நாம் கேட்கவோ அல்லது படிக்கவோ நேரிடும் போது பயம் அல்லது திகில் உண்டாவது என்பது புதிய காரியம் அல்ல. அது பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளுக்கு கூட உண்டான ஒன்றுதான்.
ஆபகூக் 3:2கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று;
எனவே ஆண்டவர் சில உண்மை நிலைகளை உங்களுக்கும் உணர வைத்திருக்கிறார் என்றே நான் அறிகிறேன்.
மேலும் "ஏதோ ஒன்றை இழந்த மாதிரியும் இருக்கு" என்ற தங்களின் வார்த்தைகளுக்கு அதற்க்கான காரணம் என்ன வென்பதை ஆவியானவரிடம் ஜெபித்து அறிய முற்ப்படலாமே. ஜெபித்து கேளுங்கள் அதன் உண்மை காரணம் தங்களுக்கு உணர்த்தப்படும்.
தங்களின் மனநிலைக்கு காரணம் எனக்கு தெரிந்திருந்தாலும் தாங்கள் தேவனிடமே கேட்டு உண்மையை அறியவேண்டும் என்ற நோக்கிலேயே ஜெபித்து கேட்டு உண்மையை உணரும்படி ஆலோசனை தருகிறேன். தாங்கள் அறிந்தவைகளை பதிவிடுங்கள் தங்களால் அறிய முடியாத
பட்சத்தில் அதற்க்கான உண்மையை கர்த்தருக்கு சித்தமானால் நான் தருகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நான் இந்த திரியில் எழுதியிருக்கும் எந்த ஒரு காரியமும் யாருக்கும் போதனையாகவோ அல்லது வேத வசனத்தின்படி நான் எழுதியது சரி என்று நிரூபிக்கும் நோக்கிலோ எழுதவில்லை.
நாம் வாழ்வில் நடக்கும் அனேக உண்மை காரியங்களுக்கு வசன ஆதாரம் இருக்க வாய்ப்பில்லை.
உதாரணமாக
"நான் தினமும் அரிசியால் செய்யப்பட்ட உணவை உண்கிறேன்"
"நான் தினமும் கணினியின் முன்னால் வேலை பார்க்கிறேன்"
"ஒரு பள்ளி குழந்தை விபத்தில் சிக்கி மரித்துபோனது"
"ஓடும் இரயிலில் தீபிடித்து பலர் மரித்து போனார்கள்"
இதுபோன்ற உண்மை சம்பவங்களுக்கு நேர் சரியான வசன ஆதாரம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அதற்காக அந்த சம்பவங்கள் உண்மை இல்லை என்றோ அல்லது அப்படி ஒரு காரியம் நடக்கவில்லை என்றோ "இதை நம்பமுடியாது, ஏற்கக்கூடாது" என்றோ ஆகிவிடாது. தேவன் புதிய காரியங்களை செய்ய வல்லவர்.
.
ஏசாயா 43:19இதோ, நான்புதியகாரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா?
இந்த திரியில் உள்ளவைகள் என் வாழ்வில் நான் கண்களால் பார்த்து கைகளால் தொட்டு இருதயத்தால் அறிந்த உண்மை சம்பவங்களையே இங்கு எழுதியிருக்கிறேன். நடந்த அனைத்தையும் வேத ஆதாரத்தின்படி உண்மை என்று நிரூபிக்கவும் நான் முயலவில்லை அதே நேரத்தில் உள்ளதை உள்ளது என்று எழுத எந்த தடையும் இருப்பதுபோல் எனக்கு தெரியவில்லை.
சுந்தர் அண்ணா ஆண்டவர் உங்கள் வாழ்க்கையில் காண்பித்த விடயங்களை எழுதுவதை யாருடைய கதையை கேட்டும் நிறுத்தி விட வேண்டாம். கர்த்தர் இவ்வளவு காரியங்களை உங்களுக்கு வெளிப்படுத்தியிருப்பாரானால் நிச்சயமாக உங்களிடமிருந் பெரிய பலனொன்றை எதிர்பார்க்கிறார். இதை நீங்கள் எவ்வளவு பேருக்கு தெரியப்படுத்த முடியுமோ அவ்வளவு பேருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
நீங்கள் கண்டதையும் கேட்டதையும் கூற வசன ஆதாரங்களை காட்ட வேண்டும் என்று யாரும் எதிர் பார்க்க முடியாது. ஆனால் உங்களால் முடிந்தளவு வசனத்தை இணைத்து கூறுங்கள். அப்போது பலர் நம்ப ஏதுாவகும்.
இதுவரை நான் எழுதிய நடந்த உண்மை சம்பவங்கள், பல கிறிஸ்த்தவர்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாகி பலர் என்னை மிகவும் மனமடிவாக்கி எழுதியதால் நீண்ட நாட்களாக நான் அதிகமாக எதுவும் எழுதாமல் நிறுத்தி வைத்துள்ளேன்.
உள்ளதை உள்ளது என்று எழுதகூட அனுமதி மறுக்கும் உலகம் இது!
இன்னும் முக்கியமாக உலகம் தோன்றியது முதல் இன்றுவரை நடப்பது என்ன எனது குறித்து தேவன் கொடுத்த விளக்கமான ஒரு பதிவுகூட எழுதவேண்டியுள்ளது.
பல சகோதரர்கள் தொடர்ந்து எழுதும்படி கேட்டுக்கொண்டுள்ளார்கள் கர்த்தரின் சிதத்துக்காக காத்திருக்கிறேன் விரைவில் தொடர்கிறேன்.
அன்புடன்
சுந்தர்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இந்த தொடரில் இன்னும் அனேக காரியங்கள் இருக்கிறது ஆனால் எனக்கு எழுத விருப்பமில்லை. தேவனின் இந்த நடத்துதலில் இருந்து அவர் எனக்கு கற்றுகொடுத்தது என்ன என்பதை மாத்திரம் சுருக்கமாக சொல்ல விரும்புகிறேன்.
நம் ஆண்டவராகிய இயேசு மரணத்தை ஜெயித்து, சதா காலங்களிலும் உயிரோடு இருக்கிறார்!
வெளி 1:18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்;
ஆம்! அவர் ஜெயித்ததொடு மட்டுமல்லாமல் நமக்கும் நித்திரையடையாமல் மரணத்தை ஜெயிக்கும் வழியை உண்டாக்கி கொடுத்துள்ளார்.
I கொரிந்தியர் 15:51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.
யோவான் 11:26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார் ஆம்! வசனம் சொல்லும் இந்த வார்த்தைகளை நாம் உறுதியாக விசுவாசிக்கிறோமா?
லூக்கா 24:25 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,... நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.மாற்கு 9:23 . மத்தேயு 8:13 பின்பு இயேசு........................... நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார்
ஆம்! நாம் என்ன விசுவாசிக்கிரோமோ அதுதான் நமக்கு நடக்கும் "எல்லோரும் செத்து போகிறார்கள் நானும் ஒருநாள் செத்து போவேன் என்று விசுவாசித்தால்/ அறிக்கையிட்டால் அதுதான் நடக்கும்"
வசனம் சொல்கிறதுபோல் "மரணத்தை ஜெயித்து நான் மருரூபம் ஆவேன்" என்று விசுவாசித்து அறிக்கை செய்தால் நிச்சயம் மரணத்தை ஜெயிக்க முடியும். இதுகுறித்து மேலும் வேத வசனத்துடன் விளக்கம் அறிய இங்கே சொடுக்கவும்:
http://victoryondeath.blogspot.in/
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் மீண்டும் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
இறைவன் / தேவன் / கடவுள் என்பவர் ஜீவனுள்ளவராக இன்றும் இருக்கிறார் என்பதை அனுபவ பூர்வமாக இயற்க்கைக்கு அப்பாற்படட விதத்தில் அறிந்த்து பற்றிய சாட்சி பதிவு இது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)